Showing posts with label கரண்டி ஆம்லேட். Show all posts
Showing posts with label கரண்டி ஆம்லேட். Show all posts

Sunday, March 29, 2015

கரண்டி ஆம்லேட்



பொதுவாக முட்டையை என்றாலே அனைத்து வயதி னருக்கும் பிடித்த‍மான
உணவு. இந்த முட்டையை பச்சையாக குடிப்ப‍வர்கள் சிலருண்டு. சிலருக்கு வேக வைத்த‍ முட்டை பிடிக்கும். சிலருக்கு ஆஃப் பாயில் பிடிக்கும், சிலருக்கு முழு ஆம்லேட் பிடிக்கும், சிலருக்கு இந்த முட்டை ஆம்லேட்டோடு சிறிது வெங்காயம், மிளகுத்தூள் கலந்த ஆம் லேட் பிடிக்கும். சரி விஷயத் திற்கு வருவோம் வழக்க மான ஆம்லெட் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும் முட்டைப் பிரியர்களுக்கு இந்த கரண்டி ஆம்லேட்  நல்ல மாற்று. செய்வது சுலபம், சுவையோ அதிகம்.
தேவையானவை
முட்டை-1
சின்ன வெங்காயம் – கைப்பிடி
கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகுத்தூள் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் ஒரு குழிக் கரண்டியில் சிறிதளவு எண்ணெய் தடவி அதில், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக் க வேண்டும்.
பிறகு மிளகுத் தூள் தூவி, கலக்கி வைத்திருக்கும் முட்டையை ஊற்றவும். சிறிது நேரத்தில் திருப்பிப் போட்டு எடுக்கவும். ஓட்டல்களில் ஒவ்வொருவருக்கும் இது போன்று செய்துகொடுக்க நேரமாகும் என்பதால், தற்போது தோசைக்கல் லிலேயே குழிகள் அமை க்கப் பட்டு அதிலேயே கரண்டி ஆம்லெட் சுடச்சுடத் தயார் செய்யப்படுகிறது.