Saturday, March 31, 2012

ஜவ்வரிசி போண்டா

Posted On April 01,2012,By Muthukumar
தேவையானப்பொருட்கள்:

ஜவ்வரிசி - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
உருளைக்கிழங்கு (நடுத்தர அளவு) - 4
இஞ்சி விழுது - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
கடலை மாவு - 1/4 கப்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

ஜவ்வரிசியை, வெதுவெதுப்பான நீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

உருளைக்கிழங்கை, வேக வைத்து, தோலுரித்து, ந்ன்றாக மசித்துக் கொள்ளவும்.

ஊறிய ஜவ்வரிசியை, நீரை ஒட்ட வடித்து விட்டு, உருளைக்கிழங்கோடு சேர்க்கவும். அத்துடன், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு சேர்க்கவும். (காரமான போண்டா வேண்டுமென்றால், 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூளையும் சேர்க்கவும்). எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிது சிறிதாகக் கடலை மாவைத் தூவிப் பிசைந்துக் கொள்ளவும்.

பிசைந்த மாவை, எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணையைக் காய வைத்து, 4 அல்லது 5 உருண்டைகளாகப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

தக்காளி சாஸ் அல்லது கெட்ச்சப்புடன் பரிமாறவும்.

No comments:

Post a Comment