Sunday, January 31, 2016

கத்திரிக்காய் ரசவாங்கி

         கத்திரிக்காய் ரசவாங்கி

Posted By Muthukumar,On Jan 31,2016

KATHIRIKKAI RASAVANGI-RECIPE
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய்-1/4 கிலோ ( நீளவாக்கில் அரிந்தது);துவரம்பருப்பு-1/2 கப்; கருப்பு கொண்டக்கடலை-1/4 கப்; வெள்ளை கொண்டக்கடலை-1/4 கப்;  புளி-எலுமிச்சங்காயளவு;சாம்பார் பொடி-1 டீஸ்பூன்; வெல்லம்-2 டீஸ்பூன்; பெருங்காயம்- ஒரு சிட்டிகை; உப்பு-தேவையான அளவு.
அரைக்க:
தனியா-15 டீஸ்பூன்; சிவப்பு மிளகாய்-3; உளுத்தம்பருப்பு-1/2 டீஸ்பூன்; தேங்காய்த் துருவல்-1/3 கப்.
தாளிக்க:
எண்ணெய்-1/2 டேபிள் ஸ்பூன்;கடுகு-1/4 ¼ டீஸ்பூன்; வெந்தயம்-1/8 டீஸ்பூன்; கருவேப்பிலை-சிறிதளவு.
செய்முறை:
கருப்பு கொணடக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும். இல்லாவிட்டால், 3 மணி நேரம் வெந்நீரில் ஊறவைக்கவும்.  1 ½ கப் தண்ணீர் ஊற்றி, கருப்பு கொண்டக்கடலையையும், துவரம்பருப்பையும் 2 விசில் விட்டு ப்ரெஷர் குக்கரில் வேகவிடவும்.  வெள்ளை கொண்டக்கடலையை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும். புளியை 15 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்து சாறு எடுக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி மிதமான தீயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், அதில் தாளிக்கத் தேவையான பொருட்களைப் போட்டு பொறியவிடவும். பின்பு கத்திரிக்கயைப் போட்டு வதக்கவும். அத்துடன் வெள்ளைக் கொண்டக்கடலையையும் தண்ணீரும் சேர்த்து ஒரு மூடிபோட்டு மூடிவிடவும். வெள்ளைக் கொணடக்கடலை வேகும்வரை கொதிக்கவிடவும். வெந்ததும் புளித் தண்ணீரைச் சேர்க்கவும். அத்துடன், மஞ்சள் பொடி, உப்பு மற்றும் பெருங்காயம் சேர்க்கவும். வாணலியை மூடி  புளித் தண்ணீரின் பச்சை வாசம் போகும் வரை இன்னும் சற்று கொதிக்க விடவும். மற்றொரு வாணலியில்,சிவப்பு மிளகாய், தனியா விதைகள்  மற்றும் வெள்ளைக் கொண்டக்கடலையையும் சேர்த்து நன்றாக வறுக்கவும்.ஒரு தட்டில் கொட்டிவிட்டு, அதே வாணலியில் தேங்காய்த் துருவலைப் போட்டு லேசாக வறுக்கவும். ஆறியபின், எல்லாவற்றையும் போட்டு, தண்ணீர் சேர்த்து  கொறகொறப்பாக அரைத்து எடுக்கவும்.
வெந்திருக்கும் பருப்பு மற்றும் கருப்பு கொண்டக்கடலையையும் அரைத்து வைத்துள்ள பேஸ்டையும் வெல்லத்தையும் அடுப்பிலிருக்கும் கத்திரிக்காயுடன் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
கத்திரிக்காய் ரசவாங்கி தயார்.

Tuesday, September 29, 2015

ஓட்ஸ் இட்லி-செய்வது எப்படி?

Posted By Muthukumar,On Sep 29,2015
oats itli
தேவை:
முழு உளுந்து (வெள்ளை) -100 கிராம்; இட்லி ரவா-200 கிராம்; ஓட்ஸ்-50 கிராம்; உப்பு தேவைக்கேற்ப; தேவையான அளவு தண்ணீர்.
செய்முறை:
உளுந்தை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். இட்லி ரவையை 10 நிமிடம் ஊற வைக்கவும். உளுந்தை கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். இட்லி ரவையை 3 முறை கழுவி சுத்தம் செய்து, அதை உளுந்து மாவுடன் கலக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கவும். ஓட்ஸையும் மாவுடன் கலக்கவும். இந்த மாவுக் கலவையை 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். 8 மணி நேரம் கழித்து, மாவு புளித்ததும், நன்றாகக் கலக்கி விட்டு இட்லி தட்டுகளில் ஊற்றி அதன் மீது சிறிது ஓட்ஸைத் தூவி விடவும். 10 நிமிடம் வேக விட்டு எடுக்கவும். தேங்காய்ச் சட்னி அல்லது தக்காளிச் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Monday, August 31, 2015

உருளைக்கிழங்கு ஜிலேபி



என்ன‍ இது வித்தியாசமா இருக்கே இந்த உருளைக்கிழங்கு ஜிலேபி! – இந்த உருளைக் கிழங்கு ஜிலேபியை நீங்கள் செய்து வைத்தால்,
உங்கள் வீட்டு பொடிசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாருங்கள் உருளை கிழங்கு ஜிலேபி எப்ப‍டி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
 
உருளைக்கிழங்கு : 1/2 கிலோ 
தயிர் : 1 கப் 
ஆரோரூட் பவுடர் : 50 கிராம் 
எலுமிச்சம்பழம் : 1 சிறிது 
நெய் : 1/2 கிலோ 
சர்க்கரை : 1/4 கிலோ 
கு‌ங்கும‌ப் பூ – ‌சி‌றிது 
 
செய்முறை:
 
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலை உரித்து அத்துடன் ஆரோரூட் பவுடர், தயிர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். 
 
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சர்க்கரையை அதில் கொட்டி அடுப்பில் வைக்கவும். சர்க்கரை கரைந்து, பாகாகக் கொ தித்து வரும். பாகு இருகி வரும்போது குங்குமம்பூவை சிறிது தண்ணீரில் கரைத்து, அதில் ஊற்றி இறக்கவும். 
 
எலுமிச்சம் பழத்தை பிழிந்து, சாறை தனியாக வைத்துக் கொள்ளவும். வெள்ளைத் துணியின் நடுவில் ஒரு சிறு துவாரம் செய்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்யை ‌வி‌ட்டு காய்ந்ததும், பிசைந்துவைத்துள்ள கலவையை, துவாரம்செய்துள்ள துணிக்குள்வைத்து, முறுக் கு பிழிவது போல வட்டமாகப் பிழிய வேண்டும். 
 
முறுக்கின் இருபுறமும் சிவக்க வெந்து எடுத்து, தனியாக வைத்துள்ள சர்க்கரைப் பாகில் போடவும். பாகில் நன்றாக ஊறி யதும் எடுத்து ஒரு பாத்திரத்தில்போடவும். உருளைக்கிழங்கு ஜிலேபி ரெடி.

Saturday, July 18, 2015

மாங்காய் சாதம்

Posted By Muthukumar,On July 18,2015
MANGO RICE

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி-1 டம்ளர், மாங்காய்-2, மிளகய் வற்றல், பச்சை மிளகாய்- தலா 2; கடுகு, உளுந்து, கொண்டக்கடலை- தலா 1 தேக்கரண்டி; கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, மஞ்சள் பொடி, இஞ்சி, எண்ணெய், உப்பு.

செய்முறை;
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கொண்டக் கடலையைப் போட்டு தாளிக்கவும். அத்துடன், மஞ்சள் பொடி, தட்டிய இஞ்சி, நறுக்கிய மிளகய் வற்றல், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும். . துருவிய மாங்காய், உப்பு கலந்து, பச்சை வாடை போகும்வரை வதக்கவும். மற்றொரு பாத்திரத்தில் அரிசியை வேக வைக்கவும். மிதமான பதம் வந்ததும், வதக்கிய மங்காய்க் கலவையில் கொட்டி நன்கு கிளறவும். பக்குவம் வந்ததும் இறக்கி கொத்தமல்லித் தழையை மேலாகத் தூவிப் பறிமாறவும். மாங்காய் சீஸனுக்கு ஏற்ற சுவையான சாதம் இது.

கொத்துக்கறி இட்லி



கொத்துக்கறி  என்றாலேஅசைவ பிரியர்களின் நாவில் எச்சில் பெருகும். அந்தளவுக்கு விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய  கொத்துக்கறிவைத்து விதவிதமான உணவு வகைகளை செய்யலாம். இதில் மிக சுலபமாக செய்யக்கூடியது இந்த கொத்துக்கறி இட்லி
தேவையானவை:
கொத்துக்கறி  தேவையான அளவு
வெங்காயம் (நறுக்கியது ) – 1 கப்
தக்காளி (நறுக்கியது ) – 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ் ஸ்பூன்
சீரக தூள் – 1 டீஸ் ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 டீஸ் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ் ஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டுபொன்னிறமாகும் வரை வதக்கவும்.
இதனுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கொந்தன‌ கறியையும் போட்டு நன்றாக வதக்கவும்.
இந்த கலவையுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு சமைக்கவும், கொத்துக் கறி நன்றாக வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி கொத்த மல்லி மற்றும் கறிவேப்பிலை தூவி தனியே வைக்கவும்.
இட்லி தட்டில் சிறிதளவு மாவை ஊற்றி கொத்துக் கறி கலவையை அதன்மீது போடவும். பின்னர் இக் கொத்துக்கறி  கலவைமீது மீண்டும் சிறிதளவு மாவை ஊற்றவும் (மாவை ஊற்றும்போது கொத்துக்கறி  மசாலா வெளியே தெரியாதபடி பார்த்துக் கொள்ளவும்)
இந்த இட்லிகளை ஆவியில் வைத்து எடுத்தால் சுவையான கொத்துக்கறி இட்லி தயார். இட்லியையும், கொத்துக்கறி யையும் தனியாக சாப்பிடுவதை விட இவ்வாறு செய்து சாப்பிடும்போது சுவை அதிகமாக இருக்கும்.

Thursday, June 18, 2015

சிக்கன் மஞ்சுரியன்



ஓட்டல்களுக்குச் சென்றால் நான் விரும்பிச் சாப்பிடும் சிக்கன் வெரைட்டி, இனிப்பும் காரமும் குடைமிளகாய் வாசமும், சுவையும் கலந்த
இந்த சிக்கன் மஞ்சுரியன் தான்…
ஒரு நாளாவது அதை வீட்டிலேயே செய்துசாப்பிட வே ண்டும் என்ற நீண்டநாள் ஆசை இப்போதுதான் நிறை வேறியது… ‘’ஞான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’’ என்று வாழ்வோரல்லவா நாம்!!! 
தேவையானவை…
போன்லெஸ் சிக்கன் – ½ கிலோ
குடை மிளகாய்– 2 (அல்) 3 (உங்கள் ரசனைக்கேற்ப)
பெரிய வெங்காயம்–2 (அல்) 3 (உங்கள் ரசனைக்கே ற்ப)
தக்காளி சாஸ் – 2 அல்லது 3 குழிக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
பூண்டு (உரித்தது) – ஒரு கையளவு
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
மைதா மாவு – ஒரு கையளவு
சோள மாவு –  ஒரு கையளவு
முட்டை – 2
தயிர் –  ஒரு கப்
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
கேசரி பவுடர் –  ½ ஸ்பூன்
எண்ணெய் – 250 ML
செய்முறை

முதலில் சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்ட போன் லெஸ் சிக்கனை ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு பிசைந்து நன்றாக கழுவிக்கொள்ளலாம். (மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி என்பதால் எப்போது அசைவம் செய்தாலும் அதைக்கழுவும்போதே மஞ்சள் தூள் போ ட்டு பிசைந்து கழுவுவது ஆரோக்கியமான ஒன்று…)
உரித்த பூண்டை மெல்லிய சிலைஸ் சிலைஸாக வெட் டிக்கொள்ளலாம். சிக்கன் மஞ்சுரியனுக்கு வெங்காயத் தை யும் குடை மிளகாயையும் வெட்டும் முறை மிக முக்கியமானது. வெங்காயத்தை ஒவ்வொரு லேயராக உரித்து சதுர வடிவிலான துண்டுகளாக வெட்டிக் கொ ள்ளலாம். குடை மிளகாயையும் அவ்வாறே… பச்சை மிளகாயை உங்களுக்கு விருப்பமான விதத்தில் வெட் டிக்கொள்ளலாம்.

ஒருகிண்ணத்தில் ஒரு கையளவு சோள மாவையும், ஒரு கையளவு மைதா மாவையும் கொட்டி அதில் சிறி தளவு உப்பும், கேசரி பவுடரும் சேர்த்து அதன் மீது இர ண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை மட்டும் ஊற் றி பிசைந்து கொள்ளவேண்டும்.

இப்படிப்பிசைந்த கலவையுடன் இப்போது சிக்கன் துண்டுகளையும் போட்டு பிசைந்து கொள்ளலாம்.

இப்படிப்பிசைந்த சிக்கன் துண்டுகளை ஒரு வாணலி யில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்…

அதன்பிறகு ஒரு ஃப்ரை பேனிலோ இல்லை கடாயி லோ சிக்கனைப்பொறித்த எண்ணையையே ஒரு குழி க்கரண்டி விட்டு எண்ணைய் சூடானவுடன் முதலில் நறுக்கிய பூண்டுகளை போட்டு வதக்கவும். பூண்டு சிறி து வதங்கியதும் அதில் இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். அடுத்து அதில் நறுக்கிய வெங்காயத்துண்டுகளையும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும். அடுத்து அதனுடன் நறுக்கிய குடை மிளகாயை போட்டு வதக்கவும்.

இப்போது இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு, அரை ஸ்பூன் கேசரி பவுடர் ஆகியவற்றைப் போ ட்டு வதக்கவேண்டும். இது சிறிதளவு வெந்தவுடன் இதி ல் ஒரு குழிக்கரண்டி தக்காளி சாஸ் விட்டு வதக்கவும். அடுத்து இதில் ஒரு கப் தயிர் விட்டு தேவைப்பட்டால் சிறிது தண்ணீரும் விட்டு வதக்கவும்.

தயிர் இந்த வதங்கலில் நன்றாகக்கலந்து கரைந்ததும் ஏற்கனவே பொறித்தெடுத்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை இதில் கொட்டி நன்றாக வதக்கவும். பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வெந்தவுடன் மீண்டு ம் ஒருமுறை ஒரு குழிக்கரண்டி தக்காளி சாஸ் விட்டு வதக்கி இறக்கிவிட்டால் சிக்கன் மஞ்சுரியன் ரெடி…  (தேவைப்பட்டால் வெங்காயம் மற்றும் குடைமிளகா யை வதக்கும்போதே சோயா சாஸ்ம், சிறிது வினிகரு ம் சேர்த்து வதக்கலாம். இல்லையென்றாலும் பரவாயி ல்லை.)

அடுத்து?… அடுத்து என்ன சுவையான சிக்கன் மஞ்சுரி யனை உங்களுக்கு விருப்பமான விதத்தில் ஒரு வெட்டு வெட்டவேண்டியதுதான்…!!!


கொத்துக்கறி புலாவ்


அருமையான மிகவும் ருசியான, சமைக்க‍வும் கொஞ்சம் எளிதான அசைவ உணவு வகையொன்றை
நாம் பார்க்க‍விருக்கிறோம். இதோ கொத்துக்கறி புலாவ்
தேவையானவை
கொத்துக் கறி – அரைக் கிலோ
சாதம் – 2 கப்
வெங்காயம் – ஒன்று (நீளமாக நறுக்கவும்)
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
புதினா – கைப்பிடி
பச்சைமிளகாய் – 4 (நீளமாக நறுக்கவும்)
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய்
பிரிஞ்சி இலை
பட்டை
செய்முறை
குக்கரில் கொத்துக்கறியுடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1/4 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். சாதத்தை சிறிது உப்பு போட்டு உதிரியாக வடித்து வைக்கவு ம். ஒரு கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் நீளமாக நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் நறுக்கிய புதினா இலைகளை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் அதனுடன் வேக வைத்த கொத்துக் கறி  தேவைப்பட்டால் உப்பு போட்டு நீர் சுண்டும் வரை கிளறவும். கொத்துக் கறி கலவையுடன் வடித்த சாதத்தை சேர்த்து அதனுடன் சிறிது மிளகாய்த்தூளை போட்டு கிளறி இறக்கவும். சுவையான கொத்துக் கறி புலாவ் ரெடி. சூடாக பரிமாறவும்.