Monday, December 26, 2011

செட்டிநாட்டு நண்டு பொரியல்…

Posted On Dec 26,2011,By Muthukumar

தேவையான பொருட்கள்
நண்டு - 6
பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது
பச்சை மிளகாய் - 6
தக்காளி - 2
இஞ்சி - சிறு துண்டு
முட்டை - 1
முழுபூண்டு - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
ரொட்டித் தூள் - சிறிதளவு
செய்முறை
* நண்டைச் சுத்தம் செய்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
* ஓட்டோடு நண்டை எடுத்து கால் நீக்கி, சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, தக்காளி இவற்றை நன்கு வதக்கவும்.
* நண்டைச் சேர்த்து வதக்கி, முட்டையை அடித்து இதில் சேர்த்துக் கிளறவும்.
* அடுப்பை அணைத்து விடவும். கொத்தமல்லி இலையை நறுக்கிச் சேர்த்து, வேக வைத்த நண்டில் திணிக்கவும்.
* பிரெட் தூளை லேசாக வறுத்து நண்டின் மேல் தூவி சூடாகப் பரிமாறவும்.

No comments:

Post a Comment