Sunday, January 31, 2016

கத்திரிக்காய் ரசவாங்கி

         கத்திரிக்காய் ரசவாங்கி

Posted By Muthukumar,On Jan 31,2016

KATHIRIKKAI RASAVANGI-RECIPE
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய்-1/4 கிலோ ( நீளவாக்கில் அரிந்தது);துவரம்பருப்பு-1/2 கப்; கருப்பு கொண்டக்கடலை-1/4 கப்; வெள்ளை கொண்டக்கடலை-1/4 கப்;  புளி-எலுமிச்சங்காயளவு;சாம்பார் பொடி-1 டீஸ்பூன்; வெல்லம்-2 டீஸ்பூன்; பெருங்காயம்- ஒரு சிட்டிகை; உப்பு-தேவையான அளவு.
அரைக்க:
தனியா-15 டீஸ்பூன்; சிவப்பு மிளகாய்-3; உளுத்தம்பருப்பு-1/2 டீஸ்பூன்; தேங்காய்த் துருவல்-1/3 கப்.
தாளிக்க:
எண்ணெய்-1/2 டேபிள் ஸ்பூன்;கடுகு-1/4 ¼ டீஸ்பூன்; வெந்தயம்-1/8 டீஸ்பூன்; கருவேப்பிலை-சிறிதளவு.
செய்முறை:
கருப்பு கொணடக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும். இல்லாவிட்டால், 3 மணி நேரம் வெந்நீரில் ஊறவைக்கவும்.  1 ½ கப் தண்ணீர் ஊற்றி, கருப்பு கொண்டக்கடலையையும், துவரம்பருப்பையும் 2 விசில் விட்டு ப்ரெஷர் குக்கரில் வேகவிடவும்.  வெள்ளை கொண்டக்கடலையை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும். புளியை 15 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்து சாறு எடுக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி மிதமான தீயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், அதில் தாளிக்கத் தேவையான பொருட்களைப் போட்டு பொறியவிடவும். பின்பு கத்திரிக்கயைப் போட்டு வதக்கவும். அத்துடன் வெள்ளைக் கொண்டக்கடலையையும் தண்ணீரும் சேர்த்து ஒரு மூடிபோட்டு மூடிவிடவும். வெள்ளைக் கொணடக்கடலை வேகும்வரை கொதிக்கவிடவும். வெந்ததும் புளித் தண்ணீரைச் சேர்க்கவும். அத்துடன், மஞ்சள் பொடி, உப்பு மற்றும் பெருங்காயம் சேர்க்கவும். வாணலியை மூடி  புளித் தண்ணீரின் பச்சை வாசம் போகும் வரை இன்னும் சற்று கொதிக்க விடவும். மற்றொரு வாணலியில்,சிவப்பு மிளகாய், தனியா விதைகள்  மற்றும் வெள்ளைக் கொண்டக்கடலையையும் சேர்த்து நன்றாக வறுக்கவும்.ஒரு தட்டில் கொட்டிவிட்டு, அதே வாணலியில் தேங்காய்த் துருவலைப் போட்டு லேசாக வறுக்கவும். ஆறியபின், எல்லாவற்றையும் போட்டு, தண்ணீர் சேர்த்து  கொறகொறப்பாக அரைத்து எடுக்கவும்.
வெந்திருக்கும் பருப்பு மற்றும் கருப்பு கொண்டக்கடலையையும் அரைத்து வைத்துள்ள பேஸ்டையும் வெல்லத்தையும் அடுப்பிலிருக்கும் கத்திரிக்காயுடன் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
கத்திரிக்காய் ரசவாங்கி தயார்.