Thursday, June 18, 2015

சிக்கன் மஞ்சுரியன்



ஓட்டல்களுக்குச் சென்றால் நான் விரும்பிச் சாப்பிடும் சிக்கன் வெரைட்டி, இனிப்பும் காரமும் குடைமிளகாய் வாசமும், சுவையும் கலந்த
இந்த சிக்கன் மஞ்சுரியன் தான்…
ஒரு நாளாவது அதை வீட்டிலேயே செய்துசாப்பிட வே ண்டும் என்ற நீண்டநாள் ஆசை இப்போதுதான் நிறை வேறியது… ‘’ஞான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’’ என்று வாழ்வோரல்லவா நாம்!!! 
தேவையானவை…
போன்லெஸ் சிக்கன் – ½ கிலோ
குடை மிளகாய்– 2 (அல்) 3 (உங்கள் ரசனைக்கேற்ப)
பெரிய வெங்காயம்–2 (அல்) 3 (உங்கள் ரசனைக்கே ற்ப)
தக்காளி சாஸ் – 2 அல்லது 3 குழிக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
பூண்டு (உரித்தது) – ஒரு கையளவு
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
மைதா மாவு – ஒரு கையளவு
சோள மாவு –  ஒரு கையளவு
முட்டை – 2
தயிர் –  ஒரு கப்
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
கேசரி பவுடர் –  ½ ஸ்பூன்
எண்ணெய் – 250 ML
செய்முறை

முதலில் சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்ட போன் லெஸ் சிக்கனை ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு பிசைந்து நன்றாக கழுவிக்கொள்ளலாம். (மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி என்பதால் எப்போது அசைவம் செய்தாலும் அதைக்கழுவும்போதே மஞ்சள் தூள் போ ட்டு பிசைந்து கழுவுவது ஆரோக்கியமான ஒன்று…)
உரித்த பூண்டை மெல்லிய சிலைஸ் சிலைஸாக வெட் டிக்கொள்ளலாம். சிக்கன் மஞ்சுரியனுக்கு வெங்காயத் தை யும் குடை மிளகாயையும் வெட்டும் முறை மிக முக்கியமானது. வெங்காயத்தை ஒவ்வொரு லேயராக உரித்து சதுர வடிவிலான துண்டுகளாக வெட்டிக் கொ ள்ளலாம். குடை மிளகாயையும் அவ்வாறே… பச்சை மிளகாயை உங்களுக்கு விருப்பமான விதத்தில் வெட் டிக்கொள்ளலாம்.

ஒருகிண்ணத்தில் ஒரு கையளவு சோள மாவையும், ஒரு கையளவு மைதா மாவையும் கொட்டி அதில் சிறி தளவு உப்பும், கேசரி பவுடரும் சேர்த்து அதன் மீது இர ண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை மட்டும் ஊற் றி பிசைந்து கொள்ளவேண்டும்.

இப்படிப்பிசைந்த கலவையுடன் இப்போது சிக்கன் துண்டுகளையும் போட்டு பிசைந்து கொள்ளலாம்.

இப்படிப்பிசைந்த சிக்கன் துண்டுகளை ஒரு வாணலி யில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்…

அதன்பிறகு ஒரு ஃப்ரை பேனிலோ இல்லை கடாயி லோ சிக்கனைப்பொறித்த எண்ணையையே ஒரு குழி க்கரண்டி விட்டு எண்ணைய் சூடானவுடன் முதலில் நறுக்கிய பூண்டுகளை போட்டு வதக்கவும். பூண்டு சிறி து வதங்கியதும் அதில் இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். அடுத்து அதில் நறுக்கிய வெங்காயத்துண்டுகளையும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும். அடுத்து அதனுடன் நறுக்கிய குடை மிளகாயை போட்டு வதக்கவும்.

இப்போது இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு, அரை ஸ்பூன் கேசரி பவுடர் ஆகியவற்றைப் போ ட்டு வதக்கவேண்டும். இது சிறிதளவு வெந்தவுடன் இதி ல் ஒரு குழிக்கரண்டி தக்காளி சாஸ் விட்டு வதக்கவும். அடுத்து இதில் ஒரு கப் தயிர் விட்டு தேவைப்பட்டால் சிறிது தண்ணீரும் விட்டு வதக்கவும்.

தயிர் இந்த வதங்கலில் நன்றாகக்கலந்து கரைந்ததும் ஏற்கனவே பொறித்தெடுத்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை இதில் கொட்டி நன்றாக வதக்கவும். பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வெந்தவுடன் மீண்டு ம் ஒருமுறை ஒரு குழிக்கரண்டி தக்காளி சாஸ் விட்டு வதக்கி இறக்கிவிட்டால் சிக்கன் மஞ்சுரியன் ரெடி…  (தேவைப்பட்டால் வெங்காயம் மற்றும் குடைமிளகா யை வதக்கும்போதே சோயா சாஸ்ம், சிறிது வினிகரு ம் சேர்த்து வதக்கலாம். இல்லையென்றாலும் பரவாயி ல்லை.)

அடுத்து?… அடுத்து என்ன சுவையான சிக்கன் மஞ்சுரி யனை உங்களுக்கு விருப்பமான விதத்தில் ஒரு வெட்டு வெட்டவேண்டியதுதான்…!!!


கொத்துக்கறி புலாவ்


அருமையான மிகவும் ருசியான, சமைக்க‍வும் கொஞ்சம் எளிதான அசைவ உணவு வகையொன்றை
நாம் பார்க்க‍விருக்கிறோம். இதோ கொத்துக்கறி புலாவ்
தேவையானவை
கொத்துக் கறி – அரைக் கிலோ
சாதம் – 2 கப்
வெங்காயம் – ஒன்று (நீளமாக நறுக்கவும்)
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
புதினா – கைப்பிடி
பச்சைமிளகாய் – 4 (நீளமாக நறுக்கவும்)
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய்
பிரிஞ்சி இலை
பட்டை
செய்முறை
குக்கரில் கொத்துக்கறியுடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1/4 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். சாதத்தை சிறிது உப்பு போட்டு உதிரியாக வடித்து வைக்கவு ம். ஒரு கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் நீளமாக நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் நறுக்கிய புதினா இலைகளை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் அதனுடன் வேக வைத்த கொத்துக் கறி  தேவைப்பட்டால் உப்பு போட்டு நீர் சுண்டும் வரை கிளறவும். கொத்துக் கறி கலவையுடன் வடித்த சாதத்தை சேர்த்து அதனுடன் சிறிது மிளகாய்த்தூளை போட்டு கிளறி இறக்கவும். சுவையான கொத்துக் கறி புலாவ் ரெடி. சூடாக பரிமாறவும்.

Tuesday, June 9, 2015

சமையலறை டிப்ஸ்

Posted By Muthukumar,On June 9,2015
COOKING LADY
* வத்தக் குழம்பு செய்யும்போது சிறிது கார்ன் ஃப்ளவர் மாவைக் கரைத்து ஊற்றவும். சுவையும் சத்தும் கூடும்.
* வாழைப்பூ அடைக்கு பூவை அப்படியே நறுக்கிப் போடக்கூடாது. வாழைப்பூவை முக்கால் பதத்துக்கு வேக வைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, மாவில் கலந்து அடை செய்யவும். சுவையாக இருக்கும்.
* நுங்கை வாங்கி வந்ததும் சிறிது னேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும். பிறகு எடுத்து தோலை உரித்தால், எளிதாக வரும். ஜில்லென்று இருக்கும்.
* கூட்டு செய்யும்போது, உளுத்டஹ்ம் பருப்பு டஹ்னியா இவைகளை அரைத்து விட நேரம் இல்லையென்றால், பரவாயில்லை. கொஞ்சம் ரசப்பொடியைசேர்த்தால், அரைத்துவிட்ட அதே டேஸ்ட் கிடைக்கும்.
* முட்டைக் கோஸை பொடியாக நறுக்கி, வதக்கி மிளகாய், உப்பு சேர்த்து அரைத்தால், சுவையான ‘ கோஸ் துவையல்’ தயார்.
* எலுமிச்சை ஊறுகாய் போடுவதற்கு முன், நன்றாகக் கொதிக்கும் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரையைப் போட்டுக் கலக்கவும். பிறகு முழு பழங்களைப் போட்டு மூடி வைத்து விடவும். 10 நிமிடங்கள் கழித்து எடுத்து, நறுக்கி ஊறுகாய் போட்டால், மறுநாளே உபயோகிக்கலாம். கசப்பு அடியோடு இருக்காது.
* கிரைண்டர் குழவியை செங்குத்தாக வைத்துத்தான் கழுவ வேண்டும். படுக்கை வாக்கில் கழுவினால், பேரிங் பழுதாகிவிடும்.
* இட்லிக்கு உளுந்துக்குப் பதிலாக மொச்சை பயன்படுத்தலாம். அதிக ஊட்டச் சத்து கிடைக்கும். உளுந்துக்கும் இதற்கும் மணம், சுவையில் வேறுபாடு தெரியாது. செலவும் குறைவு.
* இட்லிக்கு மாவு அரைக்கும்போது, உளுந்தை சற்றுக் குறைத்துவிட்டு, இளம் வெண்டைக்காயை நறுக்கிப் போட்டு ஊற வைத்து அரைக்கவும். இட்லி மிருதுவாக வரும்.
* எள்ளூக் கொழுக்கட்டைக்கு எள்ளை வறுக்கும்போது அத்துடன் கொஞ்சம் கசகசாவையும் வறுத்துப் பொடித்துச் சேர்த்தால், சுவையும் வாசனையும் அள்ளும்.
* அதிரசம் செய்யும்போது, மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால், மிகவும் ருசியாக இருக்கும். தேகுழல், ஓமப்பொடி செய்யும்போது உருளைக் கிழங்கை வேஅக் வைத்து ,மாவுடன் கலந்து பிசைந்தால், சுவை கூடும்.
* அரிசி மாவில் செய்வது போலவே கோதுமை மாவு, மைதா, ரவையிலும் தட்டை, முறுக்கு செய்யலாம்.
* பனீர் பொறிக்கும்போது, எண்ணெயில் சிறிதளவு உப்பு போட்டு, பொறித்தால், சீராகப் பொறியும். சாதாரணமாகப் பொறிக்கும்போது சில இடங்களில் கருகுவது போல கருகவும் செய்யாது.
* காலிஃப்ளவரை ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது, ப்ளாஸ்டிக் கவரில் போட்டு வைக்கக் கூடாது. அடியில் உள்ள கிடிஸ்டரில் வைக்கலாம். அதிலும் தண்டுப் பகுதி மேற்புறமாக இருக்கும்படி வைத்தால் ஈரம் பூவின் மேல் தாக்காது.
* ஜாங்கிரிக்கு நீரில் ஊற வைத்த உளுத்தம்பருப்பை விழுதாக அரைத்தவுடன் ஒரு கப் உளுந்து விழுதுக்கு ஒரு டீஸ்பூன் அரிசிமாவைக் கலந்து பிழிந்தால், உடையாமல் முழுதாக வரும்.
* வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தைக் கரையவிட்டு, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்தால், அப்பம் புஸ்ஸென உப்பி வரும்.

பிஸிபேளா பாத்

Posted By Muthukumar,On June 9,2015

BISIBELA BATH

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு-2 கப்; அரிசி-1 1/2 கப்; காய்கறிகள் ( உருளைக் கிழங்கு, பீன்ஸ், பச்சை பட்டாணி, குட மிளகாய் மற்றும் கேரட்) -3 கப்; மஞ்சள் தூள்-1 ஸ்பூன்; தேவையான அளவு உப்பு; புளிக் கரைசல்- 1 டேபிள் ஸ்பூன்; நெய்-2 டேபிள் ஸ்பூன்; வெல்லம்-20 கிராம்; எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்; கடுகு-1 ஸ்பூன்; கறிவேப்பிலை- ஒரு கைப்பிடியளவு; பெருங்காய பௌடர்-சிறிதளவு; அரிந்த வெங்காயம்- 250 கிராம்; முந்திரி பருப்பு-50 கிராம்; நிலக் கடலை-50 கிராம்; நெய்( தாளிக்க)-75 கிராம்;
பிஸிபேளா பாத் பௌடர்தயாரிக்க-
லவங்கப் பட்டை-3; சிவப்பு மிளகாய்- 50 கிராம்; கிராம்பு-2 கிராம்; ஏலக்காய்-2 கிராம்; கொத்தமல்லி விதை-1/4 கப்; கொண்டக் கடலை-2 டேபிள் ஸ்பூன்; துருவிய தேங்காய்-3 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
அரிசியையும் துவரம் பருப்பையும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து சிறிது எண்ணெய் கலந்து வைக்கவும். பிசிபேளா பாத் பௌடருக்குரிய பொருட்களை வறுத்து பொடி பண்ணவும். ஒரு வாயகல பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் விட்டு சூடாக்கவும். கடுகு போட்டு பொறிய விடவும். கறிவேப்பிலை, அரிந்த வெங்காயம் போட்டு கோல்டன் கலர் வரும் வரை வறுக்கவும். காய்கறிகள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். அத்துடன் வேக வைத்த சாதம் மற்றும் துவரம் பருப்பைச் சேர்க்கவும். நன்கு வேக விடவும். 2 ஸ்பூன் பிஸிபேளா பாத பௌடர் கலக்கவும். புளிக் கரைசல் மற்றும் வெல்லம் சேர்க்கவும். தேவைப்பட்டால், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ந்ன்றாகக் கலக்கவும். 15 நிமிடம் லேசான தீயில் வேக விடவும். பிஸிபேளாபாத் கொதித்து வரும்போது, தேங்காய்த் துருவல் சேர்க்கவும். நிலக் கடலை மற்றும் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துப் போடவும். பெருங்காயத்தூள் சேர்கக்வும். நெய் சேர்க்கவும். காரா பூந்தியுடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.

சால்ட் ஃப்ரீ உணவுகள்:

Posted By Muthukumar,On June 9,2015

உணவில் உப்பைக் குறைக்கவேண்டிய அவசியம் நம்மில் எத்தனையோ பேருக்கு உள்ளது. சில ‘சால்ட் ஃப்ரீ’ உணவு வகைகள் கீழே தரப்பட்டுள்ளன:

தயிர் வடை:
DAHI VADA
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு-150 கிராம்; சோயா பீன்ஸ்-150 கிராம்;துருவிய இஞ்சி-ஒன்றரை டீ ஸ்பூன்; பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்-2; தயிர்- 300 கிராம்; பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை-ஒரு கைப்பிடியளவு.
பச்சை சட்னிக்கு தேவையானவை:
கொத்தமல்லித் தழை-1 கப்;
தயிர் வடைக்குத் தேவையானவை:
பொடியாக நறுக்கிய புதினா இலை- 1/4 கப்; வேர்க்கடலை-25 கிராம்; இஞ்சி பூண்டு விழுது-1/2 டீ ஸ்பூன்; பச்சை மிளகாய்-1; ஜீரகம்-1/4 டீஸ்பூன்.
சிவப்பு சட்னிக்குத் தேவையானவை:
புளிபேஸ்ட்-1/2 கப்; துருவிய வெல்லம்- 1/2 கப்; துருவிய பேரீச்சம் பழம்-2 டீஸ்பூன்; ஜீரகப் பொடி-1 டீஸ்பூன்.பொடியாக்கிய திராட்சை-2 டீஸ்பூன்.
செய்முறை:
சோயா பீன்ஸ் மற்றும் உளுத்தம் பருப்பை முதல் நாள் இரவே 6-7 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடிகட்டிவிட்டு, அவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். அரிந்து வைத்துள்ள பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கருவேப்பிலை இவற்றை அரைத்த மாவுடன் கலந்து பிசைந்து அதை வடை மாவு பதத்துக்கு கொண்டுவரவும். பின்னர் வடைகளாகத் தட்டி ஆவியில் 10-12 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். பச்சை மற்றும் சிவப்பு நிற சட்னிகளைத் தயார் செய்து கொள்ளவும். வடைகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து, அதன்மேல் சிவப்பு சட்னியை ஊற்றி, அதன் மேல் தயிரை ஊற்றி , அதன் மேல் பச்சை கலர் சட்னியைப் பரப்பி விடவும். அதன்மேல் லேசான மிளகய்ப் பொடியும் கருவேப்பிலையும் கொத்தமல்லித் தழையும் சேர்த்து தூவி ரெடி பண்ணவும்.
^^^^^^^^^^^^^
ஃப்ரூட் சாலட்:
FRUIT SALAD
தேவையானவை:
ஆப்பிள், வாழைப்பழம், மாம்பழம்,திராட்சை, ஸ்ட்ராபெரி மற்றும் சப்போட்டா ஆகிய பழங்களை நறுக்கிக்கொள்ளவும்.; ஒரு இளனி மற்றும் சிறிதளவு தேன்.
செய்முறை:
இளநீரைக் குடித்துவிட்டு, அதிலுள்ள வழுக்கையை சேகரித்து பழங்களுடன் கலக்கவும். அத்துடன் தேன் சேர்த்து சிறிது நேரம் ஃப்ரிஜ்ஜில் வைத்து ஜில்லென்று பறிமாறவும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஷஹி பனீர்:
SHAHI PANEER
தேவையான பொருட்கள்:
சிறு துண்டுகளாக்கிய பனீர்-200 கிராம்; நறுக்கிய தக்காளி-3; முந்திரிப் பருப்பு விழுது-2 1/2 டீஸ்பூன்; மஞ்சள் தூள்- -1/4 டீஸ்பூன்; மல்லித் தூள்-1 டீஸ்பூன்; மிளகாய்த் தூள்-1/2 ஸ்பூன்; ஜீரகப் பொடி-1/2 டீஸ்பூன்; இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்; கொத்தம்ல்லித் தழை-ஒரு கைப்பிடியளவு; எண்ணெய் -தேவையான அளவு.
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் இஞ்சி-பூண்டு விழுதைப் போட்டு வதகக்வும். தக்காளி மற்றும் மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, மற்றும் ஜீரகப் பொடியைக் கலந்து வதக்கவும். அத்துடன் முந்திரி விழுது மற்றும் பனீரைப் போட்டு வதக்கவும். 2 நிமிடம் கழித்து தண்ணீரை 1/2 கப் ஊற்றி, திக்காகும்வரை கொதிக்கவிடவும். கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கி வைக்கவும். சப்பாத்தியுடன் தொட்டுக்கொள்ள சுவையான டிஷ் ரெடி.

செட்டிநாடு மீன் பிரியாணி




சுவையான நம்ம‍ செட்டிநாடு மீன் பிரியாணி எப்ப‍டிசெய்வது என்று
பார்ப்போமா?
என்னென்ன தேவை?
பாஸ்மதி அரிசி –3/4 கிலோ
மீன் – 3/4 கிலோ (பெரிய வகை)
வெங்காயம் – 3
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 3
இஞ்சி, பூண்டு விழுது – 3 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை – தலா 2
தயிர் – ஒன்றரை கப்
மிளகாய் தூள் – 2 + 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் –1 + 1/2 தேக்கரண்டி
வெள்ளை மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் – அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி
கெட்டி தேங்காய் பால் – ஒரு கப்
எலுமிச்சை சாறு – ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய், புதினா, மல்லித்தழை, உப்பு–தேவையா ன அளவு.
எப்படிச் செய்வது?
மீனை சுத்தம் செய்து கொள்ளவும். மீனுடன் அரை தேக் கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு மேசைக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும்.
அரிசியை ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். பிரட்டிவைத்தமீனை தவாவில் போட்டு அரை பதமாக பொரித்தெடுத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ் சி இலை தாளிக்கவும். பின் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கி, பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது, சோம்பு தூள்சேர்த்து வதக்கவும்.
தனுடன் தக்காளி, மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு கிளறிவிடவும். பின் மல்லித் தழை, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விட்டு, தயிர், தேங்காய் பால், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறிவிட்டு 2 நிமிடம் வேக விடவும்.
பிறகு பொரித்த மீன் துண்டுகளைப் போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு, மீனை தனியாக எடுத்து வைக்கவும். குருமாவில் மீன் பொரித்த எண்ணெயை ஊற்றவும். பின் அரிசியைக் களைந்து குருமா வில் போட்டு, பன்னீர் சேர்த்து மூடி போட்டு 15நிமிடம் சிம்மில் வேகவிடவும். பின் நன்கு கிளறி விட்டு, மீன் துண்டு களைப் போடவும். மல்லி த் தழை தூவி இறக்கவும்.