Tuesday, September 29, 2015

ஓட்ஸ் இட்லி-செய்வது எப்படி?

Posted By Muthukumar,On Sep 29,2015
oats itli
தேவை:
முழு உளுந்து (வெள்ளை) -100 கிராம்; இட்லி ரவா-200 கிராம்; ஓட்ஸ்-50 கிராம்; உப்பு தேவைக்கேற்ப; தேவையான அளவு தண்ணீர்.
செய்முறை:
உளுந்தை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். இட்லி ரவையை 10 நிமிடம் ஊற வைக்கவும். உளுந்தை கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். இட்லி ரவையை 3 முறை கழுவி சுத்தம் செய்து, அதை உளுந்து மாவுடன் கலக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கவும். ஓட்ஸையும் மாவுடன் கலக்கவும். இந்த மாவுக் கலவையை 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். 8 மணி நேரம் கழித்து, மாவு புளித்ததும், நன்றாகக் கலக்கி விட்டு இட்லி தட்டுகளில் ஊற்றி அதன் மீது சிறிது ஓட்ஸைத் தூவி விடவும். 10 நிமிடம் வேக விட்டு எடுக்கவும். தேங்காய்ச் சட்னி அல்லது தக்காளிச் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.