Posted On April 04,2012,By Muthukumar குழிப்பணியாரம் ( ஆப்ப மாவு)(முதல் முறை)
* ஆப்ப மாவு – ஒரு கிண்ணம்
* தோசை மாவு – 3/4 கிண்ணம்
* வெங்காயம் – ஒன்று
* பச்சை மிளகாய் – ஒன்று
* தாளிக்க:
* எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
* கடுகு – ஒரு தேக்கரண்டி
* உளுந்து – ஒரு தேக்கரண்டி
வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற
தேவையானவைகளையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து
கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு
வதக்கவும்.இரண்டு மாவையும் ஒன்றாக ஒரு கிண்ணத்தில் ஊற்றி வதக்கிய
வெங்காயம், பச்சைமிளகாய் கலவையை போட்டு நன்றாக கலக்கவும்.குழிசட்டியை
அடுப்பில் வைத்து குழியின் பாதிக்கு எண்ணெய் ஊற்றி ஒரு சின்னகரண்டியால் ஒரு
கரண்டி மாவை ஊற்றவும். பணியாரம் ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு
மறுபக்கம் வேக வைக்கவும்.சுவையான குழிப்பணியாரம் ரெடி. தேங்காய் சட்னி,
வெங்காய சட்னி, கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.
குழிப் பணியாரம்/கார வகை(2nd முறை)
* புளித்த இட்லி மாவு – நான்கு கோப்பை
* சோடா உப்பு – ஒரு சிட்டிகை
* வெங்காயம் நறுக்கியது – அரைக்கோப்பை
* பச்சைமிளகாய் நறுக்கியது – இரண்டு
* இஞ்சி நறுக்கியது – ஒரு தேக்கரண்டி
* கடுகு சீரகம் கலந்தது – ஒரு தேக்கரண்டி
* உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி
* கொத்தமல்லி நறுக்கியது – ஒரு மேசைக்கரண்டி
* எண்ணெய் – கால் கோப்பை
* இட்லிமாவில் ஒரு சிட்டிகை சோடாவைச் சேர்த்து கலந்துவைக்கவும்.
* ஒரு சிறிய சட்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெயை காயவைத்து
கடுகுசீரகத்தை போட்டு வெடிக்கவிட்டு உளுத்தப்பருப்பைப் போட்டு சிவக்க
வறுக்கவும்.
* பிறகு வெங்காயம், பச்சைமிளகாய், karuvepillai இஞ்சியைச் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் வெந்தவுடன் கலவையை மாவில் கொட்டவும். அதனுடன் கொத்தமல்லியையும் போட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும்.
* பிறகு குழிப்பணியார சட்டியின் குழிகளில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை
ஊற்றவும், எண்ணெய் காய்ந்ததும் மாவு கலவையை குழிகளில் முக்கால் வரையில்
ஊற்றி வேகவிடவும்.
* கூர்மையான கத்தி அல்லது கம்பியைக் கொண்டு பணியாரத்தை திருப்பிவிட்டு வேகவிடவும்.
* இரண்டு புறமும் இளஞ்சிவப்பாக வெந்தவுடன் எடுத்து தேங்காய் சட்னி அல்லது கோழி குருமாவுடன் சூடாக பரிமாறவும்.
Note:
இட்லி மாவு கைவசம் இல்லாவிடில் இரண்டு கோப்பை இட்லி அரிசி, அரைக்கோப்பை
உளுந்து, ஒரு தேக்கரண்டி வெந்தயம், ஒருதேக்கரண்டி கடலைப்பருப்பு ஆகியவற்றை
ஊறவைத்து கெட்டியாக அரைத்து, ஒரு இரவு முழுவதும் அதை ஊறவைத்து ஒரு
தேக்கரண்டி உப்பும், ஒரு சிட்டிக்கை சோடாவையும் கலந்து மாவை தயாரித்துக்
கொள்ளலாம்.
குழிப்பணியாரம் ( ஆப்ப மாவு)(முதல் முறை)
* ஆப்ப மாவு – ஒரு கிண்ணம்
* தோசை மாவு – 3/4 கிண்ணம்
* வெங்காயம் – ஒன்று
* பச்சை மிளகாய் – ஒன்று
* தாளிக்க:
* எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
* கடுகு – ஒரு தேக்கரண்டி
* உளுந்து – ஒரு தேக்கரண்டி
வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையானவைகளையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.இரண்டு மாவையும் ஒன்றாக ஒரு கிண்ணத்தில் ஊற்றி வதக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் கலவையை போட்டு நன்றாக கலக்கவும்.குழிசட்டியை அடுப்பில் வைத்து குழியின் பாதிக்கு எண்ணெய் ஊற்றி ஒரு சின்னகரண்டியால் ஒரு கரண்டி மாவை ஊற்றவும். பணியாரம் ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபக்கம் வேக வைக்கவும்.சுவையான குழிப்பணியாரம் ரெடி. தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.
குழிப் பணியாரம்/கார வகை(2nd முறை)
* புளித்த இட்லி மாவு – நான்கு கோப்பை
* சோடா உப்பு – ஒரு சிட்டிகை
* வெங்காயம் நறுக்கியது – அரைக்கோப்பை
* பச்சைமிளகாய் நறுக்கியது – இரண்டு
* இஞ்சி நறுக்கியது – ஒரு தேக்கரண்டி
* கடுகு சீரகம் கலந்தது – ஒரு தேக்கரண்டி
* உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி
* கொத்தமல்லி நறுக்கியது – ஒரு மேசைக்கரண்டி
* எண்ணெய் – கால் கோப்பை
* இட்லிமாவில் ஒரு சிட்டிகை சோடாவைச் சேர்த்து கலந்துவைக்கவும்.
* ஒரு சிறிய சட்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெயை காயவைத்து கடுகுசீரகத்தை போட்டு வெடிக்கவிட்டு உளுத்தப்பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
* பிறகு வெங்காயம், பச்சைமிளகாய், karuvepillai இஞ்சியைச் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் வெந்தவுடன் கலவையை மாவில் கொட்டவும். அதனுடன் கொத்தமல்லியையும் போட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும்.
* பிறகு குழிப்பணியார சட்டியின் குழிகளில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றவும், எண்ணெய் காய்ந்ததும் மாவு கலவையை குழிகளில் முக்கால் வரையில் ஊற்றி வேகவிடவும்.
* கூர்மையான கத்தி அல்லது கம்பியைக் கொண்டு பணியாரத்தை திருப்பிவிட்டு வேகவிடவும்.
* இரண்டு புறமும் இளஞ்சிவப்பாக வெந்தவுடன் எடுத்து தேங்காய் சட்னி அல்லது கோழி குருமாவுடன் சூடாக பரிமாறவும்.
Note:
இட்லி மாவு கைவசம் இல்லாவிடில் இரண்டு கோப்பை இட்லி அரிசி, அரைக்கோப்பை உளுந்து, ஒரு தேக்கரண்டி வெந்தயம், ஒருதேக்கரண்டி கடலைப்பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து கெட்டியாக அரைத்து, ஒரு இரவு முழுவதும் அதை ஊறவைத்து ஒரு தேக்கரண்டி உப்பும், ஒரு சிட்டிக்கை சோடாவையும் கலந்து மாவை தயாரித்துக் கொள்ளலாம்.