Tuesday, December 2, 2014

செட்டிநாடு வஜ்ஜிரமீன் குழம்பு

Posted By Muthukumar,on December 2,2014
SEER FISH CURRY
தேவையான பொருட்கள்:
வஜ்ஜிர மீன்-1கிலோ; சினன் வெங்காயம் -100 கிராம்; பூண்டு-25 பல்; கறிவேப்பிலை- 2 கொத்து; சோம்பு-1 டீ ஸ்பூன்; சீரகம் -1/2 டீ ஸ்பூன்; வெந்தயம்-1 டீ ஸ்பூன்; தக்காளி-3; புளி-கைப்பிடியளவு; மஞ்சள் பொடி-1 ஸ்பூன்; எண்ணெய்-5 டேபிள் ஸ்பூன்; வர மிளகாய்-10; சாம்பார் பொடி-3 டேபிள் ஸ்பூன்; உப்பு-தேவையான அளவு;
செய்யும் முறை:
முதலில் மீனை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக்கி உப்பு போட்டு பிசறி நன்கு கழுவி வைக்கவேண்டும். வர மிளகாய், சோம்பு, பூண்டு மூன்றையும் 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி, 2 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து,நைஸாக விழுதாக அரைத்துவைக்கவேண்டும். வெங்காயத்தில் இரண்டை எடுத்து வைத்துவிட்டு, மற்றதை தோலுரித்து இரண்டாகவும் தக்காளியை நான்காகவும் நறுக்கவும்.புளியை 3 டம்ளர் தண்ணீரில் கரைத்துவைக்கவேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து சோம்பு, சீரகம் மற்றும் வெந்தயம் போட்டு வாசனை வந்ததும், வெங்காயம் கறிவேப்பிலை போட்டு 3 ந்மிடம் வதக்கவேண்டும். பின் தக்காளி, 1 டேபிள் ஸ்பூன் உப்பு, சாம்பார் பொடி , மஞ்சள் பொடி மற்றும் அரைத்த விழுது ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடம் வதக்கவேண்டும். இப்போது புளிக் கரைசலை ஊற்றி சிறிது கெட்டியாகும்வரை கொதிக்கவைக்கவேண்டும்.
பின் மீன் துண்டங்களைப் போட்டு 5 நிமிடம் கொதிக்கவைக்கவேண்டும். இறக்கியபின், சீரகத்தை நன்றாகத் தட்டி பிறகு இரண்டு வெங்காயத்தையும் வைத்து லேசாகத் தட்டி குழம்பில் போட்டு மூடி 10 நிமிடம் கழித்து திறந்து லேசாக கிண்டிவிட வேண்டும்.
சுவையான வஜ்ஜிர மீன் குழம்பு ரெடி.

No comments:

Post a Comment