Friday, January 30, 2015

முடக்கத்தான் ரசம் – செய்வது எப்படி?:

Posted By Muthukumar,On Jan30,2015
cardiospermum
தேவையான பொருட்கள்:
முடக்கத்தான் இலை-100 கிராம்; மிளகு-1/2 தேக்கரண்டி; சீரகம்-1/2 தேகக்ரண்டி; பூண்டு-10 பற்கள்; தக்காளி-2 சிறிய வெங்காயம்–3; கொத்தமல்லி-சிறிதளவு; மஞ்சள்தூள்-1 சிட்டிகை; உப்பு-தேவையான அலவு; நல்லெண்ணெய்-தேவையான அளவு; தண்ணீர்- 500 மி.லி.

செய்முறை:
முடக்கத்தான் இலைகள், வெங்காயம், தக்காளி இவையனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி, அதில் மிளகு சீரகம், பூண்டு கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு இதையெல்லாம் போட்டு சிறிது நேரம் வதக்கவும். பிறகு, முதலில் நறுக்கி வைத்த பொருட்களை வாணலியில் போட்டு லேசாக வதக்கி, தண்ணீருடன், மஞ்சள்தூள் போட்டு, அது சுண்டிவரும் வரை காத்திருந்தால், முடக்கத்தான் ரசம் தயார்.

பலன்கள்:
வாதப் பிடிப்பு, முடக்குவாதம், உள்ளிட்ட வாத நோய்களுக்கும், வாய்வுப் பிரச்சினை, மூட்டுவலி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிக்கும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உள்ளது. பெண்களின் மாதவிடாய் பிரச்சினைக்கு இது உதவுகிறது, மேலும் முதுகுத் தண்டு வடத்தில் தேய்மானத்தினால் அவதிப்படுபவர்கள் இந்தக் கீரையை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment