Saturday, December 10, 2011

ஆந்திரா கோழிக்கறி வறுவல்

Posted On Dec 10,2011,By Muthukumar
தேவையானவை
கோழிக்கறி - 1/2 கிலோ (சுத்தம் செய்து நறுக்கவும்)
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
காஷ்மீர் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு - 1 கையளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை
* ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
* பின் வெங்காயத்தை வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.
* சிக்கனைச் சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், தனியாத் தூள், மஞ்சள்தூள், போதுமான உப்பு, நீர் சேர்க்கவும்.
* சிக்கன், மசாலாவுடன் சேர்ந்து வெந்து கெட்டியானதும் குறைந்த தீயில் சிறிது நேரம் வைக்கவும்.
* சிக்கன் நன்கு டிரை ஆனதும், பொட்டுக்கடலை மாவைப் போட்டுப் புரட்டவும், பொட்டுக்கடலைத் தூளில் பச்சை வாசனை போனதும் இறக்கிவிடவும்.

No comments:

Post a Comment