Friday, March 16, 2012

செட்டிநாட்டு சமையல் -வரகு அப்பம்


Posted On March 16,2012,By Muthukumar
செட்டிநாட்டு சமையல் -வரகு அப்பம்

பண்டைய தமிழர்களால் அதிகளவில் உபயோகபடுத்தப்பட்ட சிறு தானியங்களின் பெயர்கள் கூட தற்போதைய தலை முறையினருக்கு தெரிவதில்லை.சிறுதானியங்களில் முக்கியமானது வரகு.இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உடகொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்ட நிலையிலும் செட்டிநாட்டுப் பகுதியில் சிறுதானியங்களில் பல விதமான பலகாரங்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
வரகு அரிசி,கோதுமையை விட சிறந்தது.இதில் நார்ச்சத்து அரிசி,கோதுமையை விட அதிகம்.வரகில் மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதால் ,இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. தானியங்களுடன் ஒப்பிடும்போது அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் புரதச் சத்து மற்றும் தாது உப்புக்கள் கொண்டதாகும். இது பைட்டிக் அமிலம் குறைந்தும் நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் பி வைட்டமின்கள் கொண்டதாகவும் உள்ளது.  இதனை அரிசிக்கு மாற்றாக உபயோகப்படுத்தி இட்லி,தோசை,ஆப்பம்,பனியாரம்,பொங்கல்,பாயாசம் என்று வகை வகையாக சமைத்து உண்ணலாம்.இப்பொழுது வரகு அப்பங்கள் செய்வது எப்படி என்று பார்ப்போம்.


வரகு வெல்ல  [இனிப்பு குழிப்]:
தேவையான பொருட்கள்:
வரகு -200கிராம்
வெள்ளை உளுந்து -50 கிராம்
தேங்காய் -1 கப் [துருவியது]
பூவன்பழம் -1
வெல்லம் -150கிராம்
ஏலக்காய் -3-5
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
வரகையும் உளுந்தையும் 1/2 ம்ணி நேரம் ஊறவைக்கவும்.பிறகு மேலே கொடுக்கப் பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கிரைண்டரில் போட்டு வழவழப்பாக தோசை மாவு பதத்திற்கு அரைத்தெடுக்கவும்.
இருப்புச்சட்டியில் எண்ணெய் ஊற்றி,காய்ந்ததும் ஒரு குழிக்கரண்டில் மாவை எடுத்து ஊற்றவும்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விடவும்.வெந்ததும் எடுத்து பரிமாற வேண்டியது தான்.அதிக எண்ணெய்யை விரும்பாதவர்கள் குழிப்பணியாரமாக ஊற்றி சாப்பிடலாம்.


 வரகு கார அப்பம்:
தேவையான பொருட்கள்:
வரகு -200 கிராம்
உளுந்து -50 கிராம்
தேங்காய் – 1 கப்
- 1துண்டு
பச்சை மிளகாய் -தேவையான அளவு
சின்ன வெங்காயம்- 15 [பொடியாக நறுக்கியது]
புளித்த மோர் -தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு.
செய்முறை:
வரகு மற்றும் உளுந்துடன் இஞ்சி,பச்சை மிளகாய்,தேங்காய்,உப்பு மற்றும் மோர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அரைத்தெடுக்கவும்.
இருப்பு சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு,கடுகு.சீரகம், போட்டு தாளித்து,நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கி மாவில் கொட்டவும்.பிறகு குழிப்பணியார சட்டியில் ஊற்றி எடுத்தால் சுவையான சத்தான வரகு குழிப்பணியாரம் ரெடி.மிளகாய் துவையலுடன் சாப்பிட்டால் சுவை தூக்கலாக இருக்கும்.

No comments:

Post a Comment