Thursday, January 26, 2012

முள்ளங்கி இறால் குருமா

Posted On Jan 26,2012,By Muthukumar


சுவையான இறால் மீனை, சத்தான முள்ளங்கியுடன் சேர்த்து குருமா செய்து சாப்பிட்டால் சுவையும், சத்தும் நிரம்ப கிடைக்கும். செய்து பார்க்கலாமே, முள்ளங்கி இறால் குருமா...
தேவையானவை
இறால் - 1/2 கிலோ
முள்ளங்கி - 1/4 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
தேங்காய் துருவல் - 1/4 மூடி
பட்டை - 2
லவங்கம் - 2
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
செய்முறை
* இறாலைச் சுத்தம் செய்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். இஞ்சி பூண்டு விழுதாக்கி கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை நறுக்கவும், மிளகாயை கீறிக் கொள்ளவும். தேங்காயை அரைத்துக் கொள்ளவும். முள்ளங்கியை வட்டமாக நறுக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை லவங்கம் போட்டுத் தாளிக்கவும்.
* நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய மிளகாய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.
* பின் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்க்கவும். இப்போது இறாலைச் சேர்த்து வதக்கவும். முள்ளங்கியைச் சேர்த்து வதக்கி நன்கு வேக விடவும்.
* தேவையான உப்பு சேர்த்து, அரைத்த தேங்காய்ப் பாலையும் சேர்க்கவும்.
* முள்ளங்கியும், இறாலும் நன்கு வெந்ததும், நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.


No comments:

Post a Comment