Tuesday, June 9, 2015

சால்ட் ஃப்ரீ உணவுகள்:

Posted By Muthukumar,On June 9,2015

உணவில் உப்பைக் குறைக்கவேண்டிய அவசியம் நம்மில் எத்தனையோ பேருக்கு உள்ளது. சில ‘சால்ட் ஃப்ரீ’ உணவு வகைகள் கீழே தரப்பட்டுள்ளன:

தயிர் வடை:
DAHI VADA
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு-150 கிராம்; சோயா பீன்ஸ்-150 கிராம்;துருவிய இஞ்சி-ஒன்றரை டீ ஸ்பூன்; பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்-2; தயிர்- 300 கிராம்; பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை-ஒரு கைப்பிடியளவு.
பச்சை சட்னிக்கு தேவையானவை:
கொத்தமல்லித் தழை-1 கப்;
தயிர் வடைக்குத் தேவையானவை:
பொடியாக நறுக்கிய புதினா இலை- 1/4 கப்; வேர்க்கடலை-25 கிராம்; இஞ்சி பூண்டு விழுது-1/2 டீ ஸ்பூன்; பச்சை மிளகாய்-1; ஜீரகம்-1/4 டீஸ்பூன்.
சிவப்பு சட்னிக்குத் தேவையானவை:
புளிபேஸ்ட்-1/2 கப்; துருவிய வெல்லம்- 1/2 கப்; துருவிய பேரீச்சம் பழம்-2 டீஸ்பூன்; ஜீரகப் பொடி-1 டீஸ்பூன்.பொடியாக்கிய திராட்சை-2 டீஸ்பூன்.
செய்முறை:
சோயா பீன்ஸ் மற்றும் உளுத்தம் பருப்பை முதல் நாள் இரவே 6-7 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடிகட்டிவிட்டு, அவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். அரிந்து வைத்துள்ள பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கருவேப்பிலை இவற்றை அரைத்த மாவுடன் கலந்து பிசைந்து அதை வடை மாவு பதத்துக்கு கொண்டுவரவும். பின்னர் வடைகளாகத் தட்டி ஆவியில் 10-12 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். பச்சை மற்றும் சிவப்பு நிற சட்னிகளைத் தயார் செய்து கொள்ளவும். வடைகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து, அதன்மேல் சிவப்பு சட்னியை ஊற்றி, அதன் மேல் தயிரை ஊற்றி , அதன் மேல் பச்சை கலர் சட்னியைப் பரப்பி விடவும். அதன்மேல் லேசான மிளகய்ப் பொடியும் கருவேப்பிலையும் கொத்தமல்லித் தழையும் சேர்த்து தூவி ரெடி பண்ணவும்.
^^^^^^^^^^^^^
ஃப்ரூட் சாலட்:
FRUIT SALAD
தேவையானவை:
ஆப்பிள், வாழைப்பழம், மாம்பழம்,திராட்சை, ஸ்ட்ராபெரி மற்றும் சப்போட்டா ஆகிய பழங்களை நறுக்கிக்கொள்ளவும்.; ஒரு இளனி மற்றும் சிறிதளவு தேன்.
செய்முறை:
இளநீரைக் குடித்துவிட்டு, அதிலுள்ள வழுக்கையை சேகரித்து பழங்களுடன் கலக்கவும். அத்துடன் தேன் சேர்த்து சிறிது நேரம் ஃப்ரிஜ்ஜில் வைத்து ஜில்லென்று பறிமாறவும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஷஹி பனீர்:
SHAHI PANEER
தேவையான பொருட்கள்:
சிறு துண்டுகளாக்கிய பனீர்-200 கிராம்; நறுக்கிய தக்காளி-3; முந்திரிப் பருப்பு விழுது-2 1/2 டீஸ்பூன்; மஞ்சள் தூள்- -1/4 டீஸ்பூன்; மல்லித் தூள்-1 டீஸ்பூன்; மிளகாய்த் தூள்-1/2 ஸ்பூன்; ஜீரகப் பொடி-1/2 டீஸ்பூன்; இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்; கொத்தம்ல்லித் தழை-ஒரு கைப்பிடியளவு; எண்ணெய் -தேவையான அளவு.
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் இஞ்சி-பூண்டு விழுதைப் போட்டு வதகக்வும். தக்காளி மற்றும் மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, மற்றும் ஜீரகப் பொடியைக் கலந்து வதக்கவும். அத்துடன் முந்திரி விழுது மற்றும் பனீரைப் போட்டு வதக்கவும். 2 நிமிடம் கழித்து தண்ணீரை 1/2 கப் ஊற்றி, திக்காகும்வரை கொதிக்கவிடவும். கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கி வைக்கவும். சப்பாத்தியுடன் தொட்டுக்கொள்ள சுவையான டிஷ் ரெடி.

No comments:

Post a Comment