Sunday, April 15, 2012

முந்திரி மட்டன் வறுவல்


Posted On April 15,2012,By Muthukumar

சும்மாவே வறுத்த முந்திரி வாய்வரை மணக்கும். இந்த முந்திரியுடன்மட்டனையும் சேர்த்து வறுவல் பண்ணினால் சுவையை கேட்கத்தான் வேண்டுமா?

தேவையான பொருட்கள்

முந்திரி -100கிராம்
மட்டன் -1/4 கிலோ
வெங்காயம் -200 கிராம் (நறுக்கியது)
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
மிளகாய்தூள் -2 டீஸ்பூன்
தனியா தூள் -2 டீஸ்பூன்
மிளகு தூள் -2 டீஸ்பூன்
சோம்பு -1 டீஸ்பூன்
உப்பு, எண்ணை -தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பை அதில் போட்டு தாளிக்கவும். அப்படியே முந்திரியை அதில் சேர்த்து வறுக்கவும்.
வெங்காயத்தை வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். சுத்தம் செய்து வேகவைத்த மட்டனையும் இதில் சேர்த்து போதுமான உப்பு சேர்க்கவும்.
மட்டனுடன் மசாலா முந்திரிப்பருப்பு சேர்த்து நன்றாக காய்ந்ததும் மிளகுத்தூளை தூவி கிளறி இறக்கவும். இப்போது வாசனையில் ஊரைக்கூட்டும் முந்திரி மட்டன் வறுவல் ரெடி.

Friday, April 13, 2012

தேங்காய் பால் கஞ்சி – காலை பலகாரம்

Posted On April 14,2012,By Muthukumar
தேவையான பொருட்கள்:
1.தேங்காய்
2.வெந்தயம்
3.பச்சரிசி
4.ஏலக்காய்.
செய்முறை விளக்கம்:
  1. தேங்காயை அரைத்து, பிழிந்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயத்தை போடவும்.
  3. களைந்து வைத்திருக்கும் பச்சரிசியை குக்கரில் போட்டு 1:1.1/2 (அரிசி: தண்ணீர்) என்ற வீதத்தில் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை காத்திருக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
  4. குக்கரை திறந்து தேங்காய் பாலை ஊற்றி நன்கு கிளறவும்.
  5. சுவையான, சத்தான தேங்காய் பால் கஞ்சி தயார்.
  6. இதனுடன் சீனி கலந்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும்.

பொட்டு கடலை தேங்காய் ஜாம்

Posted On April 14,2012,By Muthukumar
தேவையான பொருட்கள்:
1.முந்திரி பருப்பு
2.பொட்டு கடலை
3.தேங்காய்
4.தேன்
செய்முறை விளக்கம்:
முந்திரி பருப்பு, பொட்டு கடலை, தேங்காயை மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்
பின் தேன் சேர்த்து அதை  ஜாம் போன்று கெட்டியான திரவமாக  கலக்கவும்.
சத்தான, சுவையான ஜாம் தயார். வேணுமென்றால் கிஸ்மிஸ் பழமும் சேர்த்துக் கொள்ளலாம்.


வெஜிடபிள் கோப்தா

Posted On April 13,2012,By Muthukumar
ஸ்டார் ஓட்டல் உணவுப்பொருளான வெஜிடபிள் கோப்தாவை வீட்டிலும் தயாரிக்க ஆசையா? இதே முறையில் செய்து பாருங்கள். ருசி அள்ளிக்கொண்டு போகும். இதோ செய்முறை:

கோப்தா தயாரிக்க தேவையானவை:

உருளைக்கிழங்கு -2
பச்சைப்பட்டாணி - 1/2 கப்
கேரட் -2
பெரிய வெங்காயம் - 1
கார்ன் ப்ளோர் மாவு : 2 டேபிள் ஸ்பூன்
பிரெட் துண்டுகள் - 2
மிளகாய்த்தூள் -1 1/2 டீஸ்பூன்
கரம்மசாலா -1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - 1/2 கப்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

கிரேவி தயாரிக்க தேவையானவை:

சின்ன வெங்காயம் -10
தக்காளி -5
இஞ்சி, பூண்டு, விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 1/2 டீஸ்பூன்
கரம்மசாலா தூள் -1 டீஸ்பூன்
நெய் -1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணியை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். வெங் காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அத்துடன் மிளகாய்த்தூள், கரம்மசாலாதூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும். அதைத்தொடர்ந்து வெந்த காய்கறிகள் கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். இத்துடன் உதிர்த்த பிரெட், கார்ன்ப்ளோர் சேர்த்து மசித்தாற்போல் கிளறி சிறுசிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

கிரேவி தயாரிக்க:

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் நெய் விட்டு வெங்காயத்தை வதக்கி அத்துடன் இஞ்சி, பூண்டு விழுது மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். தக்காளியை மிக்சியில் அரைத்து கூழாக்கி இதில் சேர்க்கவும். அதோடு தேவைக்கு உப்பு சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
ஐந்து நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி வைக்கவும். பரிமாறும்போது கிரேவியை சற்று சூடாக்கி கோப்தாக்களை சேர்த்து பரிமாறுங்கள். சூப்பர் சுவையுடன் வெஜிடபிள் கோப்தா ரெடி.

Saturday, April 7, 2012

அன்னாச்சி எசன்ஸ் மற்றும் பட்டை தூள் பாம்பே டோஸ்ட்

Posted On April 07,2012,By Muthukumar


இலகுவான காலை நேர டிபன். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய டிபன்.செய்வதும் சுலபம்.
தேவையானவை
பிரட் – 9
காய்ச்சி ஆறிய பால் – 100மில்லி
முட்டை – 2
பழ எசன்ஸ் – 2 துளி
பட்டை தூள் – ½ தேக்கரண்டி
சர்க்கரை – 50 கிராம்
பட்டர் + எண்ணை – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து பாலில் சர்க்கரையை கரைத்து அதில் அன்னாசி எசன்ஸ், பட்டைதூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
எண்ணை + பட்டரை தோசை தவ்வாவில் சூடாக்கி பிரட்டை முட்டைகலவையில் தோய்த்து கருகாம்ல் இருபுறமும் பொரித்து எடுக்கவும்.

ஆயத்த நேரம் : 7 நிமிடம்
சமைக்க ஆகும் நேரம் :10 நிமிடம்
பரிமாறும் அளவு : 3 நபருக்கு

மதுரை மட்டன் வறுவல்

Posted On April 07,2012,By Muthukumar
ட்டன் வறுவலில் மகத்தானது மதுரை மட்டன்வறுவல். வாசம் ஊரையே தூக்கும் என்றால் அதன் ருசிக்கு ஏங்காதோர் தான் யார்? இதோ செய்முறை:
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 நறுக்கியது
இஞ்சி, பூண்டு விழுது - 11/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 11/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க தேவைப்படுபவை:
எண்ணெய் - 100 மில்லி
சோம்பு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 4
இஞ்சி - சிறுதுண்டு
கொத்தமல்லி இலை - 1/2 கப்
புதினா இலை- 1/4 கப்
தேங்காய் விழுது - கால் கப்
கரம்மசாலா தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
மட்டனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். இத்துடன் முதல்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். ஒரு கடாயில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
வேகவைத்த மட்டனைச் சேர்த்து தண்ணீர் வற்றும்வரை அடுப்பில் வைத்திருக்கவும். இத்துடன் தேங்காய் விழுதைச் சேர்த்து 5 நிமிடங்கள் வைத்திருக்கவும். உப்பை சரிபார்த்து கரம் மசாலா தூளைத் தூவி நன்கு கிளறி இறக்கவும். இப்போது மணக்கும் மதுரை மட்டன் மசாலா ரெடி.

இஞ்சி பச்சடி

Posted On April 07,2012,By Muthukumar
தேவையானப்பொருட்கள்:

இஞ்சி - 2 அல்லது 3 பெரிய துண்டுகள்
புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
 
வறுத்தரைக்க:

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3 முதல் 4 வரை
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
எள் - 1/2 டீஸ்பூன்
 
தாளிக்க:

நல்லெண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
வெல்லம் - ஒரு சிறு துண்டு
 
செய்முறை:

இஞ்சியை நன்றாகக் கழுவி, தோலை சீவி விட்டு துருவிக் கொள்ளவும். அல்லது மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். துருவிய இஞ்சி 3 டேபிள்ஸ்பூன் அளவிற்கு இருக்க வேண்டும்.

புளியை ஊறவைத்து, தேவையான தண்ணீரைச் சேர்த்துக் கரைத்து இரண்டு அல்லது இரண்டரை கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 
ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணை விட்டு, காய்ந்ததும் அதில் இஞ்சித்துருவலைப் போட்டு வதக்கவும்.  இஞ்சி சிவக்க வதங்கியதும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
 
அதே வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், எள் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, ஆறியதும், மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
 
ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி அதில் புளித்தண்ணீரை ஊற்றவும்.  அதில் மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும்.  புளித்தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பைத் தணித்து விட்டு, அரைத்து வைத்துள்ளப் பொடியைத் தூவவும்.  (சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றினால்  பொடி கெட்டியாவதை தடுக்கலாம்). மீண்டும் ஓரிரு வினாடிகள் கொதித்ததும், அதில் வதக்கி வைத்துள்ள இஞ்சித்துருவல், வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, இன்னும் சில வினாடிகள் அடுப்பில் வைத்திருந்து இறக்கி வைக்கவும்.

சாதம், சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம். பிரட்டுடனும் சேர்த்து சாப்பிடலாம்.