Showing posts with label தால் கிச்சடி. Show all posts
Showing posts with label தால் கிச்சடி. Show all posts

Tuesday, December 30, 2014

தால் கிச்சடி

Posted By Muthukumar,On December 30,2014
DAL KICHADI
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி-1/2 கப்; பாசிப் பருப்பு-1/4 கப்; மிக்ஸட் காய்கறிகள்[ கேரட், பட்டாணி, பீன்ஸ், காலி ஃப்ளவர்]-1 கப்; நெய்-1 டேபிள் ஸ்பூன்; கரம் மசலா-1/4 டீ ஸ்பூன்; பச்சை மிளகாய்-1; சீரகத் தூள்-1/4 டீ ஸ்பூன்; உப்பு-தேவையான அளவு.
எப்படி செய்வது?:
அரிசி பருப்பைக் கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் நெய் சேர்த்து, பச்சை மிளகாய் தாளித்து நறுக்கிய காய்கறிகளை போட்டு, 1 நிமிடம் வதக்கவும். உப்பு, சீரகத்தூள் சேர்க்கவும். அத்துடன் 3 கப் தண்ணீர் சேர்த்து, அரிசி, பருப்பை சேர்த்து, கரம் மசாலா சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வரும்வரை வேகவிடவும். குழைய வேகவைத்து இறக்கவும். தேவைப்பட்டால், சிறிது நெய் சேர்த்து சூடாகப் பறிமாறவும்.