Thursday, March 19, 2015

வரகு அரிசி காளான் பிரியாணி

Posted By Muthukumar ,On March 19,2015
kodo millet-mushroom biriyani
வரகு அரிசி-1/4 கிலோ; காளான்-50 கிராம்; வெங்காயம்-1 பெரியது; தக்காளி – 1 பெரியது; எண்ணெய்- தேவையான அளவு; நெய்-சிறிதளவு; தயிர்-1 தேக்கரண்டி; பச்சை மிளகாய்- 2 ஏலக்காய்-3; மிள்காய்ப் பொடி-1 தேக்கரண்டி; மல்லிப் பொடி-1 தேக்கரண்டி; கரம் மசாலா பொடி-1/4 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு, பட்டை, சோம்பு. இலவங்கம். புதினா, கொத்தமல்லி, மஞ்சள்- சிறிதளவு.
செய்முறை:
வரகு அரிசி மற்றும் காளானைக் கழுவி, வைத்துக்கொள்ளவேண்டும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிகொள்ளவேண்டும். தக்காளி, புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம், சோம்பு, இலவங்கம் போட்டுத் தாளிக்கவேண்டும். பின், வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது தக்காளி , புதினா, கொத்தமல்லி, சேர்க்கவேண்டும். அதோடு காளான், மற்றும் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, கரம் மசாலா பொடி, தயிர் சேர்த்து, வதக்கவேண்டும். பின் கழுவி வைத்துள்ள வரகு அரிசியுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வரும்வரை, வைத்து இறக்கினால், கமகமக்கும் வரகு அரிசி காளான் பிரியாணி தயார்.
பயன்கள்:
அரிசி கோதுமையைவிட , வரகு அரிசியில் நார்ச் சத்து அதிகம். மாவுச் சத்து குறைவாகக் காணப்படுவதால், உடலுக்கு நல்லது. இரும்பு, கால்சியம், மற்றும் விட்டமின்-பி கொண்டதாகவும் உள்ளது, தாதுப் பொருட்களும் நிரம்பஉள்ளன.

No comments:

Post a Comment