Friday, March 30, 2012

சிக்கன் எக் பெப்பர் சாப்ஸ்

Posated On March 30,2012,By Muthukumar
மிக எளிதாக சமைக்க முடிந்த ருசியான உணவு பதார்த்தம் `சிக்கன் எக் பெப்பர் சாப்ஸ்.' நிறைய சத்துக்கள் நிறைந்த சிக்கனும், முட்டையும் சேர்வதால் சீக்கிரம் செரிமானம் ஆக பெப்பர் துணை புரிகிறது. கெட்டியான பதத்தில் சுவைக்க ஏற்ற இந்த குழம்பை செய்து ருசிப்போமா?
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
முட்டை - 4
சாம்பார் வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 6 பல்
காய்ந்த மிளகாய் - 4
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை
* சிக்கனைச் சுத்தம் செய்யவும். முட்டையை வேக வைத்து இரண்டாக வெட்டி மஞ்சள் கருவை நீக்கி விடவும்.
* தனியா, மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, வெங்காயம் இவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
* அரைத்த மசாலாவை சேர்க்கவும். சிக்கனைச் சேர்த்து சிறிது நீர் ஊற்றி வேக விடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
* சிக்கனும் மசாலாவும் சேர்ந்து கெட்டியானதும், வெட்டி வைத்த முட்டையைச் சேர்த்துக் கிளறவும்.
* குறைந்த தீயில் இந்த சாப்ஸை வைத்து சில நிமிடங்கள் கழித்துக் கிளறி இறக்கவும்.

No comments:

Post a Comment