Wednesday, January 4, 2012

எள்ளு உருண்டை



 தமிழ் நாட்டு பாரம்பரிய சமையலில் எள்ளு உருண்டை மிகவும் பிரபலம்.
எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த எள்ளு உருண்டை இது . என் மாமியார் அடிக்கடி செய்து கொடுப்பாங்க..
அவங்க கை பக்குவமே தனி சுவை தான்.. நிறைய பழமையான உணவுகள் எல்லாம் அவங்க செய்வாங்க.. இன்னும் வரும் காலத்தில் நமது பாரம்பரிய சமையல் குறிப்புகளை அவங்க கிட்ட கேட்டு உங்களுக்கு சொல்லித்தருகிறேன்.
நான் முதல் முதலாக அவங்க சொல்லி இந்த உருண்டை செய்தேன்... மிகவும் சுவையாக வந்தது.. நீங்களும் இதன் முறையில் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக்கொள்ளுங்கள் தேவையான பொருட்கள்
ராகி - 100 கிராம்
கருப்பு எள்ளு (அ) வெள்ளை எள்ளு- 250 கிராம்
வேர்கடலை - 250 கிராம்
முந்திரி -  100 கிராம்
சர்க்கரை - 250 கிராம்

 செய்முறை
முதலில் ராகி மாவினை சிறிது தண்ணீர் தெளித்து மாவு பிசைந்து ரொட்டியாக சப்பாத்தி கல்லில் நன்றாக வேக வைத்து எடுக்கவும். இதனை ஆற விடவும்.
வேர்கடலை, எள்ளு, முந்திரியினை வெறும் சட்டியில் லைட்டாக வறுத்து எடுத்து வைக்கவும்,
வேர்கடலையின் தோல்லை நீக்கிவிடவும்.
அனைத்து பொருட்களையும் தனி தனியாக மிக்ஸூயில் அரைத்து வைக்கவும்.
 இவை அனைத்தனையும் வேறு ஒரு பாத்திரத்தில் போடவும். இதனுடம் இடித்த சர்க்கரையினையும் சேர்க்கவும்.. நன்றாக கிண்டவும்
 .
பிறகு இந்த கலவையினை மிக்ஸியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அரைக்கவும்.
 கொஞ்சம் சிக்கும் கிண்டிவிட்டு அரைக்கவும். நன்றாக எண்ணெய் விடும் வரை அரைக்கவும்.
 (கைகளில் உருண்டை பிடிக்கும் பொழுது இப்படி எண்ணெய் விட்டால் தான் சரியான பக்குவம்)


 பிறகு இந்த கலவையினை சிரு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து சாப்பிடவும்..
சுவையான பழமையான சத்தாண எள்ளு உருண்டை தயார்...
(முன்பு உள்ள காலங்களில் மிக்ஸியில் அரைக்காமல் உரலில் வைத்து இடிப்பார்களாம். இப்ப யாருக்கு உரலில் இடிக்க டைமிருக்கு)

No comments:

Post a Comment