Friday, March 30, 2012

சிக்கன் கட்லெட்


Posted On March 30,2012,By Muthukumar

தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
பச்சைமிளகாய் - 2 நறுக்கியது
வெங்காயம் - ஒரு கையளவு
ரொட்டித் தூள் - 25 கிராம்
முட்டை - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
மைதா - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை
* சிக்கனை தோல் நீக்கி எலும்பில்லாமல் வாங்கி சுத்தம் செய்யவும், பிறகு சிக்கனை வேக வைத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.
* உருளைக் கிழங்கை வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
* சிக்கன், உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சைமிளகாய், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி கனமாகத் தட்டவும்.
* இதை அடித்து வைத்த முட்டையில் முக்கி ரொட்டித் தூளில் போட்டுப் புரட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து சாப்பிடவும்.
குறிப்பு
* இதே உருண்டையை மைதா, மிளகுத்தூள், உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து திக்காக கரைத்து முக்கி ரொட்டித் தூளில் புரட்டி எண்ணெயில் பொரிக்கலாம்.
* இதே முறைப்படி மட்டன் கட்லெட்டும், அசைவத்திற்குப் பதிலாக காய்கறிகள் சேர்த்து வெஜிடபிள் கட்லெட்டும் தயார் செய்யலாம்.

No comments:

Post a Comment