Thursday, July 5, 2012

பால் கோவா

தேவையான பொருட்கள்:
மில்க் மெய்டு – 500 கி
பால் – 150 மி.லி
தயிர் – 125 கி
நெய் – 100 கி
செய்முறை:
முதலில் மில்க் மெய்டையும், தயி ரையும் ஒரு நான்-ஸ்டிக் பாத்திரத் தில் போட்டு கட்டி கட்டியாக இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ள வும்.
பின் அதோடு பாலை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு அதனை ஒரு மரக்கரண்டியால் தொடர்ந்து கிண்டி க் கொண்டே இருக்க வேண்டும்.
அந்த கலவையானது முதலில் தண்ணீர் போன்று தான் இருக்கும். அதனைக் கிண்ட கிண்ட சிறிது நேரம் கழித்து கெட்டியாகி விடும்.
அப்போது நெய்யில் பாதியை அத் துடன் ஊற்றிகிளரவும். அதை கிளர கிளர சிறிது நேரம் கழித்து பால் கோவா பதத்திற்கு வரும் முன் மீத முள்ள நெய்யையும் கொஞ் சம் கொஞ்சமாக ஊற்றி கை விடாமல் கிண்டவும்.
இப்படி கிளரும் போது பால் கோவா ஆனது நெய்யிலிருந்து பிரியும் நிலைக்கு வந்ததும், அதனை இறக்கி விடவும்.

Sunday, July 1, 2012

ஸ்டட் கத்திரிக்காய்

Posted On July 01,2012,By Muthukumar
மசாலா நிரம்பிய கத்திரிக்காய் கூட்டு தயாரித்து சாப்பிட்டுப் பாருங்கள். பிஞ்சு கத்தரிக்காயை பார்த்தாலே இனிமேல் இந்த உணவுப் பதார்த்தம் தான் உங்கள் நினைவுக்கு வரும். இதோ செய்முறை:
தேவையானவை:
பிஞ்சு கத்திரிக்காய் -15 (சின்ன சைஸ்)
பெரிய வெங்காயம் -2
தக்காளி -2
வர மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
வர மல்லித்தூள் -3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
கடுகு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை -தாளிக்கத் தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
பிஞ்சு கத்திரிக்காய்களை காம்புடன் நான்காக வகிர்ந்து கொள்ளவும். முழுவதுமாக நறுக்கக்கூடாது. பெரிய வெங்காயத்தையும் தக்காளியையும் தனித்தனியே நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு தட்டில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், உப்பு, பெருங்காயத்தூள் ஒன்றாக கலந்து (தண்ணீர் சேர்க்காமல்) ஒவ்வொரு கத்திரிக்காய்க்குள்ளும் நிரப்பி, கால் மணி நேரம் நன்கு உப்பு, காரம் போகும்படி செய்யவும்.
வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலையை தாளித்து முதலில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி அத்துடன் தக்காளி சேர்த்து வதக்கி, அத்துடன் மசாலா நிரப்பிய கத்திரிக்காய்களைப் போட்டு ஒரு கையளவு தண்ணீர் தெளித்து அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும். வெந்ததும் சற்று முறுக விடவும். கிளறும்போது கத்தரிக்காய் சிதையாமல் அடியோடு கிளறி விடவும். சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு இந்த கத்திரிக்காய் கூட்டு தொட்டுக் கொள்ள ஏற்றது. கத்திரிக்காய் பிஞ்சாக இருந்தால் மட்டுமே இந்த உணவு வகை மிகவும் ருசியாக இருக்கும்.

பச்சை பயறு குழம்பு

Posted On July 01,2012,By Muthukumar
தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு - 1/2 கப்
புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு
சாம்பார் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1
சாம்பார் வெங்காயம் - 10 முதல் 15 வரை
பூண்டுப்பற்கள் - 2 அல்லது 3
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பச்சை பயறை 5 முதல் 6 மணி நேரம் (அல்லது இரவு முழுவதும்) தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறிய பயறை நன்றாக கழுவி விட்டு ஒரு குக்கரில் போட்டு அத்துடன் சிறிது உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும்.

புளியை ஊற வைத்து பிழிந்தெடுத்து, தேவையான தண்ணீரைச் சேர்த்து 2 கப் அளவிற்கு புளிச்சாற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெந்தயம், பெருங்காயம் சேர்த்து சிவக்க வறுக்கவும்.  பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளிச் சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும்.  புளித்தண்ணீரைச் சேர்த்து அத்துடன் சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டுக் கலந்து  கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், வேக வைத்துள்ள பயறை இலேசாக மசித்து சேர்த்துக் கிளறி விடவும். மீண்டும் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு, இறக்கி வைக்கவும்.

ரோல் சப்பாத்தி

தேவையானவை:
கோதுமை மாவு – கால் கிலோ
கேரட் ஒரு கப்
முள்ளங்கி ஒரு கப் 
முட்டைகோஸ் துருவல் ஒரு கப்
இஞ்சி பேஸ்ட்  அரை டீஸ்பூன்
புதினா – ஒரு கைப்பிடி
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
• கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய்விட்டு, அதில் துரு விய முள்ளங்கி, முட்டை கோஸ், கேரட், இஞ்சி பேஸ்ட், நறுக்கிய புதினாவைப் போ ட் டு, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
• கோதுமை மாவை சப்பாதிகளாக இட்டு தோசைக்கல்லில் போட்டு, இரு புறமும் வேக விட்டு, வதக்கிய காய்களை அதன் மீது பரவலாக வைத்து ரோல் செய்து கொடுக்கவும்.

Friday, June 29, 2012

பூசணி மசால்

Posted On June 29,2012,By Muthukumar
ழக்கமான பொரியல், வறுவலைக் காட்டிலும் இது சற்று வித்தியாசமான துணைக் கறி. சாம்பார் சாதம், தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள ஏற்றது. உடல் இளைக்க வெள்ளைப் பூசணி சேர்த்துக் கொள்ள விரும்புகிறவர்கள் இதை செய்து சாப்பிடலாம். செய்முறை இதோ:

தேவையானவை:

பூசணிக்காய் - 1/2 கிலோ
சீரகம் - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
மிளகாய்த்துள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சமையல் எண்ணைய் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சைக்கொத்தமல்லி - சிறிதளவு
புதினா - சிறிதளவு

செய்முறை:

பூசணிக்காயின் தோலை சீவி விட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சிறிது சீரகத்தை பொரிய விடவும். சீரகம் பொரிந்ததும் பூசணிக்காய் துண்டுகளைப் போட்டு வதக்கவும். அத்துடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, அடுப்பை நிதானமாக எரிய விட்டு மூடி வைக்கவும். சீரகம் அரை ஸ்பூன் எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். பூசணிக்காய் வெந்ததும் அரிசி மாவை நன்கு வதக்கி பொடியாக நறுக்கிய பச்சைக் கொத்தமல்லி, புதினாவுடன் சீரகத்தூளையும் தூவி அடுப்பில் இருந்து இறக்கவும். இப்போது பூசணி மசால் ரெடி.

Thursday, June 28, 2012

சமையல் குறிப்பு – பேரீச்சை சட்னி

பேரீச்சை சட்னியை ட்ரை பண்ணிப் பாருங்க… வித்தியாசமாக அதேநேரத்தில் ரொம்ப சுவையாகவும் இருக்கும்….
தேவையான பொருட்கள்:
பேரீச்சை – கொட்டை நீக்கியது 5-6
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
துருவிய வெல்லம் – 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி – 1 டீ ஸ்பூன் 
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
உப்பு – 2 டீ ஸ்பூன்
செய்முறை:
* புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளு ங்கள்.
* பேரீச்சையை நன்றாக மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள். இதையும் சக்கை இல்லாமல் வடிகட்டிக் கொள்ளுங்கள்.
*அடிகனமான வாணலியில் வெல் லத்தை கரைத்துகொண்டு மணல் இல்லாமல் வடிகட்டி வையுங்கள்.
* வாணலியை அலம்பி விட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து புளித் தண்ணீரை விட்டு கொதிக்க ஆரம் பித்ததும், பேரிச்சை விழுதை விட்டு , வெல்லக் கரைசலையும் விடு ங்கள்.
* கொஞ்சம் கெட்டிப் பட ஆரம்பித் ததும், இதில் மிளகாய்ப் பொடி, பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்து வையுங்கள்.
* இதை பிரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
* வடஇந்திய உணவுகளுக்கு dressing ஆகவும், சமோசா போன்றவ ற்றிருக்கு sauce மாதிரியும் தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.

Wednesday, June 27, 2012

கீரை பக்கோடா

Posted On June 27,2012,By Muthukumar
கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் வைக்க ஏற்றது. சத்துமிக்க மாலை நேர டிபன் இது. இதோ செய்முறை:
தேவையானவை:
ஏதாவது ஒரு கீரை-சின்ன கட்டு
கடலை மாவு-1 கப்
அரிசி மாவு-1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு-தேவைக்கேற்ப
பச்சை மிளகாய்-2
இஞ்சி-சிறு துண்டு
சீரகம்-1/2 டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
ரீபைன்ட் எண்ணெய்-பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
கீரையை பொடியாக நறுக்கி அலசி ஒரு துணியில் விரித்து உலர வைத்துக் கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றுடன் இஞ்சி, பச்சை மிளகாய் அரைத்து போட்டு, அத்துடன் முந்திரிப்பருப்பு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இத்துடன் கீரையை சேர்த்து பக்கோடா மாவு தயாரிக்கவும். தண்ணீர் சேர்த்து பிசிறினாற்போல் உதிரியாக தயாரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காயவைத்து காய்ந்த எண்ணெயில் 2 டீஸ்பூன் பக்கோடா மாவில் விட்டு பிசிறி எண்ணெய் காய்ந்ததும் சிறிது சிறிதாக கிள்ளிப்போட்டு எடுக்கவும். சாப்பிட மிகவும் சுவையான சத்தான டிபன் இது.