Wednesday, October 1, 2014

சோலாப்பூரி


தேவையான பொருட்கள்

    மைதா – 2 கப்
    ரவை – 1/2 கப்
    தண்ணீர் – 1 1/2கப்
    உப்பு – 1/2 தேக்கரண்டி
    சோடா உப்பு – ஒரு சிட்டிகை
    எண்ணெய் – 2 கப்
 செய்முறை
மைதா, ரவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். தண்ணீரில் உப்பு, சோடா உப்பு இரண்டையும் கலந்து மாவில் ஊற்றி நன்கு பிசையவும். ஓரளவிற்கு பதமாக பிசைந்தவுடன் சூடான எண்ணெய் ஊற்றி மீண்டும் நன்கு பிசைந்து கொள்ளவும்.
45 நிமிடங்கள் ஊற விடவும்.
பிசைந்த மாவினை சிறுசிறு உருண் டைகளாக உருட்டிக் கொள்ளவு ம்.
பிறகு அவற்றை சப்பாத்தி வடிவில் தேய்த்துக் கொள்ளவும்.
சிறு தடிமனாகவும் தேய்க்கவும். அப் பொழுதுதான் பூரி உப்பி வரும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொன்றாக அதில் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
இருபுறமும் திருப்பிப் போட்டு சற்று பொன்னிறம் வந்தவுடன் எடுத்து எண்ணெய் வடியவிட வேண்டும்.
குறிப்பு: குருமா பகுதியில் கொண்டைக்கடலை சப்ஜி இதற்கு ஏற்றது.

செட்டிநாட்டு கோழிக்குழம்பு


தேவையானவை :
கோழி – அரை கிலோ
மஞ்சள்பொடி – 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி – 3ஸ்பூன்
தனியா பொடி – 4ஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 2
மிளகு – 1ஸ்பூன்
சீரகம் – 1ஸ்பூன்
வெங்காயம் – 1
உப்பு – 11/2 ஸ்பூன்
சோம்பு – 1ஸ்பூன்
பூண்டு – 6 பல்
இஞ்சி – ஒரு துண்டு
நல்லெண்ணெய் – 4ஸ்பூன்
சோம்பு – 1/2ஸ்பூன்
வெந்தயம் – 1/2ஸ்பூன்
பட்டை – 2
கிராம்பு – 1
அன்னாசிப்பூ – 2
செய்முறை :
1.ஒரு வாணலியில் மிளகு, சீரகம், சோம்பு ஆகிய மூன்றையும் வறு த்து பூண்டு, இஞ்சி, வெங்காயாம் சேர்த்து அரைத்து மஞ்சள் பொடி சேர்த்து கோழியுடன் பிசறவும்.
2.அதே வாணலியில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவ ற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, பிசறிய கோழியை சேர்த்து பத்து நிமிடம் கிளறவும்.
3.மசாலா நன்கு வதங்கியதும் மிளகாய்ப்பொடி, தனியா பொடி சேர் த்து கிளறி தேவையான தண்ணீர்விட்டு உப்புசேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கொதித்து வற்றி எண்ணெய் மிதந்தவுடன் இறக்கவும்.

அட்டுக்குலு தோசை


தேவையான பொருட்க‌ள் 
அவல் – 1 கப்
தயிர் – 1 கப்
பச்சரிசி – 1 கப்
புழுங்கல் அரிசி – 1 கப்
உளுந்து – கால் கப்
வெந்தயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை
பச்சரிசி, புழுங்கல் அரிசியை தனித்தனியாக ஊறவையுங்கள். உளுந்தில் வெந்தயத்தைச் சேர்த்து தனியாக ஊற வையுங்கள். அவலை தயிரி ல் ஊற வையுங்கள். அனைத்தும் 3 மணி நேரமாவது ஊறவேண்டும். பின்னர் அனைத்தையும் தனித்தனியாக அரைத்து தேவையானளவு உப்புச்சேர்த்து முதல் நாள் இரவே கரைத்து புளிக்க வையுங்கள். மறுநாள் காலை தோசைக் கல் லில் லேசான எண்ணெய் விரவி மிருதுவாக மாவை ஊற்றி தோசை வார்த்து இரு புறமும் வெந்தபிறகு எடுங்கள். பஞ்சு பஞ்சான ஆந்திர ‘அட்டுக்குலு தோசை’ ரெடி.

Monday, September 22, 2014

இடியாப்பம்

Posted on  by Muthukumar

சமையல் குறிப்பு – இடியாப்பம்
சுவையான இடியாப்பம் செய்வதற்கான எளிய சமையல் குறிப்பு. 
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி – 3 கப்
பச்சரிசி – ஒரு கையளவு
உப்பு – 2 1 /2 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
அரிசியை வெது வெதுப்பான
நீரில் 1 1 /2 மணி முதல் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
நல்ல விழுதாக அரைத்து கடைசியில் உப்பு சேர்க்கவும்.
சிறிது தண்ணீர் ஊற்றிக் கரைத்து உடனே இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேக வைக்கவும்.
இட்லி சூடாக இருக்கும்பொழுதே இடியாப்ப அச்சில் எண்ணெய் தடவி அழுத்தினால் நூல் நூலாக வரும்.(இட்லியை ஆற வைக்கக் கூடாது).
எல்லா மாவையும் ஊற்றி, அழுத்தி முடித்தவுடன் வெ ள்ளை இடியாப்பத்தை ஆற விடவும்.
ஒரு அகலமான தட்டில் பரப்பி, கையில் எண்ணெய் தடவிக் கொண்டு கவனமாகப் பிரித்து விடவும்.
இந்த அடிப்படையான இடியாப்பத்தை வைத்து பலவிதமாக தாளித்து இடியாப்ப வகைகள் தயாரிக்கலாம்.
வெள்ளை இடியாப்பத்தை குருமாவுடன் பரிமாறலாம்.
இடியப்பத்திற்கு குருமாவுடன், சர்க்கரை , பால் அல்லது தேங்காய்ப்பால் சேர்த்தும் சாப்பிடலாம். அல்லது தேங்காய் துரு வி சேர்த்துக் கொள்ளலாம்.

Wednesday, September 17, 2014

ஹைதராபாதி நிஜாமி பிரியாணி


ஹைதராபாத் தம் பிரியாணி என்றா லே அனைவருக்கும் நாவில் நீர் ஊறும் அதிக மசாலா இல்லாத தக்காளி சேர்க்காமல் 40,45 நிமிடங்கள் வரை தம்மில் குறைந்ததீயில் வேகவைப்பது
. பப்பாளிகாய் சேர்ப்பதால் மட்டன் சீக்கிரம் வேகும்.
தேவையான பொருட்கள்
– மட்டனுடன் ஊறவைக்க‌
மட்டன் எலும்புடன் ‍ 600 கிராம் 
தயிர் ‍ 200 கிராம்
சிவப்பு மிளகாய் தூள் ‍ 2 தேக்கரண்டி
கரம் மசாலா பவுடர் ‍ 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் ‍ 1/4 தேக்க்ரண்டி
வறுத்த வெங்காயம் ‍ 100 கிராம்(Fried Onion)
இஞ்சி பூண்டு விழுது ‍ 50 கிராம்
முந்திரி ( அரைத்தது) 50 கிராம்
பப்பாளி காய் அரைத்தது ‍ 25 கிராம்
எண்ணை ‍ 4 மேசைகரண்டி
சாதம் வேக வைக்க‌
தண்ணீர் ஓன்னறை லிட்டர்
தரமான பாசுமதி அரிசி ‍ 500 கிராம்
பட்டை , லவஙகம் , ஏலம் ‍ சிறிது
கருப்பு சீரகம் ( ஷாஹீரா)
கொத்துமல்லி தழை ‍ ஒரு கட்டு
புதினா ‍ஒரு கட்டு
பொடியாக அரிந்த பச்சை மிளகாய்
குங்குமபூ ஒரு பின்ச் 5 மேசைகரண்டி சூடான பாலில் ஊறவைத்தது
எலுமிச்சை சாறு ‍ இரண்டு தேக்கரண்டி
சப்பாத்தி மாவு ‍ 100 கிராம்
அவித்த முட்டை ‍ 2 (4 ஆக கீறியது)
செய்முறை
முதலில் வறுத்த வெங்காயம் தயார் செய்து வைத்து கொள்ளவும்,
வெறும் தவ்வாவில் கொஞ்சமாம எண்ணை விட்டு வெங்காயத்தை வறுத்து வைத்துகொள்ளவும்.
மட்டனை சுத்தம் செய்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மட்டன், தயிர், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு, கரம்மசலா, வறுத்த வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, அரைத்த பப்பாளி விழுது, அரைத்த முந்திரி விழுது எல்லாவற்றையும் சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவிட்டு அதில் எண்ணை + உப்பு சேர்த்து , அரிசியை களைந்து சேர்த்து பட்டை லவங்கம் ஏலம், ஷாஜீரா, சிறிது கொத்து மல்லி புதினா சேர்த்து அரை வேக்காடாக வடித்து வைக்கவும்.வடித்த சாதத்தை முன்று பாகங்களாக பிரிககவும்
.
ஊறவைத்த மட்டனை இரண்டு அல்லது முன்று பாகமாக பிரித்து வைக்கவும்
அடிகனமான பாத்திரத்தில் முதலில் ஊறவைத்த மட்டன் கலவை, அடுத்து முக்கால் பாகம் வேகவைத்த அரிசி , அடுத்து வறுத்த வெங் காயம் அடுத்து கொத்துமல்லி, புதினா தழைபோட்டு சமப்படுத்தவும்.
(இதே போல் மீதி உள்ள அரிசி மற்றும் மட்டன், மற்ற பொருட்களை யும் அதே போல் லேயராக வைத்து சமப்படுத்தவும்). ( நான் இதில் இரண்டு லேயர்கள் மட்டும் போட்டுள்ளேன்.
மேலும் அடுத்த பகுதி அரிசியை சேர்த்து சமப்படுத்தி அதன் மேல் கொஞ்சம் ஊறவைத்த மட்டனை வைக்கவும், அதன் மேல் சிறிது சாப்ரான் பால், கொத்துமல்லி புதினா தழை, அரிந்த பச்சை மிளகா ய், வறுத்த வெங்காயம் அனைத்தையும் தூவவும்..
சப்பாத்தி மாவை கயிறு போல் திரித்து பாத்திரத்தின் விளிம்பின் வாய் பகுதியில் சுற்றிலும் ஒட்டவும். பாத்திரத்தை மூடி 30 நிமிடம் சிறு தீயில் தம் போடவும்.
அரை மணி நேரம் தம்மில் விடவும். பிறகு தம் போடும் கருவியை கேஸ் அடுப்பின் மேல் சட்டிக்கு கீழ் வைத்து சிம்மில் 20 நிமிடம் வைக்கவும்.
சப்பாத்தி மாவு இல்லாமலும் தம் போடலாம். பிரியாணி சட்டி நன்கு இறுகலாக முடி இருக்கனும் அவ்வளவுதான்.
தம் போடுவதை முன்று முறைகளாக செய்யலாம்.
1. அடிகணமான தவ்வாவை அடுப்பின் மேல் வைத்து பிரியாணி சட்டியை ஏற்றி கணமான ஈரடவலை வைத்துமேலே மூடி போட்டு சூடானா கஞ்சி அல்லது, நெருப்பு கங்குகள் வைத்து தம் போடலாம்.
2. அடிகணமான தவ்வாவை அடுப்பின் மேல் வைத்து பிரியாணி சட்டியை ஏற்றி பாயில் பேப்பரை போட்டு மூடி போட்டு அதன்மேல் சூடானா கஞ்சி வைத்து தம் போடலாம்.
3. அடிகணமான தவ்வாவை அடுப்பின் மேல் வைத்து பிரியாணி சட்டியை ஏற்றி மூடி போட்டு மூடிக்கு பேப்பர் கிளிப்கள் பொருத்தி அதன் மேல் வடித்த சூடான கஞ்சியை ஏற்றி தம் போடலாம்.
சும்மா சும்மா இடையில் திறந்து கிளற கூடாது.
தம் போட்டு முடிந்ததும் எடுத்து லேசாக கிளறி விட்டு பரிமாறும் தட் டில் வைத்து சிறிது வறுத்த வெங்காயம், அவித்த முட்டை , கொத்து மல்லி தழை அல்லது புதினா தழை வைத்து அலங்கரித்து பரிமாற வும்.
சுவையான ஹைதராபாதி நிஜாமி பிரியாணி ரெடி.

Thursday, July 31, 2014

நாட்டுக்கோழி குழம்பு (பிரியாணிக்கு ஏற்ற சைடிஸ்)


சமையல் குறிப்பு – நாட்டுக் கோழி குழம்பு (பிரியாணிக்கு ஏற்ற சைடிஸ்)- இது முனியாண்டி விலாஸ் ஸ்பெஷல்
தேவையான பொருட்கள்
நாட்டுக்கோழி – 1 கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 3
தேங்காய் பால் – 1 கப்
மஞ்சள் தூள் – கால் டீ ஸ்பூன்
குழம்பு மசாலா தூள் – 3 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்
மல்லி தூள் – 2 டீ ஸ்பூன்
தேக்கரண்டி சோம்பு – 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – 1கொத்து
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – 4 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மசாலா
செய்முறை
சின்ன வெங்காயத்தை உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும். தக் காளியை நறுக்கி வைக்கவும். வாணலியில் சிறிதளவு
எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோ ம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக் கவும்.
இத்துடன் பாதி அளவு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியது ம் இத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து நன்றாக வதக்க வும். ஆறவைத்து மிக்ஸிசியில் மசாலா வாக நைசாக அரைக்கவும். குழம்பு செய்முறை நாட்டுக் கோழியை நன் றாக கழுவிபொடியாக நறுக்கி வை த்துக் கொள்ளவும். குக்கரில் எண் ணெய்விட்டு காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். மஞ்சள் தூள், குழம்பு மசாலா சேர்த்து வதக்கவும். இதில் கோழியை சேர்த்து நன்றாக கிளறவும். அப்போது தேவையா ன அளவு உப்புபோட்டு வதக்க வும்.
சிறிது நேரம் விசில் போடாமல் மூடிவைக்கவும். 5 நிமிடம் கழி த்து குக்கரை திறந்து அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கி ளறவும். இதனுடன் தேங்காய் பால் சேர்த்து குக்கரை மூடி போட்டு விசில் விடவும். நாட்டு கோழி என்பதால் 5 விசில்வரைவிடலாம், அப்பொழுதுதான் நன்றா க வெந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
விசில் இறங்கின உடன் மல்லித்தழை தூவவும். காரசாரமான நாட் டுக்கோழி தயார். சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம். பிரியாணி க்கு ஏற்ற சைடு டிஸ் இது (முனியாண்டி விலாஸ் ஸ்பெஷல்).

Sunday, August 12, 2012

பட்டர் முறுக்கு

Posted On Aug 12,2012,By Muthukumar
தேவையானப்பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்
கடலை மாவு - 1/2 கப்
பொட்டுகடலை மாவு - 1/4 கப்
வெண்ணை - 3 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

பொட்டுகடலை மாவிற்கு - 1/4 கப்பிற்கு சற்று கூடுதலாக பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து சலித்து தேவையான மாவை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அரிசி மாவு மற்றும் கடலை மாவையும் சலித்து எடுத்து, அத்துடன் பொட்டுக்கடலை மாவையும் சேர்த்து கலந்துக் கொள்ளவும். அத்துடன் வெண்ணை, பெருங்காயத்தூள், சீரகம், உப்பு சேர்த்து மீண்டும் நன்றாகக் கலந்து, தேவையான அளவு தண்ணீரை விட்டு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கவும்.  முறுக்கு அச்சில் ஒற்றை கண் நட்சத்திர வடிவிலான வில்லையைப் போட்டு, மாவை அதில் போட்டு எண்ணையில் சிறு சிறு வட்டங்களாக பிழிந்து விடவும்.  முறுக்கை திருப்பி விட்டு நன்றாக வெந்ததும் எடுத்து வைக்கவும்.