Showing posts with label கொத்துக்கறி. Show all posts
Showing posts with label கொத்துக்கறி. Show all posts

Thursday, June 18, 2015

கொத்துக்கறி புலாவ்


அருமையான மிகவும் ருசியான, சமைக்க‍வும் கொஞ்சம் எளிதான அசைவ உணவு வகையொன்றை
நாம் பார்க்க‍விருக்கிறோம். இதோ கொத்துக்கறி புலாவ்
தேவையானவை
கொத்துக் கறி – அரைக் கிலோ
சாதம் – 2 கப்
வெங்காயம் – ஒன்று (நீளமாக நறுக்கவும்)
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
புதினா – கைப்பிடி
பச்சைமிளகாய் – 4 (நீளமாக நறுக்கவும்)
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய்
பிரிஞ்சி இலை
பட்டை
செய்முறை
குக்கரில் கொத்துக்கறியுடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1/4 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். சாதத்தை சிறிது உப்பு போட்டு உதிரியாக வடித்து வைக்கவு ம். ஒரு கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் நீளமாக நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் நறுக்கிய புதினா இலைகளை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் அதனுடன் வேக வைத்த கொத்துக் கறி  தேவைப்பட்டால் உப்பு போட்டு நீர் சுண்டும் வரை கிளறவும். கொத்துக் கறி கலவையுடன் வடித்த சாதத்தை சேர்த்து அதனுடன் சிறிது மிளகாய்த்தூளை போட்டு கிளறி இறக்கவும். சுவையான கொத்துக் கறி புலாவ் ரெடி. சூடாக பரிமாறவும்.

Thursday, April 30, 2015

கொத்துக்கறி பொடிமாஸ்

Posted By Muthukumar,On April 30,2015
minced mutton potimas
தேவை:
கொத்துக்கறி- 1/2 கிலோ; கடலை பருப்பு, சின்ன வெங்காயம்-தலா-200 கிராம்; துருவிய தேங்காய்-2 டம்ளர்; பூண்டு-10 பல்; பச்சை மிளகாய்-8; மிளகாய்த் தூள்- 2 தேக்கரண்டி; இஞ்சி,பட்டை, சோம்பு, எண்ணெய், உப்பு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலை பருப்பு, பட்டை, சோம்பு போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். கொத்துக்கறியைக் கொட்டி வேகும்வரை கிளறிக்கொண்டே இருக்கவும். பின்னர் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, மிளகாய்த்தூள், உப்பு தூவி, வெந்ததும் தேங்காய்த் துருவலைப் போட்டு இறக்கவும். சுவையான கொத்துக்கறி பொடிமாஸ் தயார். அவித்த முட்டையின் வெள்ளைக் கருவை சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்தால், கூடுதல் சுவையாக இருக்கும்.