Sunday, December 25, 2011

வாழைப்பூ கட்லெட்

Posted On Dec 25,2011,By Muthukumar

துவர்ப்பு சுவை மிக்க வாழைப்பூ உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வாழைப்பூ வடை, வாழைப்பூ கூட்டு இவற்றிற்குப் பதிலாக வாழைப்பூ கட்லெட் தயாரித்து சாப்பிட்டுப் பாருங்கள். ஆசையாக ருசிப்பீர்கள். செய்முறை இதோ...
தேவையானவை
பெரிய வாழைப்பூ - 1
அவித்த உருளைக் கிழங்கு - 3
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 6
தயிர் - 1 கப்
கடலை மாவு - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
ரீபைண்ட் ஆயில் - பொரிப்பதற்கு (தேவையான அளவு)
ரொட்டித் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* வாழைப்பூவை ஒரு பாத்திரத்தில் பொடியாக அரிந்து போட்டு அதில் தயிரை ஊற்றி நன்றாக கிளறிக் கொள்ளவும். சிறிது நேரம் ஊறியதும் கெட்டியாகப் பிழிந்து உதிர்த்துக் கொள்ளவும்.
* அத்துடன் மசித்த உருளைக் கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கடலை மாவு கறிவேப்பிலை, சோம்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
* கட்லெட் வடிவில் செய்து ரொட்டித் தூளில் புரட்டி வைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இரண்டு, மூன்றாகப் போட்டு பொரித்து எடுக்கவும்.
* தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் ஏற்றது.

No comments:

Post a Comment