Saturday, December 10, 2011

கொத்துக்கறி புட்டு

Posted On Dec 10,2011,By Muthukumar
தேவையானவை
கொத்துக்கறி (கைமா) - 200 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி - 15 கிராம்
பூண்டு - 10 பல்
நெய் - 20 கிராம்
மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்
முட்டை - 2
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய்- 2
முந்திரிப்பருப்பு - 6
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 3
மஞ்சள்பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
செய்முறை
* கைமாவை வேக வைக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் போட்டு வேக வைக்கவும்.
* கைமா வெந்து நீர் வற்றியதும், மிக்சியில் கரகரப்பாக அரைக்கவும்.
* ஒரு கடாயில் நெய் ஊற்றி மசாலா சாமான்களை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், அரைத்து வைத்த கறியைச் சேர்த்துக் கிளறவும். முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறி உப்பு சரிபார்க்கவும்.
* கொத்தமல்லி இலை, வறுத்த முந்திரி தூவி அலங்கரிக்கவும்.
குறிப்பு
* கைமாவிற்குப் பதிலாக கூனி மீனிலும் புட்டு செய்யலாம்.

No comments:

Post a Comment