Thursday, December 29, 2011

மைதா பூரி

Posted On   Dec 29, 2011, By Muthukumar

தேவையானப்பொருட்கள்:

மைதா - 1 கப்
ரவா - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணை அல்லது நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

மைதா, ரவா, உப்பு, நெய் அல்லது எண்ணை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் சிறிது சிறிதாக தண்ணீரை விட்டு, மிருதுவாகப் பிசைந்து, ஈரத்துணியால் மூடி, குறைந்து 1/2மணி நேரம் அப்படியே வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும்.

பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து, சிறிது எடுத்து, உருட்டி பூரியாக இடவும். (மிகவும் மெல்லியதாகவும் இருக்கக் கூடாது, தடிமனாகவும் இருக்க கூடாது). சுட வைத்துள்ள எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும்.

உருளைக்கிழங்கு தயிர் மசாலாவுடன் சாப்பிட சுவையாயிருக்கும்.

No comments:

Post a Comment