Tuesday, December 30, 2014

முள்ளங்கி பகோடா

Posted by  Muthukumar On Dec 30,2014
RADISH BAKODA
தேவையான பொருட்கள்:
முள்ளங்கித் துருவல்(உப்பு சேர்த்து, தண்ணீரை வடித்து வைத்துக்கொள்ளவும்)- 1 கப்; கடலைப் பருப்பு-1 கப்; அரிசி மாவு-2 டேபிள் ஸ்பூன்; துருவிய பனீர்- 1/4 கப்; பொடியாக நறுக்கிய வெங்காயம்-1 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்-2 கரம் மசாலாத் தூள்-2 சிட்டிகை; சோம்புத் தூள்-1/2 ஸ்பூன்; எண்ணெய்- பொறிப்பதற்கு; உப்பு-தேவைக்கேற்ப.
செய்முறை:
கடலை பருப்பை 2 மணி நேஅர்ம் ஊறவைத்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் அத்துடன் சேர்த்துப் பிசையவும். எண்ணெயைக் காய வைத்து , சின்ன சின்னதாகக் கிள்ளிப் போட்டுப் பொறித்தெடுக்கவும். தயிர் அல்லது தக்காளி சாஸுடன் பறிமாறவும்.
2. முள்ளங்கி பரோட்டா:
RADISH PAROTA
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு-1/4 கப்; முள்ளங்கித் துருவல்( உப்பு சேர்த்து, தண்ணீரை வடித்து வைத்துக்கொள்ளவும்); பொடியாக நறுக்கிய முள்ளங்கிக் கீரை ( நறுக்கியதும் தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.)- சிறிது; மிளகாய்த் தூள்- 1/2 ஸ்பூன்; எண்ணெய்-1/4 ஸ்பூன்; உப்பு- தேவைக்கேற்ப; கரம் மசாலத்தூள்-2 சிட்டிகை; பொடியாக நறுக்கிய பச்சை மிளகய்-காரத்துக்கேற்ப; பொடியாக நறுக்கிய வெங்காயம்- 1/4 கப்; ஓமம்-2 சிட்டிகை; எண்ணெய்-தேவைக்கேற்ப.
செய்முறை:
கடைசியாகக் கொடுத்துள்ள எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லாப் பொருட்களையும் கோதுமை ,மாவுடன் சேர்த்துப் பிசையவும். தேவையானால் மட்டும் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையவும். சப்பாத்திக்குத் தேவையான அளவு உருண்டைகளாக உருட்டி, கனமான சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுத்து சூடாகப் பறிமாறவும்.
3. முள்ளங்கி கீரை மசலா:
RADISH LEAVES
தேவையான பொருட்கள்;
கீரையுடன் இருக்கும் முள்ளங்கி- பெரிதாக -2; உப்புத் தண்ணிரில் வேக வைத்து எடுத்த முள்ளங்கிக் கீரை-1 கப்; எண்ணெய், உப்பு-தேவைக்கேற்ப; பெருங்காயம்-1/4 ஸ்பூன்; கடுகு-1 ஸ்பூன்; ஜீரகம்- 1/4 ஸ்பூன்; மிளகாய்த் தூள்- 1/2 ஸ்பூன்; மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்; சர்கக்ரை-1/2 ஸ்பூன்; ஆம்சூர் தூள்-1 ஸ்பூன் அல்லது எலுமிச்சை சாறு-1/2 ஸ்பூன்; கரம் மசாலா-1
செய்முறை:
முள்ளங்கியை சின்ன துண்டுகளாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போடவும். முள்ளங்கிக் கீரையையும் நறுக்கி அதில் சேர்க்கவும். உப்பு சேர்த்துப் பிசறி, சிறிது நேரம் வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், சீரகம் தாளிக்கவும். தயாராக வைத்துள்ள முள்ளங்கி மற்றும் அத்ன் கீரைத்துண்டுகளை அதில் சேர்க்கவும். நன்கு கலந்து வேகவைத்துள்ள முள்ளங்கிக் கீரையையும் சேர்த்துக் கிளறவும். மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கொஞ்சமாக் தண்ணீர் விட்டு வேக விடவும். 4 நிமிடங்கள் வெந்ததும், சர்க்கரை மற்றும் ஆம்சூர் தூள் அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கவும். மூள்ளங்கி நன்கு வெந்ததும் எடுத்துப் பறிமாறவும்.

No comments:

Post a Comment