Friday, January 30, 2015

மந்தாரைத் துவையல்

Posted By Muthukumar, On Jan 30,2015
purpurea
தேவையான பொருட்கள்:
மந்தாரை இலை- 100 கிராம்; மந்தாரைப் பூ-100 கிராம்; கொத்தமல்லி- ஒரு கைப்பிடியளவு; நல்லெண்ணெய்- தேவைக்கேற்ப; உளுத்தம் பருப்பு-2 மேஜைக் கரண்டி; காய்ந்த மிளகாய்-4; இஞ்சி- சிறிதளவு; புளி- சிறிதளவு; கடுகு- சிறிதளவு; ஜீரகம்- 1 தேக்கரண்டி; கறிவேப்பிலை- சிறிதளவு; உப்பு- தேவையான அளவு.
செய்முறை:
ஆய்ந்து வைத்திருக்கும் மந்தாரை இலை, பூ மற்றும் கொத்தமல்லியை எடுத்து ஒரு கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி வதக்கவும்.இன்னொரு கடாயில் உளுத்தம்பருப்பைப் போட்டு அது பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.பிறகு காய்ந்த மிளகாய், இஞ்சி, புளி, உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். கடைசியாக கடுகு, சீரகம் கறிவேப்பிலை தாளித்து, தயார் செய்து வைத்திருக்கும் கலவையை சேர்த்தால், நலம் தரும் மந்தாரைத் துவையல் தயார்.
பலன்கள்:
மந்தாரை இலையில் உள்ள நார்ச் சத்து, மற்றும், கெரட்டின், ஆஸ்த்மா, மலச் சிக்கல், ரத்த மூலம், சீதபேதி, நீரிழிவு உள்ளிட்ட வியாதிகளைத் தீர்க்கும். உடல் எடயைக் குறைக்க விரும்புபவர்களும் உடலை சீரான எடையில் வத்திருக்க விரும்புபவர்களும் மந்தாரை இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment