Tuesday, January 17, 2012

பஞ்சம அல்வா

Posted On Jan 17,2012,By Muthukumar

தேவையானவை: ஜவ்வரிசி, அவல், சேமியா, மைதா மாவு, கோதுமை மாவு - தலா அரை கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒரு கிலோ, நெய் - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரி, வெள்ளரி விதை - தலா கால் கப், பச்சை (அ) ஆரஞ்சு கலர் - அரை டீஸ்பூன்.


செய்முறை: ஜவ்வரிசி, அவல், சேமியா மூன்றையும் பாலில் ஊற வைத்து அரைக்கவும். இதனுடன் கோதுமை மாவு, மைதா மாவு கலந்து கரைத்துக் கொள்ளவும்.
சர்க்கரையை கம்பிப்பாகு பதத்தில் காய்ச்சி, இதில் மாவுக் கரைசலைக் கலந்து கிளறிக் கொள்ளவும். மாவு வேகும் அளவுக்கு அதில் சிறிது சிறிதாக வெந்நீர் ஊற்றிக் கிளறவும்.
பின்னர் கலர், நெய் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஒட்டாமல் நெய் பிரிந்து வரும் வரை கிளறி இறக்கவும்.
வறுத்த முந்திரி, வெள்ளரி விதை சேர்க்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.
பஞ்சம அல்வா: கால் கப் சோள மாவை சேர்த்துச் செய்தால் அல்வாவில் மினுமினுப்பு கூடும்.
 

Monday, January 16, 2012

சவ்வரிசி பொங்கல் பாயாசம் செய்வது எப்படி

Posted On Jan 17,2012,By Muthukumar




தேவையான பொருட்கள்: 

சவ்வரிசி – 300 கிராம் ,  வெல்லம் – 200 கிராம்
பால் – 200 மி.லிநெய் – 50 கிராம்
முந்திரி பருப்பு – 10  ,  கசாகசா(உலர்ந்த திராட்சை) – 10
ஏலக்காய் – 5, 6 லேசா பொடிச்சுக்கோங்க
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சவ்வரிசியை போடவும்.
சவ்வ‌ரி‌சி நன்றாக வெந்ததும் ஏலக்காய் மற்றும் வெல்லத்தை உடைத்து போட்டு கிளறவும்.
சவ்வ‌ரி‌சி ந‌ன்கு கெ‌ட்டியாக ‌வ‌ந்‌ததும் பாலையும், நெய்யையும் சேர்க்கலாம்.
முந்திரி, திராட்சையை நெய்யில் பொ‌ன்‌னிறமாக வறுத்து சே‌ர்‌க்கவு‌ம்.
சவ்வரிசி பொங்கல் பாயாசம் தயா‌ர்.
அடி‌ பி‌டி‌க்காம‌ல் கிளறிக்கொண்டிருக்க வேண்டும்..

Saturday, January 14, 2012

ஹபாரா மட்டன்

Posted On Jan 15,2012,By Muthukumar
தேவையான பொருட்கள்
மட்டன் - 1/2 கிலோ
சாம்பார் வெங்காயம் - 200 கிராம் (நறுக்கியது)
தக்காளி - 200 கிராம் (நறுக்கியது)
பச்சைமிளகாய் - 6 (நறுக்கியது)
தயிர் - 1/2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை - 1/2 கட்டு
புதினா - 1/2 கட்டு
தேங்காய் - 1/2 மூடி
கசகசா - ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
தாளிக்க
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை, லவங்கம் - தலா 2
செய்முறை
* மட்டனை சுத்தம் செய்து நறுக்கி வேக வைக்கவும்.
* தேங்காய், கசகசாவை அரைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலை, புதினா இலையை விழுதாக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.
* பின் வெங்காயம், தக்காளி, மட்டன் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்க்கவும்.
* இப்போது அரைத்த தேங்காய் விழுது, கொத்தமல்லி இலை, புதினா விழுது இவற்றைச் சேர்த்து போதுமான உப்பு சேர்க்கவும்.
* மட்டன், இந்த கலவையுடன் சேர்ந்து நன்கு வெந்ததும், தயிரை ஊற்றி சிறிது நேரம் குறைந்த தீயில் வைத்திருந்து இறக்கவும்.
'

Friday, January 13, 2012

காய்கறி கூட்டு

Posted On Jan 13,2012,By Muthukumar

தேவையானப்பொருட்கள்:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1
பறங்கிக்காய் - ஒரு சிறு துண்டு
அவரைக்காய் - 5 அல்லது 6
உருளைக்கிழங்கு - 1
சேனைக்கிழங்கு - ஒரு சிறு துண்டு
வாழைக்காய் - பாதி
பச்சை மொச்சைக் கொட்டை - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
புளி - ஒரு நெல்லிக்காயளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வறுத்தரைக்க:

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை
தனியா - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

புளியை ஊற வைத்து, சாற்றைப் பிழிந்தெடுத்து கொள்ளவும்.

துவரம் பருப்பை குக்கரில் போட்டு வேக வைத்தெடுக்கவும்.

காய்கறிகளை நன்றாகக் கழுவி, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். காய்கறி துண்டுகள், பச்சை மொச்சைக் கொட்டை ஆகியவற்றை, ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து, காய்கறி மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி வேக விடவும்.

இதற்கிடையே, வறுக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு டீஸ்பூன் எண்ணையில் வறுத்தெடுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

காய்கறிகள் வெந்தவுடன் புளிச்சாற்றை ஊற்றி கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன், வேக வைத்துள்ளப் பருப்பைக் கடைந்து சேர்க்கவும். மீண்டும் ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும். மறுபடியும் ஒரு கொதி வந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

திருவாதிரை, பொங்கல் ஆகிய பண்டிகையின் பொழுது இந்தக் கூட்டை செய்வார்கள். இதை "தாளகம்" என்றும் "பொங்கல் கூட்டு" என்றும் அழைப்பார்கள்.


கிரீன் பீஸ் புலாவ்

Posted On Jan 13,2012,By Muthukumar
ச்சைப்பட்டாணியில் எந்த உணவு வகை தயாரித்தாலும் எல்லோருக்கும் பிடிக்கும் அல்லவா? இந்த கிரீன் பீஸ் புலாவ் உணவும் தயாரித்துப் பாருங்கள் ரொம்ப சுவையாக இருக்கும். காரட்டும் கலந்து தயாரிப்பதால் பார்ப்பதற்கு ரொம்பவும் கலர்புல்லாக சாப்பிடத் தூண்டும். செய்முறை இதோ!
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - ஒரு கப்
பச்சைப் பட்டாணி - 1/2 கப்
நறுக்கிய காரட் துண்டுகள் - 1/2 கப்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 6 பல்
பெரிய வெங்காயம் - 1
பட்டை கிராம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் + நெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
* இஞ்சி, பூண்டு இவைகளை அரைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் இவைகளை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.
* காரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அரிசியைக் கழுவி வைத்துக் கொள்ளவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்புத்தூள் போட்டு வெடிக்க விட்டு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிவக்க விடவும்.
* தொடர்ந்து வெங்காயம், பச்சை மிளகாய், காரட், பச்சைப்பட்டாணி சேர்த்து வதக்கவும்.
* இத்துடன் அரிசி சேர்த்துக் கிளறி, சற்று வறுபட்டதும் குக்கருக்கு மாற்றி 2 கப் தண்ணீர் (அரிசி ஒரு கப் எனில் தண்ணீர் 2 கப்) ஊற்றி மூடி இரண்டு விசில் வந்ததும் அடுப்பை நிறுத்திவிட வேண்டும்.
* அவ்வளவுதான் கிரீன் பீஸ் புலாவ் ரெடி. இதற்குத் தொட்டுக்கொள்ள தக்காளி குருமா வெங்காய தயிர் பச்சடி ஏற்றது.

Sunday, January 8, 2012

புதுவருட கரட், வெங்காய பிரியாணி

Posted On Jan,08,2012,By Muthukumar

ஆங்கிலப் புத்தாண்டும் தமிழ்ப் புத்தாண்டு போன்றே பலராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. காலையில் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள். சிலர் புத்தாடைகளும் அணிவார்கள்.

வருடம் பிறந்ததும் முதலில் இனிப்பான உணவை உண்பார்கள். வருடம் முழுவதும் அதிர்ஸ்டத்துடன் இனித்திடும் என்ற நம்பிக்கைதான்.

அன்று பெரும் பாலும் இந்துக்களின் வீடுகளில் சைவஉணவுகள்தான் சமைப்பார்கள். காலை உணவு, மதிய உணவு, மாலை உணவு, இரவு உணவு எல்லாம் தடபுடலாக நடக்கும்.


அதற்கு நாங்களும் விதிவிலக்கு அல்ல. புதுவருட பிரியாணி செய்துவிட்டோம்.

என்ன ஸ்பெசல் என்கிறீர்களா?
  • புது வருட பிரியாணி என்பதால்தான் ஸ்பெசல். 
  • அத்துடன் கடையில் வாங்கும் பிரியாணி மசாலாக்கள் ஒன்றும் சேர்க்கப்படவில்லை. 
  • எல்லாமே எங்கள் வீட்டுத் தயாரிப்பு. கலப்படம் அற்றது என்பதால் சிறந்ததுதானே!

பிரியாணி சாப்பிடும்போது வீட்டில் கேட்டார்கள் ......

"முதல் நாளே பிரியாணி என்றால் ஒவ்வொரு நாளும் பிரியாணிதானே?"

நாள்தோறும் சாப்பிட்டால் என்ன ஆகும்? என்று கேட்டு அவர்கள் வாயை மூடவைத்தேன்.... ஆகா தப்பித்தேன்.

சங்க காலத்திலும் பிரியாணி  

பிரியாணி பற்றிச் சற்றுப் பார்ப்போம். சங்க காலத்தில் பிரியாணி சோற்றின் ஆரம்பம் தொடங்கப்பட்டுவிட்டது எனலாம். சங்க இலக்கியத்தில்'ஊன் சோறு' பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. 'ஊன்றுவையடிசில்' என்கிறார்கள்.


படைவீரரும் அரிசியுடன் மாமிசத்தைக் கலந்து சமைத்து உண்டிருக்கிறார்கள்.

பெரும்தேவனார் பாடலில் 'மைஊன் புழுங்கலும் எலிவறுவலும் உனக்குத் தருவேன்' என தலைவி கூகையோடு பேசுவதாக நற்றிணை 83ல் வருகிறது.

அகநானூற்றில் இறைச்சியோடு சேர்ந்த நெய்ச் சோறு ஆக்கிப் படைத்தலும் மணவிழா நாளில் நிகழ்ந்திருக்கின்றன.

Briyani என்பது Persian மொழிவழிச் சொல்லாகும்.Persia என்பது இன்றைய ஈரான் ஆகும். சமைக்கு முன் அரிசி, மரக்கறிகள், மீன், இறைச்சி ஆகியவற்றை நெய்யில் வதக்கி வாசனைகள் சேர்த்து சமைப்பதாகும்.

இம் தயாரிக்கும் சமையல் முறை பல்வேறு நாடுகளிலும் அவர்களது பாரம்பரிய சமையல் முறைகளில் இருந்திருக்கின்றன.

பிரியாணி பல வழிகளில் தயாரிக்கப்படுகிறது.  'தம்' வைத்து சமைக்கும் பிரியாணிகள் சுவையில் கூடியவை.
  • ஒவ்வொரு ஊர்களின் பெயரைக் கொண்டும் வெவ்வேறு வகைப் பிரியாணிகள் இருக்கின்றன. 
  • இந்தியன் பிரியாணி, சிறிலங்கள் இடியப்பப் பிரியாணி, ஈரானியன், இந்தோனீசியன், மலேசியன், காஸ்மீர், ஹைதரபாத், தாய், பிலிப்பினொ என அடுக்கிக் கொண்டே போகலாம்.
  • இந்தியாவில் மட்டும் 26 வகைகளுக்கு மேற்பட்ட பிரியாணிகள் தயாரிக்கிறார்களாம்.

பிரியாணி பிரியர்களே ஓடத் தயாராகுங்கள் ஹோட்டல்களை நோக்கி......


எந்த அரிசி

எந்த வகையான அரிசியில் தயாரிக்கலாம். ஆரம்ப காலத்தில் நீண்ட ப்ரவுண் அரிசியில் தாயாரித்தார்கள். அதன் பின்னர் சிறிய வெள்ளை அரிசி வகைகளைப் பயன்படுத்தினார்கள். இப்பொழுது பெரும்பாலும் பசுமதி அரிசியைத்தான் பயன்படுத்துகிறோம்.

புதுவருட கரட் வெங்காய பிரியாணி


பசுமதி ரைஸ் - 1 கப்
பெரிய கரட் - 2
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 2
தண்ணீர் - 2 கப்
உப்பு - சுவைக்கு
நெய் - 2 ரீ ஸ்பூன்
ஓயில் - 2 ரீ ஸ்பூன்


வீட்டுத் தயாரிப்புத் தூள்கள்


மிளகாய்த் தூள் - ½ ரீ ஸ்பூன்
மல்லித் தூள் - 1 ரீ ஸ்பூன்
சீரகத் தூள் - ½ ரீ ஸ்பூன்
சோம்புத் தூள் - ¼ ரீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ ரீ ஸ்பூன்

வாசனைக்கு

பட்டை - 2
ஏலம் - 4
பிரிஞ்சி இலை - 1
ரம்பை இலை - 4 துண்டு
பூண்டு இஞ்சி பேஸ்ட் - 2 ரீ ஸ்பூன்


தயாரிப்பு

பசுமதி அரிசியை 15 நிமிடங்கள் தண்ணிரில் ஊற வையுங்கள்.

கரட்டை மெல்லிய சிறிய 1 ½ அங்குல நீள் துண்டுகளாக வெட்டி எடுங்கள்.

வெங்காயம் நீளப் பக்கமாக மெல்லியதாக நறுக்குங்கள்.

மிளகாய் 4 நீள் பகுதிகளாக வெட்டி விடுங்கள்.

ஒரு ரீ ஸ்பூன் நெய்;யை சோஸ்பானில் விட்டு மெல்லிய தீயில் வடித்து எடுத்த அரிசியை 2 நிமிடம் வறுத்து விடுங்கள்.

இரண்டு கப் தண்ணீரை ஊற்றி அவித்து சாதத்தை எடுத்து ஆறவிடுங்கள்.

ஒரு ரீ ஸ்பூன் நெய் ஒரு ரீ ஸ்பூன் ஓயில் தாச்சியில் விட்டு பட்டை, ஏலம், பிறிஞ்சி சேர்த்து பூண்டு இஞ்சி பேஸ்ட் கலந்து வதக்குங்கள்.

பச்சை மிளகாயைப் போட்டு பொரிய விடுங்கள்.

வெங்காயம் கலந்து உப்புப் போட்டு கிளறி, சற்று வதக்குங்கள் கரட் துண்டுகளைச் சேருங்கள்.

வதங்கிய பின் பொடி வகைகள் அனைத்தையும் சேர்த்து கிளறுங்கள். பின் ஆறிய சாதத்தைக் கலந்து நன்கு சேருங்கள்.

பரிமாறும் பாத்திரத்தில் போட்டு வறுத்த கஜீவைத் தூவி விடுங்கள்.
புதுவருடப் பிரியாணி மூக்கைத்துளைத்திடும் உண்பதற்கு தயாராக.


ஏற்கனவே சமைத்து வைத்த பருப்பு, பிரட்டல் கறிகள், சிப்ஸ், சலட், துணையிருக்க சுவைத்திடுங்கள்.


Wednesday, January 4, 2012

எள்ளு உருண்டை



 தமிழ் நாட்டு பாரம்பரிய சமையலில் எள்ளு உருண்டை மிகவும் பிரபலம்.
எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த எள்ளு உருண்டை இது . என் மாமியார் அடிக்கடி செய்து கொடுப்பாங்க..
அவங்க கை பக்குவமே தனி சுவை தான்.. நிறைய பழமையான உணவுகள் எல்லாம் அவங்க செய்வாங்க.. இன்னும் வரும் காலத்தில் நமது பாரம்பரிய சமையல் குறிப்புகளை அவங்க கிட்ட கேட்டு உங்களுக்கு சொல்லித்தருகிறேன்.
நான் முதல் முதலாக அவங்க சொல்லி இந்த உருண்டை செய்தேன்... மிகவும் சுவையாக வந்தது.. நீங்களும் இதன் முறையில் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக்கொள்ளுங்கள் தேவையான பொருட்கள்
ராகி - 100 கிராம்
கருப்பு எள்ளு (அ) வெள்ளை எள்ளு- 250 கிராம்
வேர்கடலை - 250 கிராம்
முந்திரி -  100 கிராம்
சர்க்கரை - 250 கிராம்

 செய்முறை
முதலில் ராகி மாவினை சிறிது தண்ணீர் தெளித்து மாவு பிசைந்து ரொட்டியாக சப்பாத்தி கல்லில் நன்றாக வேக வைத்து எடுக்கவும். இதனை ஆற விடவும்.
வேர்கடலை, எள்ளு, முந்திரியினை வெறும் சட்டியில் லைட்டாக வறுத்து எடுத்து வைக்கவும்,
வேர்கடலையின் தோல்லை நீக்கிவிடவும்.
அனைத்து பொருட்களையும் தனி தனியாக மிக்ஸூயில் அரைத்து வைக்கவும்.
 இவை அனைத்தனையும் வேறு ஒரு பாத்திரத்தில் போடவும். இதனுடம் இடித்த சர்க்கரையினையும் சேர்க்கவும்.. நன்றாக கிண்டவும்
 .
பிறகு இந்த கலவையினை மிக்ஸியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அரைக்கவும்.
 கொஞ்சம் சிக்கும் கிண்டிவிட்டு அரைக்கவும். நன்றாக எண்ணெய் விடும் வரை அரைக்கவும்.
 (கைகளில் உருண்டை பிடிக்கும் பொழுது இப்படி எண்ணெய் விட்டால் தான் சரியான பக்குவம்)


 பிறகு இந்த கலவையினை சிரு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து சாப்பிடவும்..
சுவையான பழமையான சத்தாண எள்ளு உருண்டை தயார்...
(முன்பு உள்ள காலங்களில் மிக்ஸியில் அரைக்காமல் உரலில் வைத்து இடிப்பார்களாம். இப்ப யாருக்கு உரலில் இடிக்க டைமிருக்கு)