Posted On Jan 22,2012,By Muthukumar
சுவையான சென்னா மசாலா செய்வதற்கான எளிய சமையல் குறிப்பு
தேவையான பொருட்கள்
சுவையான சென்னா மசாலா செய்வதற்கான எளிய சமையல் குறிப்பு
தேவையான பொருட்கள்
- சென்னா(வெள்ளைக் கொண்டைகடலை) – 50 கிராம்
- வெங்காயம் – 75 கிராம்
- தக்காளி – 75 கிராம்
- இஞ்சி – ஒரு துண்டு
- சீரகம் – 1 தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
- மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
- சென்னா மசாலா தூள் – 3 தேக்கரண்டி
- உப்பு – தேவைக்கேற்ப
- எண்ணெய் – 100 மில்லி
- மல்லித்தழை – ஒரு கொத்து
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- கரம் மசாலாத்தூள் – 1 தேக்கரண்டி
- வெள்ளைக் கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து பின்னர் குக்கரில் ஒரு விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
- தக்காளி, வெங்காயம், இஞ்சி, சீரகம், மல்லித்தழை ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். சிறிதாக நறுக்கிய வெங்காயம் 1 கப், அரைத்த விழுது ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு, வேக வைத்த கொண்டைக்கடலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் கரம் மசாலா, சென்னா மசாலா சேர்த்து சிறிது மல்லித்தழை, கறிவேப்பிலை ,சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
No comments:
Post a Comment