Saturday, November 26, 2011

இறால் திதிப்பு

Posted On November 26,2011,By Muthukumar

தேவையான பொருட்கள்
தேங்காய் - 1/4 மூடி
சோம்பு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 கீறியது
இறால் - 1/2 கிலோ
சாம்பார் வெங்காயம் - 1/4 கிலோ (நறுக்கியது)
நாட்டுத்தக்காளி - 1/4 கிலோ நறுக்கியது
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
இஞ்சி, பூண்டு - சிறிதளவு தட்டவும்
உப்பு - தேவைக்கேற்ப
சோம்பு, கறிவேப்பிலை - சிறிதளவு (தாளிக்க)
செய்முறை
* இறாலைச் சுத்தம் செய்யவும். இஞ்சி பூண்டு தாளித்துக் கொள்ளவும். தேங்காய் சோம்பு அரைத்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
* வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.
* அரைத்து வைத்த மசாலாவைச் சேர்க்கவும். மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
* மசாலா திக்காக வரும்வரை சிறிது நீர் ஊற்றி கொதிக்க விடவும். குருமா பதத்தில் வந்ததும் இறாலைப் போடவும்.
* இறால் வெந்த பிறகு பச்சைக்கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சிறிது கிள்ளிப்போட்டு இறக்கவும்.
குறிப்பு
இதே முறைப்படி நெத்திலி திதிப்பும் செய்யலாம்.

No comments:

Post a Comment