Tuesday, December 30, 2014

மஷ்ரூம் பிரியாணியும் வெண்டைக்காய் தயிர் பச்சடியும்

Posted By Muthukumar,On December 30,2014
மஷ்ரூம் பிரியாணி:
MUSHROOM BIRIYANI
தேவையான மொருட்கள்:
பாசுமதி அரிசி-3 கப்; பிரிப்ஜி இலை-2; கிராம்பு-5; பட்ட-3; ஏலக்காய்-6; ஆளி விதை-3; தண்ணீர்-6 கப்; வெங்காயம் -4; எண்ணெய்-4 டேபிள் ஸ்பூன்.
மஷ்ரூம் க்ரேவிக்குத் தேவையான பொருட்கள்:
மஷ்ரூம்-500 கிராம்; இஞ்சி-பூண்டு விழுது-1 டேபீள் ஸ்பூன்; தயிர் நன்கு அடித்துக் கலக்கப்பட்டது-1 கப்; மிளகாய்த் தூள்-1 டீ ஸ்பூன்; கருஞ்சீரகம்-2 டீ ஸ்பூன்; கிராம்பு-3; மிளகு-5; லவங்கப் பட்டை-2; ஏலக்காய்-3; பிரிஞ்சி இலை-2; ஆளி விதை-3; நெய்-3 டேபிள் ஸ்பூன்; உப்பு-ருசிக்கேற்ப.
மேலே தூவிக் கலக்க:
வெதுவெதுப்பான பாலில் கரைக்கப்பட்ட கேசரி பௌடர்; புதினா இலைகள்-1.2 கப்; நெய்-1 டேபிள் ஸ்பூன்; வதக்கப்பட்ட 3 பெரிய வெங்காய துண்டுகள்.
செய்முறை:
பாசுமதி அரிசியை சுத்தம் செய்து தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும். பின்பு அதிக தண்ணீரை வடிகட்டி தனியே வைக்கவும். ஒரு பெர்ய வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு சூடாக்கி அதில் தாளிக்க வேண்டிய பொருட்களைப் போட்டு வதக்கி அரிசியையும் போட்டு கலக்கி சிறிது நேரம் வதக்கவும். பிறகு 6 கப் தண்ணீர் சேர்த்து 3/4 பதத்துக்கு வேகவிட்டு தனியே எடுத்து வைக்கவும். பின்னர் அரிந்துவைத்த வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வறுக்கவும். மஷ்ரூம்களை கழுவி ஒரு பக்கம் தனியே வைக்கவும். வாணலியில் மீதமுள்ள நெய்யை ஊற்றி, சூடாக்கி, ஜீரகத்தையும் தாளிக்கும் மசாலா பொருள்களையும் சேர்த்து வதக்கவும். இப்போது மஷ்ரூம்களைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கி மிளகாய்த்தூளைப் போட்டு நன்கு கலந்து வதக்கவும். வெங்காயத்தில் 3/4 பங்கு சேர்த்து வதக்கவும். இப்போது அடித்துவைகக்ப்பட்டுள்ள தயிரை மஷ்ரூமுடன் கலந்து லேசான தீயில் 5 நிமிடம் வதக்கவும். . ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் ஒரு கரண்டி மஷ்ரூம் மசாலாவைப் போட்டு அதன் மீது பாசுமதி சாதத்தை கொஞ்சமாக மஷ்ரூம் மசாலாவின் மீது நிரப்பவும். அதன்மீது கேசரி பௌடர் கலந்த பாலைத் தெளித்து அதன் மீது புதினா மற்றும் வதக்கிய வெங்காய லேயர்களைப் பரப்பவும். மீண்டும் ஒரு கரண்டி மஷ்ரூம் மசாலாவைப் போட்டு, அதன் மீது பாசுமதி சாதத்தைப் பரப்பி மறுபடியும் கேசரி கலந்த பாலையும் , புதினா மற்றும் வெங்காய லேயரையும் சேர்த்து வாணலியை மூடி லேசான தீயில் சிறிது நேரம் வைக்கவும். வெண்டைக்காய்த் தயிர் பச்சடியுடன் பறிமாற, சுவையாக இருக்கும்.
* * * * *.
வெண்டைக்காய்த் தயிர் பச்சடி:
LADIES FINGER RAITA
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய்கள்-15; பச்சை மிளகாய்-2; எண்ணெய்-2 ஸ்பூன்; தயிர்-1 கப்; உப்பு-ருசிக்கேற்ப;
தாளித்து மேலே தூவிக் கலக்க:
எண்ணெய்-1 ஸ்பூன்; ஜீரகம்-1/2 டீ ஸ்பூன்; கடுகு -1/2 ஸ்பூன்; உளுத்தம் பருப்பு-1 ஸ்பூன்; காய்ந்த மிளகாய்-1; கறிவேப்பிலை -ஒரு கொத்து.
வெண்டக்காய்களை பாதிப் பாதியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அரிந்து வைத்துள்ள வெண்டைக்காய் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வெண்டைக்காய் முறுகி வதங்கும் வரை வதக்கவும். பிறகு தனியாக ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு ஜீரகம் கடுகு போட்டு பொறிய விட்டு, பின் உளுதம்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். ஒரு வாணலியில் தயிரை ஊற்றி சூடாக்கி உப்பு, வெண்டைக்காய் சேர்த்துக் கலக்கி தாளித்துவைத்துள்ள பொருட்களைச் சேர்த்தால், வெண்டைக்காய் தயிர் பச்சடி ரெடி.

No comments:

Post a Comment