Friday, January 27, 2012

பருப்பு உருண்டைக் குழம்பு

Posted On Jan 28,2012,By Muthukumar
செட்டிநாடு குழம்பு வகைகளிலேயே மிகவும் பிரசித்தியானது இந்தப் பருப்பு உருண்டைக் குழம்பு. கீழ்க்கண்ட அளவுப்படி தயாரித்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
தேவையானவை
கடலைப்பருப்பு - ஒரு கப்
துவரம்பருப்பு - ஒரு கப்
புளி - எலுமிச்சம்பழ அளவு
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் - 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப்பூ - ஒரு மூடி
பூண்டு - 6 பல்
பெரிய வெங்காயம் - 1
கொத்தமல்லி கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை
* கடலைப்பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் ஊற வைக்கவும். ஊறியதும் அத்துடன் தேங்காய்ப்பூ கைப்பிடி அளவு, மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன், சோம்பு 1/2 டீஸ்பூன், பூண்டு 2 பல், வெங்காயம் சிறிது, மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன், உப்பு, வாசனைக்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை இவற்றை மிக்சியில் தண்ணீர்விடாமல் கெட்டியாக அரைத்து உருட்டி வைத்துக் கொள்ளவும்.
* புளியைக் கரைத்துக் கொண்டு அதில் 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள், 4 டீஸ்பூன் மல்லித்தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து அத்துடன் 2 பல் பூண்டு, சோம்பு மிக்சியில் அரைத்துக் கலக்கவும்.
* இப்போது குழம்பு தாளிக்க ரெடி, வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, சோம்பு, வெந்தயம், சிறிது பட்டைபோட்டு சிவந்ததும், வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி அது வதங்கியதும் தக்காளிப் பழம் சேர்த்து வதக்கி, கருவேப்பிலை தாளித்து, கூட்டி வைத்திருக்கும் குழம்பை அதில் ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாக இராமல் கொஞ்சம் தண்ணீராக இருக்க வேண்டும்.
* குழம்பு கொதிக்கும்போது உருட்டி வைத்துள்ள உருண்டைகளை பத்து எண்ணிக்கை முதலில் போட்டு மூடி வைக்கவும். அது வெந்ததும் மீதி உருண்டைகளை போடவும். உருண்டைகள் வெந்ததும் தேங்காய் அரைத்து ஊற்றி பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். சுவையான உருண்டைக் குழம்பு ரெடி.
* நிறைய மாவு இருந்தால் பாதி மாவை தனியாக வைத்து வடைகளாகத் தட்டி, சுட்டு எடுக்கலாம்.

No comments:

Post a Comment