Sunday, July 22, 2012

மட்டன் விண்டாலு

Posted On July 22,2012,By Muthukumar
ட்டன் வகைகளில் எத்தனை விதமான ரெசிபிகள் தயாரித்தாலும் அத்தனையும் மணக்க மணக்க அமைந்து நாக்கை அந்த சுவைக்கு அடிமையாக்கி விடும். இந்த மட்டன் விண்டாலு வகையும் அந்த ரகமே. செய்து பார்த்து சுவைப்போமா?
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
நெய் - 100 கிராம்
கொத்தமல்லி இலை - 1/2 கட்டு(நறுக்கியது)
வெங்காயம் - 100 கிராம்(நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 100 கிராம்
விண்டாலு மசாலாவிற்கு:
சீரகம் - 1 டீஸ்பூன்
காஷ்மீர் மிளகாய் - 12
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் - 3
பூண்டு - 15 கிராம்
வினிகர் - 30 மில்லிகிராம்
செய்முறை:
மட்டனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். வினிகர் சேர்த்த மசாலாக்களை அரைக்கவும். மெல்லிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். அதோடு கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறவும். அத்துடன் மசாலா, தேவையான உப்பு சேர்க்கவும்.
இப்போது மட்டனையும் அதில் சேர்த்து மூடி வைக்கவும். மட்டன் வேகும்வரை போதுமான தண்ணீர் ஊற்றி அடிக்கடி கிளறவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து நான்காக வெட்டி மட்டனுடன் சேர்த்து கிளறவும்.
குறைந்த தீயில் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
இப்போது மணக்கும் மட்டன் விண்டாலு ரெடி. வெள்ளை சாதத்துடன் தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

No comments:

Post a Comment