Tuesday, July 10, 2012

சிக்கன் தேங்காய்ப்பால் குருமா

Posted On July 10,2012,By Muthukumar
சூப்பர் சுவைப் பட்டியலில் இடம் பிடித்த உணவுப்பட்டியலில் இந்த தேங்காய்ப்பால் குருமாவுக்கும் இடம் உண்டு. இதை தயார் செய்து ருசிப்பவர்கள் அதன்பிறகு இந்த சுவைக்கு அடிமையாகவே ஆகி விடுவீர்கள். அத்தனை டேஸ்ட்டான இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாமா?

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 200 கிராம்(நறுக்கியது)
பச்சை மிளகாய் - கீறியது
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தனியா தூள் - 3 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தேங்காய் - ஒரு மூடி(திருவியது)
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். தேங்காயை அரைத்து திக்காக பால் எடுக்கவும். ஒரு அடி கனமான கடாயில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும். அதன் பிறகு மஞ்சள்தூள், தனியா தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
இப்போது சிக்கனை இதனுடன் சேர்த்து வேகுமளவு நீர் விடவும். சிக்கன் வெந்ததும், அரைத்த தேங்காய்ப்பாலை ஊற்றி குறைந்த தீயில் சிறிதுநேரம் வைத்திருந்து இறக்கவும். சூடான, சுவையான சிக்கன் தேங்காய்ப் பால் குருமா ரெடி.

No comments:

Post a Comment