Friday, June 29, 2012

பூசணி மசால்

Posted On June 29,2012,By Muthukumar
ழக்கமான பொரியல், வறுவலைக் காட்டிலும் இது சற்று வித்தியாசமான துணைக் கறி. சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள ஏற்றது. உடல் இளைக்க வெள்ளைப் பூசணி சேர்த்துக் கொள்ள விரும்புகிறவர்கள் இதை செய்து சாப்பிடலாம். செய்முறை இதோ:

தேவையானவை:

பூசணிக்காய் - 1/2 கிலோ
சீரகம் - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
மிளகாய்த்துள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சமையல் எண்ணைய் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சைக்கொத்தமல்லி - சிறிதளவு
புதினா - சிறிதளவு

செய்முறை:

பூசணிக்காயின் தோலை சீவி விட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சிறிது சீரகத்தை பொரிய விடவும். சீரகம் பொரிந்ததும் பூசணிக்காய் துண்டுகளைப் போட்டு வதக்கவும். அத்துடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, அடுப்பை நிதானமாக எரிய விட்டு மூடி வைக்கவும். சீரகம் அரை ஸ்பூன் எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். பூசணிக்காய் வெந்ததும் அரிசி மாவை நன்கு வதக்கி பொடியாக நறுக்கிய பச்சைக் கொத்தமல்லி, புதினாவுடன் சீரகத்தூளையும் தூவி அடுப்பில் இருந்து இறக்கவும். இப்போது பூசணி மசால் ரெடி.

Thursday, June 28, 2012

சமையல் குறிப்பு – பேரீச்சை சட்னி

பேரீச்சை சட்னியை ட்ரை பண்ணிப் பாருங்க… வித்தியாசமாக அதேநேரத்தில் ரொம்ப சுவையாகவும் இருக்கும்….
தேவையான பொருட்கள்:
பேரீச்சை – கொட்டை நீக்கியது 5-6
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
துருவிய வெல்லம் – 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி – 1 டீ ஸ்பூன் 
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
உப்பு – 2 டீ ஸ்பூன்
செய்முறை:
* புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளு ங்கள்.
* பேரீச்சையை நன்றாக மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள். இதையும் சக்கை இல்லாமல் வடிகட்டிக் கொள்ளுங்கள்.
*அடிகனமான வாணலியில் வெல் லத்தை கரைத்துகொண்டு மணல் இல்லாமல் வடிகட்டி வையுங்கள்.
* வாணலியை அலம்பி விட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து புளித் தண்ணீரை விட்டு கொதிக்க ஆரம் பித்ததும், பேரிச்சை விழுதை விட்டு , வெல்லக் கரைசலையும் விடு ங்கள்.
* கொஞ்சம் கெட்டிப் பட ஆரம்பித் ததும், இதில் மிளகாய்ப் பொடி, பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்து வையுங்கள்.
* இதை பிரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
* வடஇந்திய உணவுகளுக்கு dressing ஆகவும், சமோசா போன்றவ ற்றிருக்கு sauce மாதிரியும் தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.

Wednesday, June 27, 2012

கீரை பக்கோடா

Posted On June 27,2012,By Muthukumar
கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் வைக்க ஏற்றது. சத்துமிக்க மாலை நேர டிபன் இது. இதோ செய்முறை:
தேவையானவை:
ஏதாவது ஒரு கீரை-சின்ன கட்டு
கடலை மாவு-1 கப்
அரிசி மாவு-1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு-தேவைக்கேற்ப
பச்சை மிளகாய்-2
இஞ்சி-சிறு துண்டு
சீரகம்-1/2 டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
ரீபைன்ட் எண்ணெய்-பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
கீரையை பொடியாக நறுக்கி அலசி ஒரு துணியில் விரித்து உலர வைத்துக் கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றுடன் இஞ்சி, பச்சை மிளகாய் அரைத்து போட்டு, அத்துடன் முந்திரிப்பருப்பு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இத்துடன் கீரையை சேர்த்து பக்கோடா மாவு தயாரிக்கவும். தண்ணீர் சேர்த்து பிசிறினாற்போல் உதிரியாக தயாரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காயவைத்து காய்ந்த எண்ணெயில் 2 டீஸ்பூன் பக்கோடா மாவில் விட்டு பிசிறி எண்ணெய் காய்ந்ததும் சிறிது சிறிதாக கிள்ளிப்போட்டு எடுக்கவும். சாப்பிட மிகவும் சுவையான சத்தான டிபன் இது.