Sunday, April 15, 2012

முந்திரி மட்டன் வறுவல்


Posted On April 15,2012,By Muthukumar

சும்மாவே வறுத்த முந்திரி வாய்வரை மணக்கும். இந்த முந்திரியுடன்மட்டனையும் சேர்த்து வறுவல் பண்ணினால் சுவையை கேட்கத்தான் வேண்டுமா?

தேவையான பொருட்கள்

முந்திரி -100கிராம்
மட்டன் -1/4 கிலோ
வெங்காயம் -200 கிராம் (நறுக்கியது)
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
மிளகாய்தூள் -2 டீஸ்பூன்
தனியா தூள் -2 டீஸ்பூன்
மிளகு தூள் -2 டீஸ்பூன்
சோம்பு -1 டீஸ்பூன்
உப்பு, எண்ணை -தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பை அதில் போட்டு தாளிக்கவும். அப்படியே முந்திரியை அதில் சேர்த்து வறுக்கவும்.
வெங்காயத்தை வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். சுத்தம் செய்து வேகவைத்த மட்டனையும் இதில் சேர்த்து போதுமான உப்பு சேர்க்கவும்.
மட்டனுடன் மசாலா முந்திரிப்பருப்பு சேர்த்து நன்றாக காய்ந்ததும் மிளகுத்தூளை தூவி கிளறி இறக்கவும். இப்போது வாசனையில் ஊரைக்கூட்டும் முந்திரி மட்டன் வறுவல் ரெடி.

Friday, April 13, 2012

தேங்காய் பால் கஞ்சி – காலை பலகாரம்

Posted On April 14,2012,By Muthukumar
தேவையான பொருட்கள்:
1.தேங்காய்
2.வெந்தயம்
3.பச்சரிசி
4.ஏலக்காய்.
செய்முறை விளக்கம்:
  1. தேங்காயை அரைத்து, பிழிந்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயத்தை போடவும்.
  3. களைந்து வைத்திருக்கும் பச்சரிசியை குக்கரில் போட்டு 1:1.1/2 (அரிசி: தண்ணீர்) என்ற வீதத்தில் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை காத்திருக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
  4. குக்கரை திறந்து தேங்காய் பாலை ஊற்றி நன்கு கிளறவும்.
  5. சுவையான, சத்தான தேங்காய் பால் கஞ்சி தயார்.
  6. இதனுடன் சீனி கலந்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும்.

பொட்டு கடலை தேங்காய் ஜாம்

Posted On April 14,2012,By Muthukumar
தேவையான பொருட்கள்:
1.முந்திரி பருப்பு
2.பொட்டு கடலை
3.தேங்காய்
4.தேன்
செய்முறை விளக்கம்:
முந்திரி பருப்பு, பொட்டு கடலை, தேங்காயை மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்
பின் தேன் சேர்த்து அதை  ஜாம் போன்று கெட்டியான திரவமாக  கலக்கவும்.
சத்தான, சுவையான ஜாம் தயார். வேணுமென்றால் கிஸ்மிஸ் பழமும் சேர்த்துக் கொள்ளலாம்.


வெஜிடபிள் கோப்தா

Posted On April 13,2012,By Muthukumar
ஸ்டார் ஓட்டல் உணவுப்பொருளான வெஜிடபிள் கோப்தாவை வீட்டிலும் தயாரிக்க ஆசையா? இதே முறையில் செய்து பாருங்கள். ருசி அள்ளிக்கொண்டு போகும். இதோ செய்முறை:

கோப்தா தயாரிக்க தேவையானவை:

உருளைக்கிழங்கு -2
பச்சைப்பட்டாணி - 1/2 கப்
கேரட் -2
பெரிய வெங்காயம் - 1
கார்ன் ப்ளோர் மாவு : 2 டேபிள் ஸ்பூன்
பிரெட் துண்டுகள் - 2
மிளகாய்த்தூள் -1 1/2 டீஸ்பூன்
கரம்மசாலா -1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - 1/2 கப்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

கிரேவி தயாரிக்க தேவையானவை:

சின்ன வெங்காயம் -10
தக்காளி -5
இஞ்சி, பூண்டு, விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 1/2 டீஸ்பூன்
கரம்மசாலா தூள் -1 டீஸ்பூன்
நெய் -1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணியை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். வெங் காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அத்துடன் மிளகாய்த்தூள், கரம்மசாலாதூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும். அதைத்தொடர்ந்து வெந்த காய்கறிகள் கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். இத்துடன் உதிர்த்த பிரெட், கார்ன்ப்ளோர் சேர்த்து மசித்தாற்போல் கிளறி சிறுசிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

கிரேவி தயாரிக்க:

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் நெய் விட்டு வெங்காயத்தை வதக்கி அத்துடன் இஞ்சி, பூண்டு விழுது மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். தக்காளியை மிக்சியில் அரைத்து கூழாக்கி இதில் சேர்க்கவும். அதோடு தேவைக்கு உப்பு சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
ஐந்து நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி வைக்கவும். பரிமாறும்போது கிரேவியை சற்று சூடாக்கி கோப்தாக்களை சேர்த்து பரிமாறுங்கள். சூப்பர் சுவையுடன் வெஜிடபிள் கோப்தா ரெடி.

Saturday, April 7, 2012

அன்னாச்சி எசன்ஸ் மற்றும் பட்டை தூள் பாம்பே டோஸ்ட்

Posted On April 07,2012,By Muthukumar


இலகுவான காலை நேர டிபன். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய டிபன்.செய்வதும் சுலபம்.
தேவையானவை
பிரட் – 9
காய்ச்சி ஆறிய பால் – 100மில்லி
முட்டை – 2
பழ எசன்ஸ் – 2 துளி
பட்டை தூள் – ½ தேக்கரண்டி
சர்க்கரை – 50 கிராம்
பட்டர் + எண்ணை – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து பாலில் சர்க்கரையை கரைத்து அதில் அன்னாசி எசன்ஸ், பட்டைதூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
எண்ணை + பட்டரை தோசை தவ்வாவில் சூடாக்கி பிரட்டை முட்டைகலவையில் தோய்த்து கருகாம்ல் இருபுறமும் பொரித்து எடுக்கவும்.

ஆயத்த நேரம் : 7 நிமிடம்
சமைக்க ஆகும் நேரம் :10 நிமிடம்
பரிமாறும் அளவு : 3 நபருக்கு

மதுரை மட்டன் வறுவல்

Posted On April 07,2012,By Muthukumar
ட்டன் வறுவலில் மகத்தானது மதுரை மட்டன்வறுவல். வாசம் ஊரையே தூக்கும் என்றால் அதன் ருசிக்கு ஏங்காதோர் தான் யார்? இதோ செய்முறை:
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 நறுக்கியது
இஞ்சி, பூண்டு விழுது - 11/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 11/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க தேவைப்படுபவை:
எண்ணெய் - 100 மில்லி
சோம்பு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 4
இஞ்சி - சிறுதுண்டு
கொத்தமல்லி இலை - 1/2 கப்
புதினா இலை- 1/4 கப்
தேங்காய் விழுது - கால் கப்
கரம்மசாலா தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
மட்டனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். இத்துடன் முதல்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். ஒரு கடாயில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
வேகவைத்த மட்டனைச் சேர்த்து தண்ணீர் வற்றும்வரை அடுப்பில் வைத்திருக்கவும். இத்துடன் தேங்காய் விழுதைச் சேர்த்து 5 நிமிடங்கள் வைத்திருக்கவும். உப்பை சரிபார்த்து கரம் மசாலா தூளைத் தூவி நன்கு கிளறி இறக்கவும். இப்போது மணக்கும் மதுரை மட்டன் மசாலா ரெடி.

இஞ்சி பச்சடி

Posted On April 07,2012,By Muthukumar
தேவையானப்பொருட்கள்:

இஞ்சி - 2 அல்லது 3 பெரிய துண்டுகள்
புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
 
வறுத்தரைக்க:

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3 முதல் 4 வரை
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
எள் - 1/2 டீஸ்பூன்
 
தாளிக்க:

நல்லெண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
வெல்லம் - ஒரு சிறு துண்டு
 
செய்முறை:

இஞ்சியை நன்றாகக் கழுவி, தோலை சீவி விட்டு துருவிக் கொள்ளவும். அல்லது மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். துருவிய இஞ்சி 3 டேபிள்ஸ்பூன் அளவிற்கு இருக்க வேண்டும்.

புளியை ஊறவைத்து, தேவையான தண்ணீரைச் சேர்த்துக் கரைத்து இரண்டு அல்லது இரண்டரை கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 
ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணை விட்டு, காய்ந்ததும் அதில் இஞ்சித்துருவலைப் போட்டு வதக்கவும்.  இஞ்சி சிவக்க வதங்கியதும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
 
அதே வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், எள் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, ஆறியதும், மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
 
ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி அதில் புளித்தண்ணீரை ஊற்றவும்.  அதில் மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும்.  புளித்தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பைத் தணித்து விட்டு, அரைத்து வைத்துள்ளப் பொடியைத் தூவவும்.  (சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றினால்  பொடி கெட்டியாவதை தடுக்கலாம்). மீண்டும் ஓரிரு வினாடிகள் கொதித்ததும், அதில் வதக்கி வைத்துள்ள இஞ்சித்துருவல், வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, இன்னும் சில வினாடிகள் அடுப்பில் வைத்திருந்து இறக்கி வைக்கவும்.

சாதம், சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம். பிரட்டுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

பீஸ் மசாலா

Posted On April 07,2012,By Muthukumar
ழக்கமாக செய்யும் சைடுடிஷ்சை விட சப்பாத்தி, பூரி, பிரைடு ரைஸ் போன்றவைகளுக்கு பீஸ் மசாலா சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். உலர்பட்டாணியை ஊறவைத்து செய்வதை விட, பச்சைப்பட்டாணியை புதிதாக வாங்கி உரித்து செய்வதே சுவையூட்டும். செய்முறை இதோ:
தேவையானவை:
பச்சைப்பட்டாணி -2 கப்
பெரிய வெங்காயம் -2
சின்ன வெங்காயம் -10
தக்காளி -3
மிளகாய்த்தூள் - 11/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய்-சிறிதளவு
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
பச்சைப்பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். சின்னவெங்காயம், இஞ்சி, பூண்டு, விழுது, தேங்காய், சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணைய் விட்டுக் காய்ந்ததும், சிறிது பட்டையை தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் தக்காளி, அரைத்த விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி அத்துடன் வேகவைத்த பட்டாணியை சேர்க்கவும்.
5 நிமிடங்கள் நன்கு கிளறி இறக்கி வைக்கவும். சுவையான பீஸ் மசாலா ரெடி.

Thursday, April 5, 2012

வடு மாங்காய்


Posted On April 05,2012,BY Muthukumar
கோடைக்கால ஆரம்பத்தில் மாவடு நிறைய கிடைக்கும்.   மாவடுவை உப்பில் ஊற வைத்து, மிளகாய் மற்றும் கடுகுத் தூளைச் சேர்த்து வைத்துக் கொண்டால் வருடம் முழுவதும் உபயோகிக்கலாம்.  மற்ற ஊறுகாய்களைப்போல் இதற்கு எண்ணை அதிகம் தேவையில்லை.  ஆனாலும் வருடம் முழுவதும் கெடாமல் இருக்க உப்பை சற்று அதிகமாக சேர்க்க வேண்டியிருக்கும். குறைந்த அளவில் செய்தால் உப்பு அதிகம் சேர்க்க தேவையில்லை.  அதனால் 1/4 கிலோ மாவடுவில் இதை செய்தேன். செய்முறையும் பாரம்பரிய முறையிலிருந்து சற்று மாறு பட்டது.  ஆனால் சுவையில் ஒன்றும் மாறுபாடு தெரியவில்லை.
தேவையானப்பொருட்கள்:


மாவடு - 1/4 கிலோ
கல் உப்பு - 1/4 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் (குவித்து அளக்கவும்)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 2 டீஸ்பூன்
நல்லெண்ணை அல்லது விளக்கெண்ணை - 1 டீஸ்பூன்

செய்முறை:


மாவடுவை நன்றாகக் கழுவி, காம்பிலிருந்து பிரித்தெடுக்கவும். மாவடுவின் மேலே 1 அல்லது 2 cm அளவிற்கு காம்பை விட்டு விட்டு எடுக்கவும். சுத்தமான துணியால் மாவடுவைத் துடைத்து விட்டு, ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு அத்துடன் ஒரு டீஸ்பூன் எண்ணையைச் சேர்த்து,  எல்லா மாவடுவின் மேலும் எண்ணைப் படும் படி கலந்து வைக்கவும்.

1/2 கப் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து, ஆற விடவும்.


மிக்ஸியில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பெருங்காய்த்தூள், கடுகு ஆகியவற்றைப் போட்டு நன்றாக அரைத்து தூளாக்கிக் கொள்ளவும்.

சுத்தமான ஒரு ஜாடியில் மாவடுவைப் போட்டு அத்துடன் அரைத்தெடுத்த தூள்,  ஆற வைத்துள்ள நீர் ஆகியவற்றைச் சேர்த்துக் குலுக்கி விடவும்.  மூடியைப் போட்டு மூடி,  அப்படியே 3 நாட்கள் வைத்திருக்கவும்.  இடையில் தினமும் காலை ஒரு முறை, மாலை ஒரு முறை ஜாடியைக் குலுக்கி விடவும்.  3 நாட்களில் மாவடு தோல் சுருங்கி ஊறியிருக்கும்.

அதன் பின் எடுத்து உபயோகிக்கலாம்.  தயிர் சாதத்துடன் சாப்பிட அதன் சுவையே அலாதிதான்.

கோதுமை ரவா இட்லி

Posted On April 05,2012,By Muthukumar
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவா -1 கப்
தயிர் – 1   1/2
கடுகு -1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு -1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு -1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 1
கொத்தமல்லி,கறிவேப்பிலை -சிறிது
உப்பு – தேவையான அளவு

செய்முறை: 
கோதுமை ரவையையும்,தயிரையும் கலந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.பின் சிறிது எண்ணெயில் கடுகு,உளுந்தம்பருப்பு,கடலை ப்பருப்பு,கறிவேப்பிலை போட்டு தாளித்து,உப்பு போட்டு,கோதுமை ரவை,தயிர் கலவையுடன் சேர்த்து இட்லி பாத்திரத்தில் இட்லியாக ஊற்றி ஆவியில் வேக வைக்கவும்.இதற்கு சரியான காம்பினேஷன் மிளகாய் துவையல் மற்றும் தேங்காய் சட்னியாகும்.


ஓட்ஸ்,வெஜிடபிள் சூப்

Posted On April 05,2012,By Muthukumar
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் – 2 மேசைக்கரண்டி
வேகவைத்த பருப்பு தண்ணீர் – 2 டம்ளர்
காரட்,பீன்ஸ்,கோஸ்,காளிபிளவர்,ப.பட்டாணி -தலா 25 கிராம்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி -1
பச்சை மிளகாய் -1
இஞ்சி – சிறிது
துருவிய சீஸ் – 1மேசைக்கரண்டி
மிளகு தூள் -1தேக்கரண்டி
செய்முறை:
*குக்கரில் வேகவைத்த பருப்புத் தண்ணீருடன் ஓட்ஸ்,இஞ்சி,நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் போட்டு வேகவைக்க வேண்டும்.
*பின்பு அதை blender அல்லது மத்தினால் கடைந்து,தேவையான தண்ணீர் சேர்த்து வடிகட்டி கொதிக்க விடவும்.
*இருப்புசட்டியில் சிறிது வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,சிறிது சோம்பு,பட்டை, இலை,கறிவேப்பிலை போட்டு தாளித்து போடவும்.
*ஒரு கொதி வந்தவுடன் துருவிய சீஸ் ,மற்றும் மிளகு தூள் தூவி இறக்கி பறிமாறவும்.

Wednesday, April 4, 2012

தந்தூரி சிக்கன்

தேவையான பொருட்கள் :
சிக்கன் – 1/2 கிலோ
சேர்க்க வேண்டிய பொருட்கள் 1 :
எலுமிச்சை சாறு – 2 மேஜை கரண்டி
· மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
· உப்பு – தேவையான அளவு
· எண்ணெய் – 1 தே.கரண்டி
சேர்க்க வேண்டிய பொருட்கள் 2 :
· எண்ணெய் – 1 மேஜை கரண்டி
· ஒமம் – 1 தே.கரண்டி (பொடித்தது)
· கடலைமாவு – 3 மேஜை கரண்டி
சேர்க்க வேண்டிய பொருட்கள் 3 :
· தயிர் – 1 கப்
·இஞ்சி பூண்டு விழுது–2 மேஜை கரண்டி
· மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
· கரம்மசாலா – 1/2 தே.கரண்டி (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)
· கடுகு – 1/2 தே.கரண்டி (பொடித்தது)
· எண்ணெய் – 2 மேஜை கரண்டி
· உப்பு – தேவையான அளவு
செய்முறை :
சிக்கனை சுத்தம் செய்து கொண்டு இரண்டு முன்று இடங்களில் கத்தி யினால் கீறி கொள்ளவும்.
சேர்க்க கொடுத்துள்ள பொருட்கள் 1 யினை சிக்கன் மீது தடவி அதனை சுமார் 10 – 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
சேர்க்க கொடுத்துள்ள பொருட்கள் 2 : ஒமம் மற்றும் கடுகினை தனி  தனியாக வறுத்து கொண்டு தனி தனியாக பொடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி ஒமம் பொடியினை போட்டு தாளித்து அத்துடன் கடலைமாவினை சேர்த்து நன்றாக வறுத்து கொ ள்ளவும்.
சேர்க்க கொடுத்துள்ள பொருட்கள் 3 யினை எல்லாம் கலந்து கொள்ளவும். அத்துடன் கட லைமாவு கலவையினை சேர்த் து கலந்து கொள்ளவும்.
இந்த கலவையினை சிக்கன் மீது தடவி கொண்டு குறை ந்தது 2 – 3 மணி நேரம் ப்ரிஜில் வைத்து ஊறவைக்கவும்.
அவனை 400 Fயில் மூற்சூடு செய்து கொள்ளவும்.சிக்கன் அவ னில் வைக்கும் ட்ரேயில் வைக்கவும்.
அவனில் 400Fயில் சுமார் 15 நிமிடங்கள் வேகவிடவும். சிக்கனை வெளியில் எடுத்து அதன் மீது சிறிது எண்ணெய் spray செய்து திரு ம்பவும் 400F Broil Modeயில் 15 – 20 நிமிடங்கள் வேகவிடவும்.
சுவையான தந்தூரி சிக்கன் ரெடி.
கவனிக்க:
சிக்கனை குறைந்தது 2 – 3 மணி நேரமாவது ஊறவைத்தால் தான் நன்றாக இருக்கும்.
சிறிது ரெட் கலர் சேர்த்து கொண்டால் சிக்கன் நன்றாக கலராக இருக்கும்.
தயிர் மிகவும் தண்ணியாக இல்லாமல் கெட்டியாக இருக்க வேண் டும்.

மிக்ஸ் வெஜ் சூப்

Posted On April 04,2012,By Muthukumar

தேவையான பொருட்கள் :

காரெட் - 50 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
காலி பிளவர் – 50 கிராம்
முட்டை கோஸ் – 50 கிராம்
காப்சிகம் – 50 கிராம்
மல்லி தழை – தேவையான அளவு
இஞ்சி – சிறிதளவு
பூண்டு -2 பல்
பட்டை -சிறிதளவு
லவங்கம் – 3 எண்ணம்
ஏலக்காய் – 2 எண்ணம்
கார்ன் பளார் (சோள மாவு ) – 2 தேக்கரண்டி
முட்டை – 1 எண்ணம்

செய்முறை :
காரெட் ,பீன்ஸ் ,காலி பிளவர் ,முட்டை கோஸ், காப்சிகம் , மல்லி தழை,இஞ்சி,பூண்டு அனைத்தையும் தனி தனியே பொடி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும் ,
வாணலியை அடுப்பில் வைத்து ,சிறிது எண்ணெய் விட்டு  ,
பட்டை,லவங்கம் ,ஏலக்காய் போடவும் . பின் நறுக்கி வைத்த இஞ்சி பூண்டு போடவும். அதன்
பின் காரெட் ,பீன்ஸ் ,காலி பிளவர் போட்டு கிளறிவிட்டு , தேவையான தண்ணீர் ஊற்றவும்.
நன்றாக கொதிக்கும் போது எஞ்சி இருக்கும் முட்டை கோஸ் ,காப்சிகம் போடவும் .தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும் .
அதன் பின்  முட்டையை நன்றாக அடித்து கொதிக்கும் கலவையுடன் சேர்க்கவும்.
பின் கார்ன் பளார் (சோள மாவு )தண்ணீரில் கரைத்து ஊற்றவும் . நறுக்கிய மல்லி தழையை போட்டு இறக்கவும்.
பரிமாறும் முன் தேவையான மிளகு பொடி சேர்த்து கொள்ளவும் .
அசைவம் சாப்பிடாதவர்கள் முட்டையை சேர்க்க வேண்டாம்

குழி பணியாரம் செய்வது எப்படி?

  1. Posted On April 04,2012,By Muthukumar
    குழிப்பணியாரம் ( ஆப்ப மாவு)(முதல் முறை)
    * ஆப்ப மாவு – ஒரு கிண்ணம்
    * தோசை மாவு – 3/4 கிண்ணம்
    * வெங்காயம் – ஒன்று
    * பச்சை மிளகாய் – ஒன்று
    * தாளிக்க:
    * எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
    * கடுகு – ஒரு தேக்கரண்டி
    * உளுந்து – ஒரு தேக்கரண்டி
    வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையானவைகளையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.இரண்டு மாவையும் ஒன்றாக ஒரு கிண்ணத்தில் ஊற்றி வதக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் கலவையை போட்டு நன்றாக கலக்கவும்.குழிசட்டியை அடுப்பில் வைத்து குழியின் பாதிக்கு எண்ணெய் ஊற்றி ஒரு சின்னகரண்டியால் ஒரு கரண்டி மாவை ஊற்றவும். பணியாரம் ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபக்கம் வேக வைக்கவும்.சுவையான குழிப்பணியாரம் ரெடி. தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.
    குழிப் பணியாரம்/கார வகை(2nd முறை)
    * புளித்த இட்லி மாவு – நான்கு கோப்பை
    * சோடா உப்பு – ஒரு சிட்டிகை
    * வெங்காயம் நறுக்கியது – அரைக்கோப்பை
    * பச்சைமிளகாய் நறுக்கியது – இரண்டு
    * இஞ்சி நறுக்கியது – ஒரு தேக்கரண்டி
    * கடுகு சீரகம் கலந்தது – ஒரு தேக்கரண்டி
    * உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி
    * கொத்தமல்லி நறுக்கியது – ஒரு மேசைக்கரண்டி
    * எண்ணெய் – கால் கோப்பை
    * இட்லிமாவில் ஒரு சிட்டிகை சோடாவைச் சேர்த்து கலந்துவைக்கவும்.
    * ஒரு சிறிய சட்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெயை காயவைத்து கடுகுசீரகத்தை போட்டு வெடிக்கவிட்டு உளுத்தப்பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
    * பிறகு வெங்காயம், பச்சைமிளகாய், karuvepillai இஞ்சியைச் சேர்த்து வதக்கவும்.
    * வெங்காயம் வெந்தவுடன் கலவையை மாவில் கொட்டவும். அதனுடன் கொத்தமல்லியையும் போட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும்.
    * பிறகு குழிப்பணியார சட்டியின் குழிகளில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றவும், எண்ணெய் காய்ந்ததும் மாவு கலவையை குழிகளில் முக்கால் வரையில் ஊற்றி வேகவிடவும்.
    * கூர்மையான கத்தி அல்லது கம்பியைக் கொண்டு பணியாரத்தை திருப்பிவிட்டு வேகவிடவும்.
    * இரண்டு புறமும் இளஞ்சிவப்பாக வெந்தவுடன் எடுத்து தேங்காய் சட்னி அல்லது கோழி குருமாவுடன் சூடாக பரிமாறவும்.
    Note:
    இட்லி மாவு கைவசம் இல்லாவிடில் இரண்டு கோப்பை இட்லி அரிசி, அரைக்கோப்பை உளுந்து, ஒரு தேக்கரண்டி வெந்தயம், ஒருதேக்கரண்டி கடலைப்பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து கெட்டியாக அரைத்து, ஒரு இரவு முழுவதும் அதை ஊறவைத்து ஒரு தேக்கரண்டி உப்பும், ஒரு சிட்டிக்கை சோடாவையும் கலந்து மாவை தயாரித்துக் கொள்ளலாம்.


ஆப்பம்



Posted On April 04,2012,By Muthukumar

ஆப்பம் - வெவ்வேறு முறைகளில் தயாரிக்கப்படும் இந்த ஆப்பம்-தேங்காய்பால் சாப்பிடாத தென்னிந்தியர்களே இல்லையெனக் கூறலாம். கேரளாவில் "ஈஸ்ட்" சேர்த்து செய்வார்கள். சிலர் அரிசி கஞ்சி சேர்த்தும் இதைச் செய்வார்கள். தஞ்சை மாவட்டத்தில் செய்யப்படும் முறை இதோ:

தேவையானப்பொருட்கள்:

பச்சை அரிசி - ஒன்றரைக் கப்
புழுங்கலரிசி - ஒன்றரைக் கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
ஆப்ப சோடா - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தேங்காய்ப்பால் - 1/4 கப்

செய்முறை:

அரிசி, பருப்பு, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக 6 முதல் 8 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் நன்றாகக் களைந்து, நீரை வடித்து விட்டு, மை போல் அரைத்தெடுக்கவும். அத்துடன் உப்பு போட்டுக் க்ரைத்து, இரவு முழுவதும் அல்லது 10 மணி நேரம் புளிக்க விடவும்.

மறுநாள், மாவில் ஆப்ப சோடா, 1/4 கப் தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து, தோசைமாவை விட சற்று நீர்க்க கரைக்கவும்.

ஆப்பசட்டியை (இல்லையென்றால் அடி கனமான ஒரு வாணலியை) அடுப்பிலேற்றி சூடாக்கவும். தோசைத்துணி அல்லது சமையலறைத்தாளில் சிறிது எண்ணையைத் தொட்டு ஆப்பச்சட்டியை துடைத்து விடவும். பின்னர் ஒரு பெரிய கரண்டி மாவை அடுத்து சட்டியின் நடுவே ஊற்றி, சட்டியை இரு கைகளாலும் தூக்கி (ஒரு துணியால் பிடித்துக் கொண்டுதான்) ஒரு சுற்று சுற்றி, (மாவு சட்டியைச் சுற்றி பரவி, விடும்) அடுப்பில் வைத்து மூடி விடவும். ஓரிரு நிடங்களில் ஆப்பம் வெந்து விடும். மூடியைத் திறந்து ஆப்பம் நடுவில் வெந்திருக்கிறதா என்று பார்த்து (ஆப்பசட்டியை விரைவாகவும், சரியாகவும் சுற்றினால் அப்பம் ஓரத்தில் மெல்லியதாகவும், நடுவே திக்காவும் இருக்கும்) எடுத்து வைக்கவும். ஒரு கரண்டி காம்பால் இலேசாக நெம்பி விட்டாலே போதும். கையாலேயே எடுத்து விடலாம்.

ஒரு பக்கம் வெந்தால் போதும். திருப்பிப் போட தேவையில்லை.

தேங்காய்பாலுடனோ அல்லது உருளைக்கிழங்கு தேங்காய்ப்பால் கறியுடனோ பரிமாறலாம்.

மேற்கண்ட அளவிற்கு சுமார் 15 ஆப்பம் கிடைக்கும்.