Tuesday, June 9, 2015

பிஸிபேளா பாத்

Posted By Muthukumar,On June 9,2015

BISIBELA BATH

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு-2 கப்; அரிசி-1 1/2 கப்; காய்கறிகள் ( உருளைக் கிழங்கு, பீன்ஸ், பச்சை பட்டாணி, குட மிளகாய் மற்றும் கேரட்) -3 கப்; மஞ்சள் தூள்-1 ஸ்பூன்; தேவையான அளவு உப்பு; புளிக் கரைசல்- 1 டேபிள் ஸ்பூன்; நெய்-2 டேபிள் ஸ்பூன்; வெல்லம்-20 கிராம்; எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்; கடுகு-1 ஸ்பூன்; கறிவேப்பிலை- ஒரு கைப்பிடியளவு; பெருங்காய பௌடர்-சிறிதளவு; அரிந்த வெங்காயம்- 250 கிராம்; முந்திரி பருப்பு-50 கிராம்; நிலக் கடலை-50 கிராம்; நெய்( தாளிக்க)-75 கிராம்;
பிஸிபேளா பாத் பௌடர்தயாரிக்க-
லவங்கப் பட்டை-3; சிவப்பு மிளகாய்- 50 கிராம்; கிராம்பு-2 கிராம்; ஏலக்காய்-2 கிராம்; கொத்தமல்லி விதை-1/4 கப்; கொண்டக் கடலை-2 டேபிள் ஸ்பூன்; துருவிய தேங்காய்-3 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
அரிசியையும் துவரம் பருப்பையும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து சிறிது எண்ணெய் கலந்து வைக்கவும். பிசிபேளா பாத் பௌடருக்குரிய பொருட்களை வறுத்து பொடி பண்ணவும். ஒரு வாயகல பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் விட்டு சூடாக்கவும். கடுகு போட்டு பொறிய விடவும். கறிவேப்பிலை, அரிந்த வெங்காயம் போட்டு கோல்டன் கலர் வரும் வரை வறுக்கவும். காய்கறிகள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். அத்துடன் வேக வைத்த சாதம் மற்றும் துவரம் பருப்பைச் சேர்க்கவும். நன்கு வேக விடவும். 2 ஸ்பூன் பிஸிபேளா பாத பௌடர் கலக்கவும். புளிக் கரைசல் மற்றும் வெல்லம் சேர்க்கவும். தேவைப்பட்டால், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ந்ன்றாகக் கலக்கவும். 15 நிமிடம் லேசான தீயில் வேக விடவும். பிஸிபேளாபாத் கொதித்து வரும்போது, தேங்காய்த் துருவல் சேர்க்கவும். நிலக் கடலை மற்றும் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துப் போடவும். பெருங்காயத்தூள் சேர்கக்வும். நெய் சேர்க்கவும். காரா பூந்தியுடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment