Showing posts with label காய்கறி-பழ. Show all posts
Showing posts with label காய்கறி-பழ. Show all posts

Tuesday, December 30, 2014

காய்கறி-பழ சாதம்

Posted By Muthukumar,On Dec 30,2014
காய்கறி-பழ சாதம்:
VEGETABLE FRUIT RICE
தேவை:
உதிர் உதிராக வடித்த பாசுமதி அரிசி சாதம்-4 தம்ளர்; முளை கட்டிய தானியங்கள், துருவிய காய்கறிகள்- தலா 2 தம்ளர்; நறுக்கிய ஆப்பிள், அன்னாசிப் பழம், மாம்பழம் திராட்சை சேர்ந்த பழக் கலவை-2 தம்ளர்; பாதாம், முந்திரி, காய்ந்த திராட்சை கலவை -கால் தம்ளர்; நெய்-4 தேக்கரணடி; மசாலாப் பொடி-2 தேக்கரண்டி; மிளகுத் தூள்-1 தேக்கரண்டி; உப்பு.
செய்முறை:
முந்திரி, திராட்சை, பாதாமை நெய்யில் லேசாக வறுத்து சாதத்தில் சேர்க்கவும். இதில் உப்பு, மிளகுப் பொடி, மசாலாப் பொடி, பழக் கலவையைக் கலக்கவும். உப்பும் புளிப்பும் தித்திப்புமாக மணக்கும் இந்த சாதம், விளையாடும் குழந்தைகளுக்கு ஏற்றது. வேகவைத்த தானியங்களும், நறுக்கிப் போடட் பழங்களும், வண்ண வண்ண காய்கறித் துருவல்களுமாக பார்க்க அழகாகவும் சாப்பிட அறுசுவையாகவும் இருக்கும்.