Saturday, March 31, 2012

தக்காளி சாதம்

Posted On April 01,2012,By Muthukumar
விருந்தின்போது ஸ்பெஷலாக ஒரு சாதம் தயாரிக்க விரும்பினால் அதற்கு தக்காளி சாதமே ஏற்றது. சூடாக தக்காளி சாதம் தயாரித்து வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறுங்கள்.
செய்முறை இதோ:
தேவையானவை
பாஸ்மதி அரிசி - 2 டம்ளர்
தக்காளி - கால் கிலோ
வெங்காயம் - 2
தேங்காய் - ஒரு மூடி
பூண்டு - 10 பல்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
நெய் - அரை கப்
புதினா - கைப்பிடி அளவு
கொத்தமல்லி - கைப்பிடி அளவு
பட்டை கிராம்பு ஏலக்காய் - தேவையான அளவு
செய்முறை
மீடியம் சைஸ் குக்கரில் நெய்யை ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வெடிக்க விடவும்.
இஞ்சி பூண்டு இரண்டையும் தட்டி வைத்துக் கொள்ளவும். நீளவாக்கில் வெங்காயம் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை நறுக்கி தனியே வைத்துக் கொள்ளவும். புதினா, மல்லியை சுத்தம் செய்து கொள்ளவும். பட்டை கிராம்பு வெடித்ததும் வெங்காயம் பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு புதினா மல்லி எல்லாவற்றையும் போட்டு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
இத்துடன் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்க்கவும். ஒரு மூடி தேங்காயை மிக்சியில் அடித்து கையால் நன்றாகப் பிழிந்து 2, 3 தடவை பால் எடுக்கவும். பாலுடன் தண்ணீர் சேர்த்து 4 கப் அளந்து குக்கரில் விட்டு தாளித்த சாமான்களுடன் அரிசியையும் போட்டு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிடவும். குக்கரை மூடி ஆவி வந்ததும் வெயிட் போட்டு 2 சத்தம் வந்ததும் எடுத்து விடவும். சூடான தக்காளி சாதம் ரெடி. இறக்கி வைத்து பதினைந்து நிமிடங்கள் கழித்தே குக்கரை திறக்கவும். வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறலாம்.

ஆட்டு மூளை பொரியல்

Posted On April 01,2012,By Muthukumar
ஆட்டு மூளையா… எப்டியிருக்கு மோ-னு யோசிக்கிறீங்களா…? செய்து சாப்பிட்டுபாருங்களே ன்.. ருசி பிரமாதமாயிருக்கும். அதுமட்டுமி ல்லங்க, ஆட்டு மூளையில் கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு. அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கச டுகளை சுத்தம் பண் ணுவதால் உடலுக்கு இது மிகவும் நல்லது. நீங்களே ட்ரை பண்ணிப் பார்த் துட்டு சொல்லுங்க……….
தேவையான பொருள்கள்:
ஆட்டு மூளை – 2
மிளகாய்தூள் – 1-1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
வெங்காயம் – 1/2 கப்
சோம்பு – 1/2 ஸ்பூன்
எண்ணைய் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
* ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும்.
* அடிக்கடி மூளையைப் புரட்டி போட வேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும்.
* மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வை க்கவும்.
* பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக் கவும்.
* வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண் ணைய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங் காயத்தைப் போடவும்.
* பொன்னிறமாக சிவந்தவுடன் மூளையை இந்த மசாலாவுடன் சேர்த் து மிகவும் மெதுவாக கிளறவேண்டும்.
* நன்றாக சிவந்தவுடன் இறக்கி பறிமாறலாம்.

புடலங்காய் மசாலா அடைத்த கறி

Posted On April 01,2012,By Muthukumar
இந்த கறியில் வெவ்வேறு விதமான மசாலைக்களை அடைத்து செய்யலாம். உருளைக்கிழங்கு மசாலா அல்லது காய்கறி மசாலா போன்றவற்றையும் சேர்த்து செய்யலாம். சாதாரணமாக இதில் தேங்காய், வெங்காயம் ஆகியவற்றை வதக்கி அடைத்து செய்வார்கள். நான் இதில் பருப்பு உசிலி சேர்த்து செய்துள்ளேன்.

தேவையானப்பொருட்கள்:


நீள புடலங்காய் - 1
துவரம் பருப்பு - 1/2 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2 முதல் 3 வரை
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
எண்ணை - 3 to 4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பருப்பு உசிலி செய்ய:

துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதை நன்றாகக் களைந்து, நீரை வடிகட்டி விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக (மசால் வடைக்கு அரைப்பது போல்) அரைத்து எடுக்கவும். அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 7 முதல் 10 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுத்து ஆற விடவும். ஆறிய பின் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பைப் போட்டு சிறிது நேரம் கிளறி விடவும். பின் தேங்காய்த்துருவலைப் போட்டு மீண்டும் சில நிமிடங்கள் கிளறி இறக்கி வைக்கவும்.

புடலங்காயில் அடைக்க:

இதற்கு நீள வகை புடலங்காய் தேவை. அப்பொழுதுதான் ஒரே மாதிரியான துண்டுகள் போட முடியும்.

புடலங்காயைக் கழுவி, 2 அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும். ஒரு டீஸ்பூனால், ஒவ்வொரு துண்டுகளின் உள்ளே இருக்கும் விதை மற்றும் நாரை நீக்கி விடவும்.

ஒரு பாத்திரத்தில் 5 அல்லது 6 கப் தண்ணீரைக் கொதிக்க விடவும். நீர் நன்றாகக் கொதிக்கும் பொழுது அதில் சிறிது உப்பு மற்றும் சில துளி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து, புடலங்காய்த் துண்டுகளைப் போடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 2 நிமிடங்கள் கழித்து, புடலங்காய் துண்டுகளை எடுத்து விடவும். சிறிது நேரம் கொதிக்க விட்டால் போதும். காய் அதிகம் வெந்து, நிறம் மாறி விடக்கூடாது.

ஒவ்வொரு துண்டிலும் கொள்ளுமளவிற்கு பருப்பு உசிலியைத் திணித்து வைக்கவும். மீதமிருக்கும் அல்லது சிறிது உசிலியை தனியாக எடுத்து வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சிறிது எண்ணை தடவி, சூடானதும், புடலங்காய்த்துண்டுகளை பக்க வாட்டில் அடுக்கவும். சுற்றி 2 அல்லது 3 டீஸ்பூன் எண்ணை விடவும். மிதமான தீயில் மூடி வைத்து வேக விடவும். மூடியை எடுத்து விட்டு காயை திருப்பி விட்டு வேக விடவும். காய் நிறம் மாற தொடங்கியதும், கல்லிலிருந்து எடுத்து வேறொரு தட்டில் அடுக்கி, அதன் மேலே, தனியாக எடுத்து வைத்துள்ள உசிலியைத் தூவி விடவும்.

கீரணிப்பழம்

Posted On April 01,2012,By Muthukumar

கோடை நெருங்கி விட்டது. சென்னையின் மூலை, முடுக்கெல்லாம் "தர்பூசணி", "முலாம் பழம்" "கீரணிப் பழம்" என்று குவிந்து கிடக்கும் இந்த பழங்கள், கோடைக்கேற்ற, குளிர்ச்சியான பானங்கள் தயாரிக்க மட்டுமன்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. "மெலன்" என்று பொதுவாக ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்தப் பழங்கள் வெவ்வேறு வகையான வடிவத்திலும், வண்ணத்திலும் கிடைக்கிறது. அதில் ஒரு வகைதான் "கீரணிப் பழம்". இது உடற்சூட்டைத் தணித்து, களைப்பைப் போக்க வல்லது. நெஞ்செரிச்சலை நீக்க உதவும். இதில் விட்டமின் "A", "B" மற்றும் பொட்டாசியமும் உள்ளது. ஆயுர்வேதத்தில், சிறுநீரகக் கோளாறு, மலச்சிக்கல், வாய்வுக் கோளாறு, குடற்புண் ஆகியவற்றை சரிசெய்ய, இந்தப் பழம் பரிந்துரைக்கப் படுகிறது.

இதன் தோலை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டி, சிறிது சர்க்கரையைத் தூவி அப்படியே சாப்பிடலாம்.

அல்லது வெட்டிய துண்டுகளை மிக்ஸியில் போட்டு, தேவையான சர்க்கரையும், சிறிது தண்ணீரையும் சேர்த்து சாறாக்கி, குளிர வைத்துக் குடிக்கலாம்.

பாலைச் சேர்த்து மிக்ஸியில் அடித்து, "மில்க் ஷேக்" செய்தும் குடிக்கலாம்.

இத்துடன் சிறிது எலுமிச்சம் சாறு, இஞ்சி சாறு, தேன் கலந்தும் சாப்பிடலாம்.

ஜவ்வரிசி போண்டா

Posted On April 01,2012,By Muthukumar
தேவையானப்பொருட்கள்:

ஜவ்வரிசி - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
உருளைக்கிழங்கு (நடுத்தர அளவு) - 4
இஞ்சி விழுது - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
கடலை மாவு - 1/4 கப்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

ஜவ்வரிசியை, வெதுவெதுப்பான நீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

உருளைக்கிழங்கை, வேக வைத்து, தோலுரித்து, ந்ன்றாக மசித்துக் கொள்ளவும்.

ஊறிய ஜவ்வரிசியை, நீரை ஒட்ட வடித்து விட்டு, உருளைக்கிழங்கோடு சேர்க்கவும். அத்துடன், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு சேர்க்கவும். (காரமான போண்டா வேண்டுமென்றால், 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூளையும் சேர்க்கவும்). எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிது சிறிதாகக் கடலை மாவைத் தூவிப் பிசைந்துக் கொள்ளவும்.

பிசைந்த மாவை, எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணையைக் காய வைத்து, 4 அல்லது 5 உருண்டைகளாகப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

தக்காளி சாஸ் அல்லது கெட்ச்சப்புடன் பரிமாறவும்.

ஓட்ஸ் தோக்ளா

Posted On March 31,2012,By Muthukumar

தேவையானப்பொருட்கள்:

ஓட்ஸ் - 1 கப்
ரவா - 1/2 கப்
தயிர் - 2 கப்
கேரட் - 1
குடமிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1/2 கப்
கொத்துமல்லி சட்னி - 1/4 கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
ஈனோ ஃபுரூட் சால்ட் - 1 டீஸ்பூன்
சமையல் உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெறும் வாணலியில், ஓட்ஸையும், ரவாவையும் தனித்தனியாகப் போட்டு வறுத்தெடுத்து ஆற விடவும். ஆறியவுடன், இரண்டையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் தயிர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது நீரையும் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கலந்துக் கொள்ளவும்.

கொத்துமல்லி சட்னி செய்ய:

1 கப் நறுக்கிய பச்சைகொத்துமல்லி இலை, 1 அல்லது 2 பச்சை மிளகாய், ஒரு சிறு துண்டு இஞ்சி, 1/2 டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு, ஒரு சிட்டிகை சர்க்கரை, 2 அல்லது 3 சிட்டிகை உப்பு சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

கேரட்டை துருவிக் கொள்ளவும்.

இட்லி பானை/குக்கர் அல்லது ஒரு அகன்ற வாணலியில் 3 அல்லது 4 கப் தண்ணீரை கொதிக்க விடவும்.

ஓட்ஸ் மாவில் ஈனோ ஃபுரூட் சால்ட்டைப் போட்டு, அதன் மேல் ஒரு டேபிள்ஸ்பூன் நீரை விட்டுக் கலக்கவும்.

வட்டமான ஒரு கிண்ணம் அல்லது டிபன் பாக்ஸை எடுத்து அதில் சிறிது எண்ணையை தடவவும். மாவில் பாதியை அதில் ஊற்றவும். அதன் மேல் துருவி வைத்துள்ள கேரட்டில் பாதியை தூவவும். குடமிளகாய் துண்டுகளில் பாதியையும் தூவவும். 2 அல்லது 3 டீஸ்பூன் கொத்துமல்லி சட்னியை பரவலாக ஊற்றவும். பின்னர் மீதி மாவை அதன் மேல் ஊற்றவும். மீதமிருக்கும் கேரட்/குடமிளகாய் ஆகியவற்றை அதன் மேல் தூவி விடவும். சிறிது கேரட்/குடமிளகாயை அலங்கரிக்க தனியா வைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தை நன்றாக மூடி, கொதிக்கும் நீரின் நடுவே வைத்து, அந்த பாத்திரத்தையும்
மூடி வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆவியில் வேக விடவும். மாவு வெந்து விட்டதா என்று பார்ப்பதற்கு, ஒரு கத்தியை வெந்த மாவில் சொருகி, வெளியே எடுத்தால், கத்தியில் மாவு ஒட்டாமல் சுத்தமாக வர வேண்டும்.

பின்னர், மாவு வைத்துள்ள பாத்திரத்தை வெளியே எடுத்து, மூடியை திறந்து சற்று ஆற விடவும். ஆறியவுடன், ஒரு கத்தியால் இலேசாக நெம்பி விட்டு எடுத்து ஒரு தட்டில் போட்டு, துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதன் மேல் மீதமுள்ள கேரட், குடமிளகாயைத்தூவி, கொத்து மல்லி சட்னியுடன் பரிமாறவும்.

வெங்காய சட்னியும் இதற்கு பொருத்தமாய் இருக்கும்.

பீர்க்கங்காய் பருப்பு

Posted On March 31,2012,  By Muthukumar
தேவையானப்பொருட்கள்:

பீர்க்கங்காய் - 2 அல்லது 3 (நடுத்தர அளவு
பயத்தம் பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் - 2 முதல் 3 வரை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
 
தாளிக்க:
எண்ணை - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
 
செய்முறை:
 
பீர்க்கங்காயின் தோலை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
 
பயத்தம் பருப்பைக் கழுவி குக்கரில் போட்டு, அத்துடன் பீர்க்கங்காய் துண்டுகள், பச்சை மிளகாய் (இரண்டாகக் கீறி போடவும்), மஞ்சள் தூள் சேர்த்து, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, 2 விசில் வரும் வரை வேக விடவும்.
குக்கர் ஆவி அடங்கியதும், திறந்து உப்பைப் போட்டு மசித்து விடவும்.

கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

சூடான சாததுடன் பிசைந்து சாப்பிடலாம். காரக்குழம்பிற்கு தொட்டுக் கொள்ளவும் நன்றாக இருக்கும்.

நண்டு மசாலா

Posted On March 31,2012,By Muthukumar

ண்டு மசாலா என்றாலே நாவில் நீர் ஊறும். முறையான பக்குவத்தில் இதை தயாரித்தாலோ வாசனை ஊரைத் தூக்கும். செய்து சுவைக்கலாமா?
தேவையான பொருட்கள்
நண்டு - அரை கிலோ
வெங்காயம் - 100 கிராம் நறுக்கியது
தக்காளி - 100 கிராம் நறுக்கியது
பச்சைமிளகாய் - 4 கீறியது
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
தேங்காயë -அரை மூடி
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணைய் - தேவைக்கேற்ப
செய்முறை:
நண்டை சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காய் இஞ்சி, பூண்டு வாணலியில் வறுத்து அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்பு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.
அரைத்த தேங்காய் சேர்த்து நண்டையும் சேர்க்கவும். தண்ணீர் ஊற்றத் தேவையில்லை போதுமான உப்பு சேர்க்கவும்.
நண்டு, மசாலாவுடன் கலந்து வெந்து திக்காக வந்ததும் இறக்கிவிடவும்.

Friday, March 30, 2012

சமையல் குறிப்பு: வாழைப்பூ வடை

Posted On March 30,2012,By Muthukumar
வாழைப்பூ எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், நன்மை தரும் கொழுப்பு அமிலங்களும் உள் ளன. புரதச் சத்து நிறைந்த வழைப்பூவில் வைட்டமின் இ மற்றும் ப்ளேவனாய்டுகளும் காணப்படுகின்றன. அதனை எப்படி சமைத்துச் சாப்பிட்டா லும் மருத்துவ குணம் மாறு வதில்லை. எனவே கடலைப் பருப்புடன் சேர்த்து வடை செய்து சாப்பிடுவதன் மூலம் சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.
தேவையானப்பொருட்கள்:
வாழைப்பூ – 1
கடலைப்பருப்பு – 1 கப்
காய்ந்தமிளகாய் – 2
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
சோம்பு – 1 டீஸ்பூன்
இஞ்சி – ஒரு சிறு துண்டு
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கேற்றவாறு
எண்ணை – பொரிப்பதற்கு ஏற்ப எடுத் துக்கொள்ளவும்.
வடை செய்முறை:
கடலைப்பருப்பை, தனியாக எடுத்து மூன்று மணி நேரம் ஊற வை த்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற் றைப் பொடியாக நறுக்கிக் கொ ள்ளவும்.
வாழைப்பூவை, நறுக்கித் தண் ணீரில் போட்டு வைக்கவும். பின்னர் அந்த பூவை தண்ணீ ரிலிருந்து எடுத்து, ஒரு பாத்தி ரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு, வேறு சுத்தமான தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து ஒரிரு நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட்டு கீழே இறக்கி, நீரை ஒட்ட வடித்து விட்டு ஆறவிட வும். பின்னர் நன்றாக பிழிந்தெடுத்து, தனியாக வைத்துக் கொள் ளவும்.
ஊறவைத்துள்ள பருப்பை, நன்றாக அல சி, நீரை வடித்துவிட்டு, அத்துடன் காய்ந் த மிளகாய், இஞ்சி, சோம்பு, பெருங்காய ம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். பருப்பை வழித்தெ டுக்கும் முன்னர், வேகவைத்த வாழைப்பூ வைப் போட்டு ஓரிரு சுற்றுகள் சுற்றி எடுத்துக் கொள்ளவும். அத்துடன் நறுக்கி வைத்து ள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறி வேப்பிலை ஆகியவற் றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.
எண்ணையைக் காயவைத்து, மாவை வடையாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். சூடான சத்தான வாழைப்பூ வடை தயார். மாலை நேரத்தில் தேங்காய் சட்னியோடு சாப்பிட சுவையாக இருக்கும்.

சிக்கன் எக் பெப்பர் சாப்ஸ்

Posated On March 30,2012,By Muthukumar
மிக எளிதாக சமைக்க முடிந்த ருசியான உணவு பதார்த்தம் `சிக்கன் எக் பெப்பர் சாப்ஸ்.' நிறைய சத்துக்கள் நிறைந்த சிக்கனும், முட்டையும் சேர்வதால் சீக்கிரம் செரிமானம் ஆக பெப்பர் துணை புரிகிறது. கெட்டியான பதத்தில் சுவைக்க ஏற்ற இந்த குழம்பை செய்து ருசிப்போமா?
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
முட்டை - 4
சாம்பார் வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 6 பல்
காய்ந்த மிளகாய் - 4
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை
* சிக்கனைச் சுத்தம் செய்யவும். முட்டையை வேக வைத்து இரண்டாக வெட்டி மஞ்சள் கருவை நீக்கி விடவும்.
* தனியா, மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, வெங்காயம் இவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
* அரைத்த மசாலாவை சேர்க்கவும். சிக்கனைச் சேர்த்து சிறிது நீர் ஊற்றி வேக விடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
* சிக்கனும் மசாலாவும் சேர்ந்து கெட்டியானதும், வெட்டி வைத்த முட்டையைச் சேர்த்துக் கிளறவும்.
* குறைந்த தீயில் இந்த சாப்ஸை வைத்து சில நிமிடங்கள் கழித்துக் கிளறி இறக்கவும்.

சமையல் குறிப்பு – நெத்திலி மீன் குழம்பு

Posted On March 30,2012,By Muthukumar
நெத்திலிக் குழம்பை நேசிக் காத அசைவப் பிரியர்களே இரு க்க முடியாது. எளிதாக சமை த்து ருசியாகச் சாப்பிட ஏற்றது நெத்திலி மீன். சமைச்சு சாப் பிட்டு பாருங்க.. சும்மா கும்மு ன்னு இருக்கும். என்னங்க எங்க கௌம்பிட்டீங்க… நெத்திலி குழம்பு வைக்கதானே……
தேவையான பொருட்கள்:
நெத்திலி மீன் – 1/4 கிலோ
சின்ன வெங்காயம் – ஒரு கை அளவு
தக்காளி – 3
மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டீ ஸ்பூன்
தனியா தூள் – 3 டீ ஸ்பூன்
புளி – ஒரு எலுமிச்சை அளவு
எண்ணை – ஒரு குழிக்கரண்டி
கடுகு – ஒரு டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வெந்தயம் – ஒரு டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
* நெத்திலியை சுத்தம் செஞ்சுக்குங்க. எண்ணை ய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் ஆகிய வற்றை தாளிக்கவும்.
* வெங்காயத்தை பொன் முறுவலா வதக்கிட்டு, தக்காளியையும் போ ட்டு வதக்கணும்.
* பிறகு புளியைத் தேவையான அளவு தண்ணியில் கரைச்சு ஊத்தி, உப்பு போடுங்க.
* குழம்பு நல்லாக் கொதிக்கிறப்போ, கழுவி வச்ச நெத்திலி மீன்க ளைப் போட்டு, மீன்ல குழம்பு சேர்ந்ததும் இறக்கிடுங்க.
* காலைல வச்ச குழம்பை ராத்திரி சாப்பாட்டுக்கு சாப்பிட்டுப் பாரு ங்க. உலகத்தையே எழுதித் தருவீங்க.

சுண்டைக்காய் பச்சடி

Posted On March 30,2012,By Muthukumar
தேவையானவை
பிஞ்சு சுண்டைக்காய் - 1/2 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 4
புளி - நெல்லிக்காய் அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
எண்ணெய் - தாளிக்க
செய்முறை
* துவரம் பருப்பை சிறிது பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
* புளியை தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
* சுண்டைக்காயை இரண்டிரண்டாக நறுக்கவும். அல்லது அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும்.
* வாணலியில் சிறிது எண்ணெயை காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.
* தொடர்ந்து வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் சுண்டைக்காயை சேர்த்து வதக்கி அடுப்பை சிம்மில் வைத்து மூடி இரண்டு நிமிடம் வேக விடவும்.
* சுண்டைக்காய் வெந்ததும், தக்காளி, உப்பு, புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* பச்சை வாசனை போனதும் வெந்த துவரம் பருப்பைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். பச்சடி ரெடி.

வெந்தய மாங்காய்

Posted On March 30,2012,By Muthukumar
தேவையானப்பொருட்கள்:

மாங்காய் - 1
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

மாங்காயை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதில் மிளகாய்த் தூளைத் தூவி வைத்துக் கொள்ளவும்.

வெந்தயத்தை, வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, பொடித்துக் கொள்ளவும்.

வறுத்தெடுத்த வெந்தயப் பொடியையும், உப்பையும் மாங்காய் துண்டுகளுடன் கலக்கவும்.

ஒரு சிறு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், பெருங்காயத்தூளைச் சேர்த்து, உடனடியாக மாங்காய் துண்டுகளின் மேல் ஊற்றி நன்றாகக் கிளறி விடவும்.

ஓரிரு தினங்களுக்கு கெடாமல் இருக்கும். தயிர் சாதத்தினுடன் பரிமாற சுவையாயிருக்கும்.

கருப்பட்டி ஆப்பம்!

Posted On March 30,2012,By Muthukumar
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 200 கிராம்
புழுங்கல் அரிசி - 200 கிராம்
உளுந்து - 50 கிராம்
வெந்தயம் - 1தேக்கரண்டி
தேங்காய் - 1 மூடி
கருப்பட்டி - 400 கிராம்
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
உப்பு -தேவையான அளவு
செய்முறை: பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்தெடுத்த மாவுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கலக்குங்கள். அதோடு கருப் பட்டியைப் பாகு காய்ச்சி ஊற்றவும். கலக்கிய மாவை கரண்டியில் எடுத்து, தோசைக் கல்லில் வார்த்தெடுங்கள். சுவை மிக்க, புதுமையான கருப்பட்டி ஆப்பம் ரெடி. தொட்டுக் கொள்ள தேங்காய் பால் போதும்.

இந்திய இணைய சமையல் தளம்

Posted On March 30,2012,By Muthukumar
இணையத்தில் என்னதான் இல்லை! என்று பெருமையுடன் பேசு பவர்களுக்கு உரம் ஊட்ட அண்மையில் சுவையான தளம் ஒன்றினை நம் வாசகர் ஒருவரின் துணை யுடன் காண நேர்ந்தது. அனைத்து வகை உணவினைத் தயாரிக்க உதவிடும் அந்த தளத்தின் முகவரி http://www.recipesindian. com/. சைவ, அசைவ உணவு வகைகள் என அனைத்து வகைகளுக்கும் இதில் உணவினைத் தயார் செய்திடும் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இதன் வகைகளைப் படித்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறது. ரொட்டி, தின்பண்டங்கள், அரிசி உணவுப் பண்டங்கள், ஊறுகாய்கள், சட்னி, ஸ்வீட், சூப், சாலட், பசி எடுக்க வைக்கும் சூப், குடிக்க பானங்கள் எனப் பல பிரிவுகள் இந்த தளத்தில் அவற்றிற்கான லிங்க்குகளுடன் காத்திருக்கின்றன.
தென்னிந்திய உணவு பண்டங்களுக்கென உள்ள தளத்தில், தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களின் உணவு வகைகளைத் தயாரிப்பதற்கான பட்டியல் தரப்பட்டு செய்முறை விளக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொண்டாடப்படும் விழாக்களில் தயாரிக்க தனியான உணவுப் பண்டங்கள் கொண்ட தளம் ஒன்றும் தரப்பட்டுள்ளது. தீபாவளி, ஹோலி, கணேஷ் சதுர்த்தி என இது நீள்கிறது.
நான் டயட்டில் இருக்கிறேன். எனக்கு இது சரியாக வராதே என்று கூறுபவர்களுக்கு எனத் தனியே ஒரு பக்கம் உள்ளது. குறைந்த கலோரி உள்ள உணவுப் பண்டங்களை எப்படி, எந்த வகை தானியம், காய்கறி கொண்டு தயாரிப்பது எனவும் ஒரு பக்கம் உள்ளது. மைக்ரோ வேவ் அடுப்புதாங்க இன்றைக்கு நடைமுறை, இந்த ரெசிப்பியெல்லாம் சரியாக வருமா என்ற கேள்வி கேட்பவர்களுக்குத் தனியே மைக்ரோவேவ் அடுப்பில் உணவுப் பண்டங்களைத் தயாரிப்பது குறித்தான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இதிலும் சைவம், அசைவம் என பிரிவுகள் உள்ளன.
தங்கள் மகள்களைத் திருமணம் முடித்துக் கொடுக்கும் தென் மாவட்டங்களில் உள்ளவர்கள், முன்பு விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மகளிர் அமைப்புகள் வெளியிட்டுள்ள சமையல் நூல்களை வாங்கி, சீதனத்தோடு கொடுத்து அனுப்புவது வழக்கம். இப்போது இந்த தளக் குறிப்புகளை டவுண்லோட் செய்து "சிடி'யாகத் தரத் தொடங்கி உள்ளதாக, இந்த குறிப்பு குறித்து கோடி காட்டிய வாசகி எழுதி உள்ளார். அந்த வாசகிக்கு நன்றி. உங்கள் மகள் மணமுடித்துப் போனாலும், வேலை நிமித்தம் வெளிநாடு சென்றாலும், சமையலுக்கு அவர்களுக்கு உதவ இந்த தளம் நிச்சயம் உதவிடும் என்பது உறுதி. ஒருமுறை சென்று பார்த்தால், தினமும் உங்கள் சமையலை இதன் அடிப்படையில் தான் முடிவு செய்வீர்கள்.

சிக்கன் கட்லெட்


Posted On March 30,2012,By Muthukumar

தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
பச்சைமிளகாய் - 2 நறுக்கியது
வெங்காயம் - ஒரு கையளவு
ரொட்டித் தூள் - 25 கிராம்
முட்டை - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
மைதா - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை
* சிக்கனை தோல் நீக்கி எலும்பில்லாமல் வாங்கி சுத்தம் செய்யவும், பிறகு சிக்கனை வேக வைத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.
* உருளைக் கிழங்கை வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
* சிக்கன், உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சைமிளகாய், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி கனமாகத் தட்டவும்.
* இதை அடித்து வைத்த முட்டையில் முக்கி ரொட்டித் தூளில் போட்டுப் புரட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து சாப்பிடவும்.
குறிப்பு
* இதே உருண்டையை மைதா, மிளகுத்தூள், உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து திக்காக கரைத்து முக்கி ரொட்டித் தூளில் புரட்டி எண்ணெயில் பொரிக்கலாம்.
* இதே முறைப்படி மட்டன் கட்லெட்டும், அசைவத்திற்குப் பதிலாக காய்கறிகள் சேர்த்து வெஜிடபிள் கட்லெட்டும் தயார் செய்யலாம்.

Thursday, March 29, 2012

பருப்பு புளி மசியல்

Posted On March 30,2012,By Muthukumar

தேவையானப்பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/4 கப்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

புளியை ஊற வைத்துக் கரைத்து, தேவையான நீரைச் சேர்த்து ஒரு கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைக்கவும். துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை குக்கரில் போட்டு, பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் மிளகாயைக் கிள்ளிப் போடவும். அத்துடன் வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து தாளித்து அத்துடன் புளித்தண்ணீரையும், உப்பையும் சேர்த்துக் கொதிக்க விடவும். புளித்தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வேக வைத்துள்ளப் பருப்பை மசித்து சேர்க்கவும். மீண்டும் ஓரிரு வினாடிகள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்

சூடான சாதத்துடன் பரிமாறவும்.

அவலினிது

Posted On March 30,2012,By Muthukumar
அவலினிது
தேவையானபொருட்கள்:–
(அரிசி)
பழவகைகள்.:—-மாதுளை,கொய்யா,ஆப்பிள்,விதையற்ற திராட்சை,அன்னாசி,பப்பாளி,கமலா ஆரஞ்சு– போன்ற பலவகை பழத்துண்டுகள்(மாதுளை  முத்துக்கள் அளவிற்கு  நறுக்கி  வைத்துக்கொள்ளவேண்டும்.
முந்திரி, திராட்சை, பாதாம்,அக்ரூட்—போன்ற  பருப்பு  வகையறாக்களையும்  பொடியாக  நறுக்கிவைத்துக்கொள்ள  வேண்டும்.
தேன் 2 தேக்கரண்டி
துருவிய தேங்காய்  2 தேக்கரண்டி
வேர்க்கடலை அல்லது பொட்டுக்கடலை  பொடி ரவை போல் (நைசாக இருக்கக்கூடாது)
சர்க்கரை  தேவையான  அளவு.
செய்முறை:–அவல் ஒரு  டம்ளருக்கு  அரை டம்ளர்  பால்,(அ) தண்ணீர் சேர்த்து  10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.தேங்காய்ப் பால்  சேர்த்தால்  மிகவும்  ருசியாக இருக்கும். ஊறிய பிறகு  அவல்  பொல  பொல வென்று  இருக்கும்.
ஒரு  பெரிய பாத்திரத்தில் தயார்செய்த  அவலைப்போட்டு  அதில்  பொடியாக  நறுக்கிய  பழத்துண்டுகள்  மற்றும்    பருப்பு வகையறாக்களை   போட வேண்டும்.  துருவிய தேங்காய், கடலை  பொடி  போன்றவற்றைத் தூவ வேண்டும்.
தேவையான  அளவு  சர்க்கரை  சேர்க்க வேண்டும்.  தேன்  ஊற்றி
முள் கரண்டியால்  கலந்து  அப்படியே   சாப்பிடலாம்.  குளுகுளு கூழ்(ஐஸ் கிரீம்)   சேர்த்தும் ஜில்ல்ல்ல்ல்லென்றும்   சாப்பிடலாம்.

அடுப்பில்லா சமையல் கேரட் கீர்



Posted On March 29,2012,By Muthukumar

தேவையான பொருட்கள்:
பிஞ்சுக் கேரட் – 1/2 கி
தேங்காய் 1 [நடுத்தரம்]
வெல்லம் – தேவையான அளவு[200 கிராம்]
ஏலக்காய் -10
பச்சைக் கற்பூரம் -3 சிட்டிகை
தண்ணீர் – தேவையான அளவு



செய்முறை:
கேரட்டுகளை கழுவி சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்து சாறெடுக்கவும். தேங்காயையும் துருவி பாலெடுத்து, இரண்டையும் ஒன்றாக கலக்கவும்.அத்துடன் தேவையான அளவு வெல்லம், ஏலக்காய் பொடி, பச்சைக் கற்பூரம், தேவையான அளவு தண்ணீர் கலந்து பருகலாம்.
உடனே தயாரித்துக்கொடுக்கலாம். மிகச்சத்தான, சுவையான, ஆரோக்கியமான பானம்.

வெஜிடபில் கிளியர் சூப்[Vegetable clear soup]

Posted On March 29,2012,By Muthukumar

தேவையான பொருட்கள்: 
பெ. வெங்காயம் – 1
தக்காளி -1
காரட் – 1
உருளை – 1
கோஸ் -50 கிராம்
காளிபிளவர் – 4-5 florets
குடை மிளகாய் – 1
எண்ணெய் / வெண்ணெய் -1மேசைக்கரண்டி
தண்ணீர் -400மிலி
பால் -250மிலி
மிளகு தூள் – சிறிதளவு
பட்டை,இலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
* காய்கறிகள் அனைத்தையும் கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
*குக்கரில் எண்ணெய்/வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது சோம்பு,பட்டை,இலை போட்டு தாளித்து ,காய்களை போட்டு வதக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும்.
*ஆறியதும் மிக்சியில் போட்டு அரைக்கவும்.பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வடிகட்டவும்.
*வடிகட்டிய சூப்பை சூடு படுத்தி,அத்துடன் பாலை சேர்க்கவும்.தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூளை சேர்க்கவும்.
*விரும்பினால் சிறிது கொத்தமல்லி இலை மற்றும் புதினாவை பொடியாக நறுக்கி தூவளாம்.
*இப்பொழுது சுவையான ,சத்தான, லோ கலோரி சூப் ரெடி. இளஞ்சூட்டில் பருகினால் சுவையாக இருக்கும்.

Thursday, March 22, 2012

கீரை அடை

Posted On March 22,2012,By Muthukumar
தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
பச்சை பயறு - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 5 அல்லது 6
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
கீரை (எந்த வகை கீரையானாலும்) நறுக்கியது - 1 பெரிய கிண்ணம்
தேங்காய் பல்லு பல்லாக நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப
எண்ணை - தேவையான அளவு

செய்முறை:

அரிசி, பருப்பு அனைத்தையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து, கழுவி அத்துடன் உப்பு, மிளகாய், பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். வடை மாவை விட சற்று தளர இருந்தால் போதும். அதில் கீரை, தேங்காய் பற்கள் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பிலேற்றி,எண்ணை தடவி அதில் ஆரஞ்சு பழ அளவு மாவை எடுத்து வைத்து அடையாக தட்டவும். சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு வேக விடவும். ஒரு பக்கம் சற்று சிவந்ததும், திருப்பிப் போட்டு மறு பக்கமும் சிவக்க சுட்டெடுக்கவும்.

வெண்ணை/வெல்லம் அல்லது சட்னி சேர்த்து பரிமாறலாம்.

கொத்துமல்லி இட்லி

Posted On March 22,2012,By Muthukumar
தேவையானப்பொருட்கள்:

இட்லி மாவு - ஒரு கிண்ணம் (6 இட்லி செய்யுமளவிற்கு)
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
முந்திரிப்பருப்பு - சிறிது

அரைக்க:

பச்சை மிளகாய் - 1 அல்லது 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
நறுக்கிய பச்சை கொத்துமல்லி இலை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

கொத்துமல்லி இலை, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுது, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி இலை சிறிது ஆகியவற்றை மாவில் சேர்த்துக் கலந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரிப்பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுத்து, மாவில் கொட்டிக் கிளறி விட்டு, இட்லியாக சுட்டெடுக்கவும்.

முக்கனி ஹல்வா




தேவையான பொருட்கள்:
பலாப்பழச் சுளைகள்- 2 கப்; பப்பாளிப் பழத் துண்டுகள்-2 கப்; வாழைப்பழம்-2 கப்; சர்க்கரை-1 கப்; முந்திரிப் பருப்பு; பௌடர்- 4 தேக்கரண்டி:நெய்-1/2 கப்;  முந்திரிப் பருப்பு – 10:
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி, சூடானதும், அதில் மிக்ஸியில் அடித்த பழக்கலவையைப் போட்டு ஸ்டவ்வை ஸிம்மில் வைத்துக் கிளறவும். பிறகு அந்தக் கலவையில் சர்க்கரையைக் கலந்து கிளறி சற்று கெட்டியானதும், அதில் பால் பௌடரைக் கலக்கவும். பின்பு முந்திரிப்பை கொஞ்சம் நெய்யில் வறுத்துப் போட்டு க் கிளறி, பழக்கலவையில் மீதி நெய்யை சேர்த்துக் கிளறி இறக்கவும். லேசான சூட்டோடு சாப்பிட்டால், மிகவும் ருசியாக இருக்கும்.

Wednesday, March 21, 2012

கேழ்வரகு இனிப்பு அடை

Posted On March 22,2012,By Muthukumar

தேவையானப்பொருட்கள்:

கேழ்வரகு மாவு - 1 கப்
வெல்லம் பொடித்தது - 1/2 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த திராட்சை - ஒரு கைப்பிடி அளவு
நெய் - 4 முதல் 5 டீஸ்பூன் வரை

செய்முறை:

வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். வெல்லம் கரைந்தால் போதும், பாகு பதம் தேவையில்லை. வெல்லம் கரைந்ததும், அடுப்பிலிருந்து எடுத்து, வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லம் மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, கேழ்வரகு மாவை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். மாவு வெல்லத்துடன் சேர்ந்த்து, சற்று கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு அதில் காய்ந்த திராட்சை, தேங்காய்த்துருவல் ஆகியவற்றை வறுத்து மாவுடன் சேர்க்கவும். ஏலக்காய்த்தூளையும் சேர்த்து, கையில் சிறிது நெய்யைத் தடவிக் கொண்டு நன்றாகப் பிசையவும். பிசைந்த மாவை ஆரஞ்சு பழ அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மேற்கண்ட அளவிற்கு, 4 உருண்டைகள் கிடைக்கும்.

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி, சூடானதும், மாவு உருண்டையை கல்லின் நடுவே வைத்து, விரல்களால் வட்டமாகத் தட்டி, (கல்லில் வைத்துத் தட்ட கடினமாக இருந்தால், வாழை இலையிலோ அல்லது பிளாஸ்டிக் ஷீட்டிலோ சிறிது நெய்யைத்தடவி அதன் மேல் வைத்துத் தட்டி, பின்னர் அதைக் கல்லில் போட்டும் சுட்டெடுக்கலாம்) சிறிது நெய்யை அடையைச் சுற்றி ஊற்றி வேக விடவும். ஒரு பக்கம் சிவந்ததும், திருப்பிப் போட்டு மறு பக்கவும் சிவந்ததும், கல்லிலிருந்து எடுத்து வைக்கவும்.


Sunday, March 18, 2012

தேங்காய் மட்டன் கிரேவி

Posted On March 19,2012, By Muthukumar

தேங்காயில் உள்ள சத்துக்கள் ஏராளம். அதனால் தான் கிட்டத்தட்ட எல்லா குழம்புகளிலும் தேங்காயைச் சேர்க்கிறார்கள். குழம்புகளின் ருசிக்கும், மணத்துக்கும் உதவுவதில் தேங்காய் முதன்மையானது. மட்டனுடன் தேங்காய் மிகுதியாக சேர்த்து மணக்க மணக்க கிரேவி தயாரித்துப் பாருங்கள், ருசித்துச் சாப்பிடுவீர்கள்!

தேவையான பொருட்கள்

மட்டன் - 1/2 கிலோ
மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
தனியாத்தூள் - 4 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
கசகசா - 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 5 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 8
பட்டை - சிறு துண்டு
லவங்கம் - 3
பூண்டு - 6 பல்
வெங்காயம் - 2
தக்காளி - 2
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை

* சோம்பு, சீரகம், கசகசா, இஞ்சி இவற்றை அரைக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், தனியா தூள் மற்றும் சிறிது நீர் சேர்த்து மசாலா கலவையாக்கவும்.
* தேங்காய்த் துருவல், முந்திரியை விழுதாக்கவும்.
* வாய் அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். பூண்டு பல்லை நறுக்கிச் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.
* இப்போது மசாலா பொருட்களைச் சேர்க்கவும். சுத்தம் செய்த மட்டனைச் சேர்த்து 20 நிமிடங்கள் வேக விடவும்.
* பின்னர் தேங்காய் விழுதைச் சேர்த்து, ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.
* போதுமான நீர் ஊற்றி, உப்பு சேர்த்து குக்கரில் வைக்கவும். மட்டன், நன்கு வெந்து திக்கானதும் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

எள்ளு துவையல்

Posted On March 19,2012,By Muthukumar
தேவையானப்பொருட்கள்:

கறுப்பு எள்ளு - 4 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு
பூண்டுப்பற்கள் - 2
எண்ணை - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

எள்ளை சுத்தம் செய்து, வெறும் வாணலியில் போட்டு, வறுக்கவும். எள் வெடிக்க ஆரம்பித்ததும், ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.

அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பருப்பு சிவந்ததும் அதில் மிளகாய், பூண்டு, புளி ஆகியவற்றைப் போட்டு ஓரிரு வினாடிகள் வறுக்கவும். கடைசியில் தேங்காய்த்துருவலைப் போட்டு மேலும் ஓரிரு வினாடிகள் வதக்கி எடுத்து ஆற விடவும்.

பின்னர் எல்லாவற்றையும் மிகஸியில் போட்டு, உப்பு சேர்த்து அரைக்கவும். 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்தால் போதும். கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

எலுமிச்சம் சாதம் / தேங்காய் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். இட்லி/தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

ஓட்ஸ் கேசரி

Posted On March 18,2012,By Muthukumar

தேவையானப்பொருட்கள்:

ஓட்ஸ் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
பால் - 1 கப்
நெய் - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
கேசரி கலர் - சிறிது
ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை
முந்திரிப்பருப்பு - சிறிது
காய்ந்த திராட்சை - சிறிது

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, அதில் ஓட்ஸைப் போட்டு 2 முதல் 3 நிமிடங்கள் வரை வறுக்கவும். பின்னர் அதில் பாலை ஊற்றிக் கிளறி விடவும். மிதமான தீயில் கெட்டியாகும் வரை வேக விடவும். பின்னர் அதில் சர்க்கரை மற்றும் கேசரிக் கலரைச் சேர்த்துக் கிளறவும். 1 அல்லது 2 டீஸ்பூன் நெய்யை விட்டு, 2 முதல் 3 நிமிடங்கள் வரை விடாமல் கிளறவும்.

முந்திரிப்பருப்பையும், திராட்சையையும் சிறிது நெய்யில் வறுத்து கேசரியில் சேர்க்கவும். ஏலக்காய் தூளையும் அதில் தூவி, நன்றாகக் கிளறவும். கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் உருண்டு வரும் பொழுது, அடுப்பிலிருந்து இறக்கி, வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.

புல்ஸ் ஐ ஆப்பம்


புல்ஸ் ஐ
தேவையானவை
ஆப்பத்துக்கு
பச்சரிசி அரிசி  – அரை டம்ளர்
புழுங்கல் அரிசி – அரை டம்ளர்
அவல் – ஒரு மேசை கரண்டி
ஜவ்வரிசி – ஒரு தேக்கரண்டி
உளுந்து – ஒரு மேசைகரண்டி
உப்பு – முக்கால் தேக்கரண்டி
ஆப்ப சோடா – கால் தேக்கரண்டி
தேங்காய் – நான்கு பத்தை துருவியது
வெந்தயம் – ஒரு அரை தேக்கரண்டி

புல்ஸ் ஐக்கு
முட்டை – 3
மிளகு தூள்  - தேவைக்கு
உப்பு தூள் தேவைக்கு

செய்முறை
முதலில் இருவகை அரிசி  அவல் ,உளுந்து,ஜவ்வரிசி, வெந்தயத்தை முன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
தேங்காய் அனைத்தையும் சேர்த்து அரைத்து உப்பு சோடாமாவு போட்டு 8 மணி நேரம் புளிக்க விடவும்.
ஆப்ப ச்சட்டியை காயவைத்து வெங்காயத்தை பாதியாக அரிந்து ஃபோர்க்கில் குத்தி எண்ணை சிறிது விட்டு சுற்றிலும் தேய்க்கவும். அப்பதான் ஒட்டாமல் பிஞ்சி போகாமல் வரும்.
ஒரு குழிகரண்டி ஆப்பமாவை உற்றி சுழற்றி விடவும்.
ஒரு முட்டையை கலக்காமல் அப்படியே ஊற்றி மேலும் சிறியதாக சுழற்றிவிட்டால் வெள்ளை கருமட்டும் எல்லா மாவிலும் படும். பிறகு முடி போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்
நல்ல முக்கால் பாகம் வெந்து வரும் போது மிளகு உப்பு தூவி  இரக்கவும்.

எண்ணையில்லதா முட்டையுடன் சத்தான டிபன், குழந்தைகளுக்கு காரமில்லாமல் சாப்பிட நல்லதொரு டிபன் அயிட்டம்.
தேவைக்கு  இது போல் செய்து கொண்டு மீதிமாவில் பிளெயின் ஆப்பம் தேங்காய் , சப்ஜி, சட்னியுடன் செய்து கொள்ளலாம்.

ஆயத்த நேரம்: 12 மணி நேரம்
சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
பரிமாறும் அளவு : 3 நபருக்கு

பச்சை மிளகாய் பச்சடி

Posted On March 18,2012,By  Muthukumar

தேவையானப்பொருட்கள்:

பச்சை மிளகாய் - 6 முதல் 8 வரை
புளி - ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வெல்லம் பொடித்தது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வறுத்து பொடிக்க:

துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்
அரிசி - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு

தாளிக்க:

எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில், துவரம் பருப்பு, தனியா, அரிசி, பெருங்காயம் ஆகியவற்றை, ஒவ்வொன்றாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். சற்று ஆறியதும் கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

புளியை ஊறவைத்து, கரைத்து, தேவையான தண்ணீரைச் சேர்த்து, 2 கப் அளவிற்கு எடுத்து வைக்கவும்.

பச்சை மிளகாயை நீளவாக்கில் இலேசாகக் கீறிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். பச்சை நிறம் மாறி வெளிர் நிறம் வந்தவுடன் எடுத்து தனியாக வைக்கவும்.

அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் வெந்தயத்தைப் போட்டு வறுக்கவும். (கருகி விடாமல் பார்த்துக் கொள்ளவும்). அதில் புளித்தண்ணீரை விடவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். புளி நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்து விட்டு, அத்துடன் வெல்லத்தூள், பொடித்து வைத்துள்ள் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விடவும். மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் வதக்கி வைத்துள்ள மிளகாயைப் போடவும். மேலும் ஓரிரு வினாடிகள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

தயிர் சாதம் மற்றும் பருப்பு சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

மட்டன் நீலகிரி குருமா


Posted On March 18,2012,By Muthukumar
நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ருசியால் கட்டிப்போடும் சைடு டிஷ்களில் குருமாவும் ஒன்று. இந்த வாரம் நாம் நீலகிரி பாணியில் மட்டன் குருமா செய்யக் கற்றுக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
மட்டன் - 200 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம் (நறுக்கியது)
பட்டை - 2 கிராம்
லவங்கம் - 2 கிராம்,
ஏலக்காய் - 2 கிராம்
பச்சை மிளகாய் - 10 கிராம்
சோம்பு - 5 கிராம்
பூண்டு - 25 கிராம்,
இஞ்சி - 25 கிராம்
மிளகாய்த்தூள் - 10 கிராம்
தனியா - 15 கிராம்
தேங்காய் - 1/2 மூடி
கொத்தமல்லி - ஒரு கட்டு
எண்ணெய் - 50 மில்லி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
* இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை விழுதாக்கவும்.
* தேங்காய், பச்சைமிளகாய், கொத்தமல்லி இவற்றை தனியே அரைக்கவும்,
* மட்டனை சுத்தம் செய்து நறுக்கி, தயிரில் ஊற வைக்கவும்.
* கடாயில் எண்ணெயைக் காய வைத்து, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு போட்டுத் தாளிக்கவும்.
* வெங்காய விழுதை வதக்கவும். தக்காளியை வதக்கி ஏனைய மசாலா பொருட்களை சேர்க்கவும். நன்கு `பிரை` செய்யவும்.
* மட்டனை சேர்த்து அதனுடன் அரைத்த தேங்காய் கலவை விழுதைச் சேர்க்கவும். போதுமான உப்பு சேர்த்து குறைந்த தீயில் வேக வைக்கவும்.
* மட்டனை இறக்குவதற்கு முன் மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, கறி மசாலா தூள் சிறிதளவு சேர்த்து நன்கு கிளறவும்.
* நறுக்கிய கொத்தமல்லி இலையைத் தூவி அலங்கரிக்கவும்.
* சாதம், தோசைக்குத் தொட்டுக்கொள்ள இந்த குருமா சுவையாக இருக்கும். இதே முறைப்படி மட்டனுக்குப் பதிலாக சிக்கன், மீன், நண்டு இவற்றை பயன்படுத்தியும் குருமா செய்யலாம்.

எலும்பு சால்னா

Posted On March 18,2012,By Muthukumar

சைவ குழம்புகளில் சால்னா ருசியானது. ரசம் மற்றும் `சூப்` போல உறிஞ்சி சுவைத்துக் கொண்டே சாப்பிட வைத்துவிடும். எலும்புகளை மட்டும் சேர்த்து செய்யப்படும் சால்னா இன்னும் சுவையாக இருக்கும். செய்து சுவைக்கலாமா?
தேவையான பொருட்கள்
ஆட்டு எலும்பு - 1/2 கிலோ
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய்த் துருவல் - 1/4 மூடி அரைக்கவும்
வெங்காயம் - ஒரு கப் (நறுக்கியது)
எண்ணெய் - தாளிக்க
சோம்பு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை
* ஆட்டெலும்பைச் சுத்தம் செய்து கொள்ளவும்.
* எண்ணையைக் காய வைத்து சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* அடுத்து வெங்காயம், தக்காளி ஆகியவற்றை வதக்கவும், இதனுடன் எலும்பையும் சேர்த்து வதக்கவும்.
* மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறவும்.
* கடைசியாக தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு வேக விடவும். உப்பை சரி பார்க்கவும்.
* எலும்பிற்குப் பதிலாக குருமா காய்கறிகளைப் பொடியாக `கட்' செய்து வைத்து இதே முறைப்படி சால்னா தயாரிக்கலாம்.

சேமியா – காய்கறி கட்லெட்


Posted On March 18,2012,By Muthukumar
மாலை நேர டிபனுக்கு ஏற்றது `சேமியா வெஜ் கட்லெட்'. செய்து பாருங்கள், வித்யாசமான சுவையுடன் ரசித்துச் சாப்பிடுவீர்கள்.
தேவையானவை
வறுத்த சேமியா - ஒரு கப்
உருளைக் கிழங்கு - 2
காரட் - 1
பச்சைப் பட்டாணி - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறுதுண்டு
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
மக்காச்சோள மாவு - 1/2 கப்
கறி மசாலா தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
பிரெட் தூள் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
ரீபைண்ட் எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
* சேமியாவை 3 கப் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேகவிட்டு தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
* உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். காரட்டை துருவிக் கொள்ளவும்.
* சிறிது எண்ணையைக் காயவைத்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, புதினா, மல்லி சேர்த்து வதக்கவும்.
* நன்கு வதங்கியதும் துருவிய காரட், பட்டாணி சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்கவும். அத்துடன் மசித்த உருளைக் கிழங்கு, சேமியா, கறி மசாலா தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
* விரும்பிய வடிவில் கட்லெட்கள் தயாரித்து ஒரு கப் தண்ணீரில் கரைத்த மக்காச்சோள மாவில் நனைத்து பிரெட் தூளில் புரட்டி வைத்துக் கொள்ளவும்.
* காயும் எண்ணையில் பொரித்து சூடாக சாஸ் உடன் பரிமாறுவார்கள்.

Friday, March 16, 2012

செட்டிநாட்டு சமையல் -வரகு அப்பம்


Posted On March 16,2012,By Muthukumar
செட்டிநாட்டு சமையல் -வரகு அப்பம்

பண்டைய தமிழர்களால் அதிகளவில் உபயோகபடுத்தப்பட்ட சிறு தானியங்களின் பெயர்கள் கூட தற்போதைய தலை முறையினருக்கு தெரிவதில்லை.சிறுதானியங்களில் முக்கியமானது வரகு.இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உடகொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்ட நிலையிலும் செட்டிநாட்டுப் பகுதியில் சிறுதானியங்களில் பல விதமான பலகாரங்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
வரகு அரிசி,கோதுமையை விட சிறந்தது.இதில் நார்ச்சத்து அரிசி,கோதுமையை விட அதிகம்.வரகில் மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதால் ,இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. தானியங்களுடன் ஒப்பிடும்போது அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் புரதச் சத்து மற்றும் தாது உப்புக்கள் கொண்டதாகும். இது பைட்டிக் அமிலம் குறைந்தும் நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் பி வைட்டமின்கள் கொண்டதாகவும் உள்ளது.  இதனை அரிசிக்கு மாற்றாக உபயோகப்படுத்தி இட்லி,தோசை,ஆப்பம்,பனியாரம்,பொங்கல்,பாயாசம் என்று வகை வகையாக சமைத்து உண்ணலாம்.இப்பொழுது வரகு அப்பங்கள் செய்வது எப்படி என்று பார்ப்போம்.


வரகு வெல்ல  [இனிப்பு குழிப்]:
தேவையான பொருட்கள்:
வரகு -200கிராம்
வெள்ளை உளுந்து -50 கிராம்
தேங்காய் -1 கப் [துருவியது]
பூவன்பழம் -1
வெல்லம் -150கிராம்
ஏலக்காய் -3-5
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
வரகையும் உளுந்தையும் 1/2 ம்ணி நேரம் ஊறவைக்கவும்.பிறகு மேலே கொடுக்கப் பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கிரைண்டரில் போட்டு வழவழப்பாக தோசை மாவு பதத்திற்கு அரைத்தெடுக்கவும்.
இருப்புச்சட்டியில் எண்ணெய் ஊற்றி,காய்ந்ததும் ஒரு குழிக்கரண்டில் மாவை எடுத்து ஊற்றவும்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விடவும்.வெந்ததும் எடுத்து பரிமாற வேண்டியது தான்.அதிக எண்ணெய்யை விரும்பாதவர்கள் குழிப்பணியாரமாக ஊற்றி சாப்பிடலாம்.


 வரகு கார அப்பம்:
தேவையான பொருட்கள்:
வரகு -200 கிராம்
உளுந்து -50 கிராம்
தேங்காய் – 1 கப்
- 1துண்டு
பச்சை மிளகாய் -தேவையான அளவு
சின்ன வெங்காயம்- 15 [பொடியாக நறுக்கியது]
புளித்த மோர் -தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு.
செய்முறை:
வரகு மற்றும் உளுந்துடன் இஞ்சி,பச்சை மிளகாய்,தேங்காய்,உப்பு மற்றும் மோர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அரைத்தெடுக்கவும்.
இருப்பு சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு,கடுகு.சீரகம், போட்டு தாளித்து,நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கி மாவில் கொட்டவும்.பிறகு குழிப்பணியார சட்டியில் ஊற்றி எடுத்தால் சுவையான சத்தான வரகு குழிப்பணியாரம் ரெடி.மிளகாய் துவையலுடன் சாப்பிட்டால் சுவை தூக்கலாக இருக்கும்.

Friday, March 2, 2012

கேரட் பால் அல்வா

Posted On March 2,2012,By Muthukumar
குழந்தைகள் சத்தான உணவு சாப்பிட போராட்டம் செய்கிறார்களா? அவ்வப்போது கேரட் பால் அல்வா செய்து கொடுத்துப் பாருங்களேன். பால் குடிக்க மறுக்கும் குழந்தைகள்கூட இந்தப் பால் அல்வா விரும்பி சாப்பிடுவார்கள். அப்படியே அத்தியா வசிய ஊட்டச்சத்தான வைட்டமின் `ஏ` குழந்தைக்கு கிடைத்த மாதிரி இருக்கும். செய்முறை இதோ...
தேவையானவை
மசித்த கேரட் - ஒரு கப்
பால் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
நெய் - 1/2 கப்
முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை
* கேரட்டை நன்றாக துருவி வேக வைத்து மசித்துக் கொள்ளவும். மசித்த கேரட்டை அளந்து கொள்ளவும். ஒரு கப் மசித்த கேரட்டிற்கு மற்ற பொருட்களின் அளவு போதுமானது. முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்து எடுத்து வைக்கவும்.
* கனமான வாணலியை காய வைத்து மசித்த கேரட், பால், சீனி, எல்லாவற்றையும் இட்டு கிளற வேண்டும். கலவை கெட்டியானதும் நெய் சிறிது சிறிதாக விடவும்.
* பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு கொண்டு வரும்போது இறக்கி வைத்து வறுத்த முந்திரிப் பருப்பு மற்றும் ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
* இந்த கேரட் அல்வா விருந்தின்போது பரிமாற ஏற்றது.

காய்கறி மக்காச் சோள சூப்

Posted On March 2,2012,By Muthukumar
காய்கறிகள் சாப்பிட மறுக்கும் குழந்தையாகட்டும், நோயிலிருந்து மீண்ட சத்து குறைபாடுள்ள முதியவராகட்டும், அலைச்சலால் சோர்ந்து விடும் குடும்பத்தலைவராகட் டும், ஓயாத உடல் உழைப்பால் சத்து இழக்கும் இல்லத்தரசியாகட்டும், அனைவருக்கும் தேவை இயற்கை காய்கறிகளில் உள்ள வைட்டமின்களும், தாதுப்பொருட்களும். இதை உங்களுக்கு எளிதாகத் தரவல்லது, காய்கறி மக்காச்சோள சூப்.

தேவையானவை

பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
காரட் - 2
நறுக்கிய பீன்ஸ் - 1/2 கப்
துருவிய கோஸ் - 1/2 கப்
பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்
மக்காச்சோள முத்துக்கள் - 1/2 கப்
ஜவ்வரிசி மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

செய்முறை

* வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் மூன்றையும், சிறிது எண்ணெயில் வதக்கி, நைசாக அரைத்துக் கொள்ளவும்.
* பொடியாக நறுக்கிய காய்கறிகளுடன், மக்காச்சோளம், வெங்காய விழுது சேர்த்து 1/2 கப் தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். ஆனால் குழைய விடக்கூடாது.
* ஜவ்வரிசி மாவை 2 கப் தண்ணீரில் கலந்து கொழகொழவென கண்ணாடி பதத்திற்கு வரும்வரை கஞ்சியாக காய்ச்சவும்.
* அதனுடன் சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.
* சூப் சற்று திக்காக இருக்க வேண்டுமானால், 1 டீஸ்பூன் மக்காச் சோள மாவை தண்ணீரில் கரைத்து, அதை சூப்புடன் கலந்து கொதிக்க விடவும்.
* சுவையான காய்கறி மக்காச்சோள சூப் தயார்.

செட்டிநாட்டு பலகாரம் – கந்தரப்பம்

Posted On March 02,2012,By Muthukumar

செட்டிநாட்டு பலகாரம் என்றாலே அதற்கு தனி சுவையும் ,மணமும் உண்டு.அதிலும் இந்த கந்தரப்பத்திற்கு நிகற் வேறெதுவுமில்லை.தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்ததாகக் கருதப்படும் கந்தரப்பத்தின் செய்முறையை இப்பொழுது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பச்சரிசி -1 உழக்கு
புழுங்கல் அரிசி – 1 உழக்கு
உளுந்து – 2 கைப்பிடி
வெந்தயம் -3/4 tbsp
வெல்லம் -5-6 அச்சு
ஏலக்காய் -சிறிதளவு
செய்முறை:
அரிசியை உழக்கில் தலைதட்டி அளந்து கொண்டு அதன் மேல் உளுந்தை கோபுரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு இரண்டுவகையான அரிசியையும் உளுந்துடன் அளந்து எடுத்துக் கொண்டு,வெந்தயத்தையும் சேர்த்து நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.நன்கு ஊறியபின் கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.அதனுடன் வெல்லத்தையும்,ஏலக்காயையும் பொடித்து போட்டு மையாக அரைத்தெடுக்கவும்.
தோசை மாவுப்பதத்திற்கு கரைத்துக் கொண்டு,இருப்புச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொன்றாக சுட்டு எடுக்க வேண்டியது தான்.அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு,ஒரு குழிக் கரண்டியில் மாவை எடுத்து ஊற்றினால்,சிறிது நேரத்தில் அழகாக மேலே எழும்பி வரும்.அப்படி வந்ததும் கந்தரப்பத்தை திருப்பி விட்டு சிறிது நேரத்தில் எடுத்து விடலாம்.பஞ்சு பஞ்சாக சுவையுடனும்,மணத்துடனும் மிக அருமையாக இருக்கும்.