Tuesday, December 20, 2011

கொய்யாப்பழ குழம்பு சமைப்பது எப்படி?



சமையல் குறிப்பு:
கொய்யாப்பழ குழம்பு: சுவையான சமையல்
சமையல் குறிப்பு கொய்யாப்பழ குழம்பு

நறுக்கப்பட்ட கொய்யாப் பழங்கள்-2 ; கடலை மாவு -2 டேபிள் ஸ்பூன்; சிவப்பு மிளகாய்த்தூள்-2 ஸ்பூன் ; மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்; கடுகு-1/4 ஸ்பூன்; உளுத்தம்பருப்பு- ½ ஸ்பூன்;  உப்பு, தாளிக்க எண்ணெய், கருவேப்பிலை- தேவையான அளவு;  வெல்லப்பொடி –கொஞ்சம்:

செய்முறை:
அடுப்பில் வாணலியை ஏற்றி , அதில் எண்ணெய்  ஊற்றிக் காய்ந்ததும்,கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்தபின், நறுக்கிய கொய்யாத்துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு அதில் கடலை மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.  நன்கு கலக்கிவிட்டபின், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள்  உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கிவிட்டு கொதிக்கவிட வேண்டும். கொதித்தபின் கருவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கவேண்டும். கடைசியாக கொஞ்சம் வெல்லப்  பொடியைப் போட்டு இறக்கவேண்டும்.

இது வழக்கமாக நாம் செய்யும், கத்திரிக்காய், முருங்கைக்காய் குழம்பிலிருந்து வித்தியாசப்படும்.

கொய்யாப் பழங்களை , முழுவதும் பழங்களாகவோ, முழுவதும் காய்களாகவோ இருக்கக்கூடாது. இரண்டுக்கும் இடையே மீடியமாக இருக்கவேண்டும்.

No comments:

Post a Comment