Sunday, November 27, 2011

நெத்திலி கிரிஸ்பி வறுவல்

Posted On November 27,2011,By Muthukumar
தேவையானவை
நெத்திலி மீன் - 1/2 கிலோ
எலுமிச்சம்பழம் (சாறு) - 2 கரண்டி
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
எண்ணெய் - போதுமான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
அரிசி மாவு - 2 கைப்பிடி
மைதா மாவு - 1 கைப்பிடி
சோளமாவு - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை
* நெத்திலியைச் சுத்தம் செய்து கொள்ளவும். மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து கலவையாக்கவும்.
* நெத்திலியுடன் இந்த மாவு, மசாலா கலந்து சிறிது நீர் சேர்த்துப் பிசையவும். தேவைப்பட்டால் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.
* எண்ணையைக் காய வைத்து காய்ந்ததும் நெத்திலி மீனை சிறிது சிறிதாகப் போட்டு பொறித்து எடுக்கவும்.

No comments:

Post a Comment