Tuesday, December 6, 2011

மீல் மேக்கர் கோலா

Posted On Dec  06,2011,By Muthukumar


தேவையானவை
மீல் மேக்கர் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 10
தேங்காய்த் துருவல் - 1/2 கப்
பட்டை, சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைக் கொத்துமல்லி - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ரிபைண்ட் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
* 2 கப் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து அதில் மீல் மேக்கரைப் போட்டு ஊற வைக்கவும். அரை மணி நேரம் கழித்து தண்ணீரைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
* சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பொட்டுக் கடலையை மிக்சியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.
* வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கவும். வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.
* வெங்காயம்- தேங்காய் வதக்கல் ஆறியதும் மிக்சியில் போட்டு அரைக்கவும். தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். அடுத்து தனியாக மீல் மேக்கரை நறுக்கி மிக்சியில் போட்டு அரைக்கவும்.
* அரைத்த மீல் மேக்கர், அரைத்த தேங்காய் விழுது, சோம்புப்பொடி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக பொட்டுக்கடலை மாவு சேர்த்து, கொத்தமல்லி சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
* மாவை சிறு சிறு கோலா உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கோலா உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
குறிப்பு
* பொரிக்கும்போது அதிக தீயில் பொரிக்க வேண்டாம். மேல்பாகம் சிவந்து விடும். ஆனால் உள்வரை வேகாது.
* மீல்மேக்கர் கோலா, சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Monday, December 5, 2011

உருளைக்கிழங்கு சிப்ஸ்

Posted On Dec 05,2011,By Muthukumar

தேவையான பொருட்கள்;
உருளைக்கிழங்கு - அரைக்கிலோ
(மீடியம் சைஸ் )
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரைடீஸ்பூன்
உப்பு,எண்ணெய் - தேவைக்கு.

உருளைகிழங்கை நன்கு கழுவி துடைத்து எடுக்கவும்.
இப்படி மெலிதாக சீவி வைக்கவும்.


அடுப்பில் வாணலி வைத்து தேவைக்கு எண்ணெய் விட்டு சூடு செய்யவும்.

மிளகாய்த்தூள் ,உப்பு,பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக சீவிய உருளைக்கிழங்கை போட்டு பக்குவமாக பொன்னிறத்தில் பொரித்தெடுக்கவும்.
சூட்டுடனேயே ரெடி செய்த பொடியைத் தேவைக்குத் தூவி குலுக்கவும்.


சுவையான உருளைக்கிழங்கு சிப்ஸ் ரெடி.

இதனை பிஸிபேலாபாத், தயிர் சாதம்,எலுமிச்சை சாதம்,புளியோதரை, தக்காளி சாதம்,புதினா சாதம்,வெஜிடபிள் பிரியாணி இப்படிசொல்லிட்டே போகலாம், வெரட்டி ரைஸ் உடன் சாப்பிடலாம். ஏன் சும்மாவே சாப்பிடலாம். வாயு தொந்திரவு உள்ளவர்கள் கவனம்.

பாலக்’ பக்கோடா

Posted On Dec 05,2011,By Muthukumar
தேவையானவை
நறுக்கிய பசலைக்கீரை - 1 கப்
கடலைப்பருப்பு - 1/4 கப்
கடலை மாவு - 3 கப்
அரிசி மாவு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 4 பல்
பச்சைமிளகாய் - 2
கறி மசாலாதூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
* கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பெரிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கவும். பசலைக் கீரையையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* கடலை மாவுடன் அரிசி மாவு, நறுக்கிய பசலைக்கீரை, வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், கடலைப் பருப்பு, கறி மசாலா தூள், எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து காய்ந்த எண்ணெயில் 2 டீஸ்பூன் விட்டு சிறிது தண்ணீர் தெளித்து பிசிறினாற்போல பக்கோடா மாவு கலவை தயாரித்துக் கொள்ளவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை சிறிது சிறிதாக உதிர்த்தாற்போல போட்டு, வேகவிட்டு முறுகியதும் எடுக்கவும்.
* இதை சாப்பாட்டிற்கும் தொட்டுக்கொள்ளலாம். மாலை நேர சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். மொறுமொறுவென சாப்பிட சுவையாக இருக்கும்.

Saturday, December 3, 2011

கோழிக்கறி பூண்டு மஞ்சூரியன்

Posted On Dec 04,2011,By Muthukumar

தேவையானவை
கோழிக்கறி - 1/2 கிலோ
பூண்டு (பொடியாக நறுக்கியது) - 4 டீஸ்பூன்
இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது)
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - சிறிதளவு
சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
முட்டை - 1
சோயாசாஸ் - 2 டீஸ்பூன்
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை
* மைதா, சோளமாவு, அடித்த முட்டை, மிளகாய்த் தூள், மிளகுத்தூள், அஜினோமோட்டோ, சோயா சாஸ், சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, போதுமான உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் திக்காக கரைக்கவும்.
* கோழிக்கறி துண்டுகளை இந்த மாவுக் கலவையில் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் போட்டு இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து தனியே வைக்கவும்.
* ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி இவை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
* பொரித்த சிக்கனையும் இதில் சேர்த்துக் கிளறி, குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து கோழிக்கறி டிரை ஆனதும் இறக்கி விடவும்.

தம் ஆலுகோபி / Dum AlooGobi

Posted On Dec 03,2011,By Muthukumar

தேவையான பொருட்கள்;
உருளைக்கிழங்கு - 200கிராம்
காளிப்ளவர் - 200 கிராம்
எண்ணெய் - 4-6 டேபிள்ஸ்பூன்

மசாலா மிக்ஸ் செய்து கொள்ள:

புளிக்காத தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1டீஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் - 1டீஸ்பூன்
மஞ்சள்தூள்- கால்டீஸ்பூன்
கரம் மசாலா - அரைடீஸ்பூன்


தாளிக்க :
மிளகு, சீரகம், சோம்பு -சிறிது
கிராம்பு - 2
பட்டை - 1
பிரியாணி இலை -1
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
மல்லி இலை - சிறிது அலங்கரிக்க.

உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கி கொள்ளவும். காளிப்ளவரை சிறிய பூக்களாக பிரித்து கொதிக்கும் நீரில் போட்டு வடிகெட்டி எடுத்து வைக்கவும்.

ஒரு பவுலில் தயிருடன் மேலே குறிப்பிட்ட பொருட்களை கலந்து வைக்கவும்.


ஒரு சாலோ நான்ஸ்டிக் ப்ரை பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கி உருளைக்கிழங்கு,காளிப்ளவர் போட்டு,சிறிது உப்பு தூவி பொரித்து எடுக்கவும்.



பொரித்த பிறகு இருக்கும் எண்ணெய் தாளிக்க பயன்படுத்தலாம்.

கடாயில் எண்ணெய் விட்டு காயவும் தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து பொரிய விடவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். தயிருடன் கலந்து வைத்த மசாலா மிக்ஸை சேர்க்கவும். நன்கு கொதி வரட்டும்.

பொரித்த உருளை காளிப்ளவர் சேர்த்து பிரட்டவும். ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.

மூடி போட்டு 5 நிமிடம் மசாலாவுடன் சேர்ந்து வேகவிடவும். உப்பு சரி பார்க்கவும்.

கிரேவி கெட்டியாகி கமகமவென்ற மணத்துடன் இருக்கும்.அடுப்பை அணைக்கவும். நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.

சுவையான தம் ஆலு கோபி ரெடி.இதனை சப்பாதி,நாண்,ப்லைன் ரைஸ் உடன் பரிமாறலாம்.
கிரேவியாக வேண்டும் என்றால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கலாம்.
அவரவர் தேவைக்கு மசாலா கூட்டி, குறைத்து கெட்டித்தனமைக்கு தகுந்தபடி வைத்துக் கொள்ளலாம்.

மீல்மேக்கர் மசாலா

Posted On Dec 03,2011,By Muthukumar


தேவையானவை
மீல்மேக்கர் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 2
தேங்காய் துருவல் - 1/2 கப்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 8 பல்
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 8
உப்பு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
* 3 கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அதில் மீல் மேக்கரைப் போடவும். அரை, முக்கால் மணி நேரம் ஊற விடவும். ஊறியவுடன் இறுகப் பிழிந்து தண்ணீரை வடித்து எடுக்கவும்.
* தேங்காய், இஞ்சி பூண்டு, சோம்பு, மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு, வதக்கவும். வதங்கியதும் அரைத்த கலவையை சேர்க்கவும். 2 நிமிடம் கொதிக்க விடவும். ஊறிய மீல் மேக்கர், 1/4 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சுருள சுருள கிண்டி இறக்கவும்.

Friday, December 2, 2011

மட்டன் டிக்கா மசாலா

Posted on Dec 03,2011,By Muthukumar

தேவையானவை
ஆட்டிறைச்சி - 1/2 கிலோ
தனியா விதை - 2 டீஸ்பூன்
வெங்காய விதை - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
கசகசா - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தயிர் - 3 டீஸ்பூன்
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
வெங்காய விழுது - 1 டீஸ்பூன்
லவங்கம் - 4
மிளகு - 8
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை
* மட்டனை ஒரு அங்குல சதுர துண்டுகளாக நறுக்கவும். தயிரை அடித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து ஆட்டிறைச்சி துண்டுகளில் தடவி, ஊற வைக்கவும்.
* தனியா, கசகசா, சீரகம், வெங்காய விதை, லவங்கம், மிளகு இவற்றை வெறுமனே வறுத்துப் பொடி செய்யவும்.
* தேவையான உப்பை இதில் சேர்த்துக் கலந்து ஆட்டிறைச்சி துண்டுகளில் புரட்டி வைக்கவும். இதை ஆறிலிருந்து எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
* ஒரு கடாயில் எண்ணையைக் காய வைத்து காய்ந்ததும், ஊற வைத்த மட்டனைப் பொரித்தெடுக்கவும்.
* வெங்காயத்தை வட்டமாக நறுக்கி, மட்டன் டிக்கா மசாலாவை அலங்கரிக்கவும்.