Monday, December 5, 2011

பாலக்’ பக்கோடா

Posted On Dec 05,2011,By Muthukumar
தேவையானவை
நறுக்கிய பசலைக்கீரை - 1 கப்
கடலைப்பருப்பு - 1/4 கப்
கடலை மாவு - 3 கப்
அரிசி மாவு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 4 பல்
பச்சைமிளகாய் - 2
கறி மசாலாதூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
* கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பெரிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கவும். பசலைக் கீரையையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* கடலை மாவுடன் அரிசி மாவு, நறுக்கிய பசலைக்கீரை, வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், கடலைப் பருப்பு, கறி மசாலா தூள், எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து காய்ந்த எண்ணெயில் 2 டீஸ்பூன் விட்டு சிறிது தண்ணீர் தெளித்து பிசிறினாற்போல பக்கோடா மாவு கலவை தயாரித்துக் கொள்ளவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை சிறிது சிறிதாக உதிர்த்தாற்போல போட்டு, வேகவிட்டு முறுகியதும் எடுக்கவும்.
* இதை சாப்பாட்டிற்கும் தொட்டுக்கொள்ளலாம். மாலை நேர சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். மொறுமொறுவென சாப்பிட சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment