Sunday, May 31, 2015

அவல் உப்புமா



உப்புமாக்களில் பெரும்பாலானோர் அறிந்து வைத்திருப்ப‍து என்ன வென்றால், ஒன்று சேமியா உப்புமா, இன்னொன்று ரவை உப்புமா ஆகிய இரண்டுதான்.  இன்னும் சிலருக்கு
நொய் உப்புமா தெரியும். ஆனால் ஆரோக்கியம் நிறைந்த அவல் உப்புமா எப்ப‍டி செய்வது என்று தெரியுமா? இதோ அதற்கு தேவையான பொருட்களும், செய்முறையும் உங்கள் பார்வைக்கு . . .
தேவையானவை:
அவல் – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு-ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு –ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – சிறிதளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அவலை நன்றாக கழுவி 15நிமிடம் ஊறவைக்கவும். கடாயில்எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் அவலை சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி 10நிமிடம் மூடிவைக்கவும் ( அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்). பிறகு கறிவேப்பி லை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

கேழ்வரகு-எள் அடை

Posted By Muthukumar,On May 31,2015
ragi el adai
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு-1 கப்; கருப்பு எள்_2 மேஜைக் கரண்டி; வெல்லம்-50 கிராம்; நெய்-தேவையான அளவு; ஏலக்காய்-சிறிதளவு; சுக்குப் பொடி-சிறிதளவு.

செய்முறை:
தனித் தனி வாணலியில் கேழ்வரகு மற்றும் எள்ளை வறுத்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் ஏலக்காய், சுக்குப் பொடியைக் கலந்து, வெல்லக் கரைசலை ஊற்றி, பதம் வரும்வரை பிசையவும். இப்போது கலவையை தோசைக் கல்லில் ஊற்றி, நெய் இட்டு சுட்டெடுத்தால், கேழ்வரகு எள் அடை தயார்.

பலன்கள்:
கேழ்வரகு மற்றும் எள்ளில் உள்ள அதிகளவு கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களுக்கு போதிய வலுவைத் தருகிறது. மேலும், இதிலுள்ள இரும்புச் சத்து உள்ளிட்ட சத்துக்கள் குடல் புண், நீரிழிவு, ரத்த சோகை உள்ளிட்ட நோய்களுக்கு தீர்வு அளிப்பதுடன் , நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. கேழ்வரகில் உள்ள நார்ச் சத்து, மலச் சிக்கலை சரி செய்கிறது. மேலும் உடல் எடையைக் குறைக்கும் பண்பு கேழ்வரகிற்கு உண்டு என்பதால், டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்றது., இந்த கேழ்வரகு அடை.

கேழ்வரகு இனிப்பு தோசை



ந‌மது ஆரோக்கியம் உண்ணும் உணவிலேயே இருக்கிறது. ஆம்! இந்த கேழ்வரகு என்பது ஆரோக்கிய
உணவாகும். இந்த கேஷ்வரகில் இனிப்பு தோசை எப்ப‍டி செய்வது என்பதை இங்கு காண்போம்.
தேவையானவை:
கேழ்வரகு மாவு – 250 கிராம்
வெல்லம் அல்லது கருப்பட்டி – 200 கிராம்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
அரிசி மாவு – ஒரு கப்
நெய் – 100 மில்லி.
செய்முறை:
கேழ்வரகு மாவு, அரிசி மாவு இரண்டையும் ஒன்றாக கலக்கவும். வெல்ல த்தைப் பொடித்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கரைத்து, வடிகட்டவும். இதை மாவுடன் கலந்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கரைத்து, தோசைக ளாக வார்த்து, சுற்றிலும் நெய் விட்டு எடுக்கவும்.
குறிப்பு:
தொட்டுச்சாப்பிட ஏதும்தேவை இல்லை. திடீர் மாவுகளுக்குபதிலாக கேழ் வரகு மற்றும் அரிசியை தனித்தனியாக ஊறவைத்து அரைத்தும் தயாரிக் கலாம்.

Sunday, May 24, 2015

பழைய சாதம் சாப்பிடுங்க


முதல் நாள் சோற்றில் நீர் ஊற்றி, அடுத்த நாள் உண்ணும் சாதத்தில் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள வைட்டமின்கள் அடங்கியுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பழைய சாதம் உண்பதால் அதிலிருந்து பெருகும் சக்தி, நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதால் காய்ச்சல் உள்ளிட்டவை அணுகாது. வெப்பத்தை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். சிறு குடலுக்கு நன்மை அளிக்கும்.
குடல் புண், ஒவ்வாமை, அரிப்பு போன்றவை சரியாகும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். உடல் எடை குறையும். உடலில் சிறுகுடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை பெரும் அளவு உற்பத்தி செய்து உடலுக்கு நன்மை தரும். எனவே உடலுக்கு நன்மை செய்யும் எளிமையான உணவுகளை உண்ண வேண்டும்.

Friday, May 8, 2015

கோழி மிளகு வருவல்

Posted By Muthukumar,On May 8,2015
kozhi varuval
தேவையான பொருட்கள்;
சிக்கன்-1 கிலோ ( தோல் நீக்கி சுத்தம் செய்தது); சோம்பு-1 டேபிள் ஸ்பூன்; ஜீரகம்-1 டேபிள் ஸ்பூன்; கருப்பு மிளகு-1.5 டேபிள் ஸ்பூன்; காய்ந்த மிளகாய்-4-5; தனியா-1 டேபிள் ஸ்பூன்; மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்; பூண்டு பற்கள்-5( தோலுரித்து நைஸாக அரைத்தது); இஞ்சி-1 இஞ்ச் துண்டு( தோல் நீக்கியது); வெங்காயம்-2 பொடியாக நறுக்கியது; தக்காளி-2 (நறுக்கியது); லவங்கப் படடை-1 இஞ்ச் துண்டு; ஏலக்காய்-2; தண்ணீர்-2 கப்; உப்பு-தேவைக்கேற்ப; எண்ணெய்-சமைக்கத் தேவையான அளவு.

செய்முறை:
ஏலக்காய் மற்றும் லவங்கப் பட்டை தவிர மீதமுள்ள மசாலா பொருட்களை மிக்ஸியில் அரைத்து வைக்கவும். சிகக்னை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு, சில துளிகள் எண்ணெயும் கலந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். அதில் ஏலக்காய் மற்றும் லவங்கப் பட்டை போட்டு தாளித்து அரிந்து வைத்த வெங்காயத்தைப் போட்டு பொந்நிறமாக வதக்கவும். அத்துடன் அரைத்த மசாலாவைப் போட்டு, அத்துடன் தக்காளியையும் போட்டு கிளறி கொஞ்ச நேரம் வேக விடவும். பின்னர் சிக்கன் துண்டுகளைப் போட்டு தேவையான தண்ணீர் விட்டு வேகவிடவும். சிகக்ன் 3/4 பாகமாக வெந்து வந்ததும், தீயை குறைத்து சிக்கன் வேகும் வரை கிளறிவிட்டு, அதன்மீது எண்ணெய் மிதந்து வரும்போது இறக்கி சூடாக பறிமாறவும்

K.F.C. சிக்க‍ன்


K.F.C. (கே.எஃப்.சி) சிக்க‍னை காசு கொடுத்து வாங்கி ருசிப்ப‍தை விட, வீட்டிலேயே செய்து, சமைத்து
ருசித்தால் எப்ப‍டி இருக்கும். இன்னும் கூடுதல் சுவையுடன் இருக்கும்
தேவையானவை:
சிக்கன் -1/2 கிலோ 
தக்காளி சாஸ்- –1 ஸ்பூன்
சோயா சாஸ் – 1 ஸ்பூன் 
சில்லி சாஸ் – 2 ஸ்பூன் 
இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன் 
மிளகு தூள் – 1/2 ஸ்பூன் 
மைதா மாவு – 1 கப் 
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் 
முட்டை – 1
பிரட் தூள் – 1 கப் 
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கன்துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற் றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிற மாக பொரித்து எடுக்க வேண்டும். இதுபோன்று அனைத்து சிக்கன் துண்டு களையும் செய்தால், சுவையான K.F.C. (கேஎப்சி) சிக்கன் ரெடி.

Friday, May 1, 2015

30 வகையான ‘இஞ்சி – பூண்டு’ உணவுகள்

 


சுவைமட்டுமல்லாது கூடவே ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் இஞ்சி பூண்டு உணவு வகைகளைத்
தெரிந்துகொண்டு சமைத்து உண்டு வளமோடும் மகிழ் வோடும் வாழ்வோம். வாருங்கள்

1) ஜிஞ்சர் சிரப்! 

தேவையானவை:
துருவிய இஞ்சி, சர்க்கரை – தலா ஒரு கப், 
தண்ணீர் – 3 கப், 
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், 
சோடா – ஒரு கப்.
செய்முறை:
துருவிய இஞ்சியுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். அதில் சர்க்கரைசேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் 5 நிமிடம் அடுப்பை ‘சிம்’மி ல் வைத்து, இறக்கி ஆற விடவும். அதனை அரை மணி நேரம் கழித்து வடிகட்டி, சுத்தமான பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்க… ஜிஞ்சர் சிரப் ரெடி!
தேவைப்படும்போது 2 டேபிள்ஸ்பூன் சிரப், அரை டம்ள ர் சோடா, அரை டம்ளர் தண்ணீர், ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலந்து பரிமாறவும்.

2) பூண்டு சாதம்

தேவையானவை:
வடித்த சாதம் – ஒரு கப், 
பூண்டுப் பல் – 10, 
வெங்காயம் – 1 (நறுக்கிக் கொள்ளவும்), 
பச்சை மிளகாய் – 2 அல்லது 3 (நீளவாக்கில் கீறியது), 
சீரகம் – கால் டீஸ்பூன். 
கறிவேப்பிலை – சிறிதளவு, 
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், 
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சாதத்தை உதிராக வடித்துக் கொள்ளவும். பூண்டை விழுதாக அரைக்கவும். கடாயில் நெய் விட்டு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், அரைத்த பூண்டு விழுது, உப்பு சேர்த்துக் கிளறவும். வதங்கியவுடன், சாதத்தை போட்டுக் கிளறவும். ஒரு நிமிடம் கழித்து இறக்கி, தயிர்ப் பச்சடி அல்லது அப்பளத்துடன் பரிமாறவும்.

3) ஜிஞ்சர் சூப்


தேவையானவை:
துருவிய இஞ்சி – கால் கப், 
துருவிய கேரட், முட்டைகோஸ் (கலந்தது) – அரை கப், 
சோள மாவு – ஒரு டீஸ்பூன், 
மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டேபிள்ஸ்பூன், 
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு, 
எண்ணெய், உப்பு – தேவையான அளவு,
செய்முறை:
குக்கரில் எண்ணெய் விட்டு, இஞ்சி, துருவிய கேரட், முட்டைகோஸ் சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, ஆற விடவும். சோள மாவை தண்ணீரில் கரைத்து அதில் கலக்கவும். பிறகு, மிளகு த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி, ஒரு கொதி விட்டு இறக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

4) பூண்டு ரொட்டி


தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப், 
அரைத்த பூண்டு விழுது – 5 டேபிள்ஸ்பூன், 
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், 
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், 
வெண்ணெய் – அரை டீஸ்பூன், 
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன். 
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கோதுமை மாவுடன் உப்பு, வெண்ணெய் சேர்த்துப் பிசறி, தேவையான தண்ணீர்விட்டு, சப்பாத்திமாவு பத த்தில் பிசையவும். கடாயில் நெய்விட்டு, பூண்டுவிழுது , மிளகுத்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து சுருள வதக்கினால், பூரணம் ரெடி! மாவை சப்பாத்தியாக தேய்த்து, அதன் மீது பூரணத்தைப் பரப்பி, மேலே இன் னொரு சப்பாத்தியை வைத்துத் தேய்க்கவும். இந்த சப்பாத்தியை சூடான தவாவில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

5) ஜிஞ்சர் ரைஸ்

தேவையானவை:
சாதம் – ஒரு கப், 
வெங்காயம் – 1, 
இஞ்சி – 4 அங்குலத்துண்டு ஒன்று, 
தக்காளி சாஸ், சோயா சாஸ் – தலா 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2, 
கொத்தமல்லி – சிறிதளவு, 
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சாதம் வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் உப்பு, தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்துக் கிளறவு ம். வடித்த சாதத்தைப் போட்டு நன்கு கலக்கி, கொத்த மல்லி தூவி பரிமாறவும்.

6) பூண்டு- தேங்காய் சட்னி


தேவையானவை:
உரித்த பூண்டு, தேங்காய் துருவல் – தலா கால் கப், 
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன், 
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, உரித்த பூண்டு, தேங்காய் துருவலை நன்கு வறுக்கவும். இதனுடன் உப்பு, மிளகா ய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பூண்டு – தேங்காய் சட்னி ரெடி! இது மும்பை ஸ்பெஷல் வடா பாவ் சட்னி.

7) ஜிஞ்சர் யோகர்ட் வித் ஃப்ரூட்


தேவையானவை:
தயிர் – ஒரு கப்,
வாழைப்பழம் – 1 (சிறு துண்டுகளாக்கவும்), 
நறுக்கிய பப்பாளி – 10 துண்டுகள், 
திராட்சை – 20, 
இஞ்சித் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், 
பாதாம்பருப்பு – 10, 
சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
தயிருடன் வாழைப்பழம், பப்பாளி, திராட்சை, இஞ்சித் துருவல், சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கிக் கொள் ளவும். ஒரு மணி நேரம் முன்பு ஊற வைத்த பாதாம் பருப்பைத்தோல்நீக்கி, துருவி அதில்சேர்க்கவும். பிறகு குளிர வைத்துப் பரிமாறவும்.

8) பூண்டு சட்னி


தேவையானவை:
உரித்த பூண்டு – கால் கப், 
காய்ந்த மிளகாய் – 7, 
புளி – ஒரு சிறு நெல்லிக்காய் அளவு, 
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு, 
கடுகு, உளுத்தம்பருப்பு – தாலா கால் டீஸ்பூன், 
பெருங்காயம், உப்பு, நல்லண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்புசேர்த்து வதக்கி, மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். இன்னொரு கடாயி ல் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெ ருங்காயம் தாளித்து, சட்னியில் சேர்த்துக் கலக் கவும்.

9) இஞ்சிப் பச்சடி


தேவையானவை:
இஞ்சி – 50 கிராம், 
தேங்காய் துருவல் – ஒரு கப், 
பச்சை மிளகாய் – 2, 
சீரகம் – அரை டீஸ்பூன், 
கறிவேப்பிலை – சிறிதளவு, 
தயிர் – ஒரு கப், 
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சுத்தம்செய்த இஞ்சி, தேங்காய்துருவல், பச்சை மிளகா யை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும், அதில் உப்பு சேர்த்து தயிருடன் கலக்கவும். கடாயில் எண் ணெய் விட்டு சீரகம் தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து, தயிர் கலவையுடன் கலக்கிப் பரிமாறவும்.

10) பூண்டு வெஜ் ரைஸ்


தேவையானவை:
சாதம் – ஒரு கப், 
பச்சை மிளகாய் – 6, 
பூண்டுப் பல் – 6, 
நறுக்கிய கேரட்,பீன்ஸ், பட்டாணி (கலந்தது)-ஒரு கப் ,
வெங்காயம் – 1 (நறுக்கிக் கொள்ளவும்), 
பட்டை, கிராம்பு, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, 
கொத்தமல்லி – சிறிதளவு, 
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
சாதத்தை உதிராக வடித்துக் கொள்ளவும். பச்சை மிள காய், பூண்டு இரண்டையும் விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்க ய்த்தூள் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதனுடன் காய்கறிகளைச் சேர்த்து, உப்பு போட்டு வேக விடவும். வெந்தவுடன், அதில் சாதத்தை சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

11) இஞ்சித் தீயல்

தேவையானவை:
பொடியாக நறுக்கிய இஞ்சி, தேங்காய் துருவல் – தலா ஒரு கப்,
சின்ன வெங்காயம் – 10, 
பச்சை மிளகாய் – 2, 
மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், வெந்தய த்தூள் – தலா கால் டீஸ்பூன், 
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, 
வெல்லம் – சிறிய துண்டு, 
நல்லெண்ணெய் – அரை கப், 
கடுகு, உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன், 
காய்ந்த மிளகாய் – 2, 
கறிவேப்பிலை – சிறிதளவு, 
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி, தேங் காய் துருவலை வதக்கி. கரகரப்பாக அரைத்துக் கொள் ளவும். புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கடாயில் மீதி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப் பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, வட்ட மாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், வெந்தயத்தூள் சேர்க்கவும். அதில் புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
பின் அரைத்தஇஞ்சி-தேங்காய்விழுதை சேர்த்து, நன்கு சுருள கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும்போது பொ டித்த வெல்லம் சேர்த்து, கிளறி இறக்கவும். ஒரு மாதம் வரை கெடாமல் வைத்து உபயோகிக்கலாம். சாதத்தில் போட்டுச் சாப்பிட சுவையாக இருக்கும்.

12) பூண்டு ஊறுகாய்


தேவையானவை:
உரித்த பூண்டு – ஒரு கப், 
எலுமிச்சைச் சாறு – கால் கப், 
தனியா, வெந்தயம் – தலா 2 டேபிள்ஸ்பூன், 
சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன், 
மிளகாய்த்தூள் – 3 
டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், 
நல்லெண்ணெய் – அரை கப், 
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெறும் கடாயில் வெந்தயம், தனியா, சீரகத்தை வறு த்துப் பொடிக்கவும். கடாயில் கால் கப் எண்ணெய் விட் டு, உரித்த பூண்டைப் போட்டு நன்கு வதக்கவும். பூண்டு வதங்கியவுடன், மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, பொடித்த தூளை சேர்க்கவும். மீதமுள்ள கால் கப் எண் ணெயைச் சேர்த்து, சுருள வதக்கி, ஆறியவுடன் சுத்த மான பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

13) இஞ்சி சட்னி


தேவையானவை:
இஞ்சி – 10 கிராம், 
காய்ந்த மிளகாய் – 8, 
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, 
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், 
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், 
கறிவேப்பிலை – சிறிதளவு, 
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாயை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். கடாயில் நல்லெண் ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கறி வேப்பிலை சேர்த்து சட்னியுடன் கலக்கவும். விருப்ப ப்பட்டால் சிறிது வெல்லம் சேர்க்கலாம். இது இட்லி, தோசை, வடை, பஜ்ஜிக்கு சுவையான ஜோடி!

14) இஞ்சி ரசம்


தேவையானவை:
இஞ்சி – 3 அங்குலத் துண்டு, 
பச்சை மிளகாய் – 2, 
எலுமிச்சம்பழம் – 1, 
வேக வைத்த துவரம்பருப்பு – கால் கப், 
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை, 
மிளகுத்தூள், சீரகத்தூள் – கால் டீஸ்பூன், 
கடுகு-கால் டீஸ்பூன், 
கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, கீறிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், நசுக் கிய இஞ்சி சேர்த்து கொதிக்க விடவும். ஒரு டம்ளர் அளவுக்கு வற்றியவுடன், அதில் வேக வைத்த துவரம் பருப்பை நீர்க்க கரைத்து சேர்த்து, உப்பு போட்டுக் கொ திக்க விடவும். பொங்கி வரும்போது மிளகுத்தூள், சீர கத்தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும். மீண் டும் பொங்கியதும், இறக்கி எலுமிச்சம்பழம் பிழியவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும். சளி, இருமல், அஜீரணம், பசியின்மை போன்ற குறை பாடுகளை போக்கும் இந்த ரசம்.

15) பூண்டு-இஞ்சி சூப்


தேவையானவை:
பூண்டுப் பல் – 10, 
இஞ்சி – ஒரு அங்குலம் நீளமுள்ள துண்டு, 
வெங்காயம் – 1, 
நெய், சோள மாவு – தலா ஒரு டீஸ்பூன், 
மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன், 
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, 
நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு, 
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் நெய் விட்டு, பூண்டு, நறுக்கிய இஞ்சி, வெங் காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் 2 கப் தண் ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 10 நிமிடம் கழித்து அதனை இறக்கி, ஆற வைத்து. வடிகட்டவும். பூண்டு, இஞ்சி, வெங்காயத்தை மிக்ஸியில் அரைக்கவும். வடி கட்டிய தண்ணீருடன் மேலும் 2 கப் தண்ணீர் ஊற்றி, அரைத்த விழுதுடன் சேர்க்கவும். சோள மாவைக் கரை த்து அதில் சேர்த்துக் கொதிக்க விடவும். மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து மேலும் கொதி க்க விடவும். பிறகு இறக்கி, நறுக்கிய வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

16) பூண்டு ரசம்


தேவையானவை:
பூண்டுப் பல் – 6, 
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, 
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, 
ரசப்பொடி- கால் டீஸ்பூன், 
மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், 
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், 
கறிவேப்பிலை, கொத்த மல்லி – சிறிதளவு, 
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
புளியைக் கரைத்து வடிகட்டவும். கடாயில் புளிக் கரை சல், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், ரசப்பொடி, உப்பு சேர்த்து சூடாக்கவும். பூண்டைத் தட்டி, அதில் சேர்க் கவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் மிளகுத்தூள், சீரகத் தூள் சேர்த்து அடுப்பை ‘சிம்’மில் வைத்து கொதிக்க விடவும். ரசம் நுரைத்து வரும்போது கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவவும். இன் னொரு கடாயில் எண் ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்புதாளித்து, ரசத்தி ல் கொட்டி இறக்கவும்

17) இஞ்சிக் குழம்பு


தேவையானவை:
இஞ்சி – 3 அங்குலத் துண்டு, 
சின்ன வெங்காயம் – 20, 
புளி – ஒரு எலுமிச்சம்பழம் அளவு, 
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், 
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை, 
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், 
தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், 
கறிவேப்பிலை – சிறிதளவு, 
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், 
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
புளியைக் கரைத்துக் கொள்ளவும். இஞ்சியைக் கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயத் தை இரண்டிரண்டாக நறுக்கவும். கடாயில் நல்லெண் ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை தாளித்து இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் மஞ்சள்தூள், மிள காய்த்தூள், தனியாத்தூள், பெருங்காயத்தூள் சேர்க்க வும். அதில் புளிக்கரைசல், உப்புசேர்த்து கொதிக்க விட வும். கெட்டியாக வரும்போது ஒரு டீஸ்பூன் நல்லெ ண்ணெய் விட்டு இறக்கவும். இந்தக் குழம்பு, சூடான சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

18) பூண்டுக் குழம்பு


தேவையானவை:
உரித்த பூண்டு – கால் கப், 
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, 
மிளகாய்த்தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், 
தனியாத்தூள் – 2 டேபிள்ஸ்பூன், 
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை, 
கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், 
சின்ன வெங்காயம் – 5, 
கறிவேப்பிலை – சிறிதளவு, 
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன். 
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, பூண்டை சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்க்கவும். புளி யைக் கரைத்து அதில் ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்து, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி விடவும். விருப்பப்பட்டால் சிறிதளவு வெல்லம் சேர்க்கலாம்.

19) இஞ்சி டீ


தேவையானவை:
இஞ்சி – சிறிய துண்டு, 
டீத்தூள் – 2 டீஸ்பூன், 
தேன் – 2 டீஸ்பூன், 
தண்ணீர் – 2 கப்.
செய்முறை:
2 கப் தண்ணீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு கொதிக்க விடவும். கொஞ்சம் வற்றியவுடன், டீத்தூள் சேர்த்து கொதித்து வரும்போது அடுப்பை அணைத்து, பாத்திரத் தை மூடவும். 3 நிமிடம் கழித்து, வடிகட்டி, தேன் சேர்த் து கலக்கிக் குடிக்கவும். இதற்கு பால் தேவையில்லை. புத்துணர்ச்சி தரும் சுவையான டீ இது!

20) திடீர் பூண்டு மிளகாய்ப்பொடி


தேவையானவை:
பூண்டுப் பல் – 5, 
மிளகாய்த்தூள் – 3 டேபிள்ஸ்பூன், 
நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பூண்டை தோலுடன்நசுக்கி, மிளகாய்த்தூளுடன்சேர்த் துக்கலக்கவும். இதனுடன் உப்புசேர்த்தால், திடீர்பூண்டு மிளகாய்பொடி ரெடி! நல்லெண்ணெய் விட்டுக் கலந்து சூடான இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

21) இஞ்சித் தொக்கு


தேவையானவை:
இஞ்சி – கால் கிலோ, 
பூண்டுப் பல் – 20, 
காய்ந்த மிளகாய் (வறுத்து அரைக்க) – 15, 
புளி – எலுமிச்சம்பழம் அளவு, 
வெல்லம் – சிறு துண்டு, 
பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், 
வெந்தயத்தூள் – ஒரு டீஸ்பூன், 
கடுகு – கால் டீஸ்பூன், 
காய்ந்த மிளகாய் (தாளிக்க) – 2, 
கறிவேப்பிலை. நல்லெண்ணெய் – கால் கப், 
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
இஞ்சியைசுத்தம்செய்துபொடியாநறுக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு இஞ்சி, பூண்டு, காய்ந்தமிளகாயை நன்கு வறுக்கவும். அதனுடன் புளி, உப்பு சேர்த்து மிக் ஸியில் நன்கு அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட் டு கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறவும். இத்துடன் பெருங்காயத்தூள், வெந்தயத்தூள், வெல்லம் சேர்க்க வும். எண்ணெய் மிதந்து வரும்வரை அடுப்பை ‘சிம்’ மில் வைத்து நன்கு வதக்கவும். ஆறியவுடன், எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். இது, ஈரம் படாமல் இருக்கும் வரை கெட்டுப் போகாது! தயிர் சாத த்துக்கு சிறந்த காம்பினேஷன்

22) பூண்டு பால் கஞ்சி


தேவையானவை:
புழுங்கல் அரிசி – ஒரு கப், 
பூண்டுப் பல் – 12, 
வெந்தயம், சீரகம் – தலா கால் டீஸ்பூன், 
சுக்கு, சித்தரத்தை – ஒரு சிறிய துண்டு, 
திப்பிலி – சிறிதளவு, 
உப்பு – தேவையான அளவு,
செய்முறை:
அரிசியை நன்கு கழுவி குக்கரில் போடவும். ஒரு கப் அரிசிக்கு மூன்றரை கப் தண்ணீர் ஊற்றவும். இதனுடன் உரித்த பூண்டு, சீரகம், வெந்தயம், உப்பு சேர்க்கவும். சுக்கு, சித்தரத்தை, திப்பிலியை ஒரு துணியில் கட்டி, குக்கரில் போடவும். கஞ்சி வெந்த பின்பு துணியை வெ ளியே எடுத்து விடவும். வெந்த கஞ்சியில் தேவைக் கேற்ப பால் சேர்த்துப் பரிமாறலாம். மழைக்காலத்துக் கேற்ற ஆரோக்கியமான கஞ்சி இது. சளி, இருமலைக் கட்டுப்படுத்தும்.

23) இஞ்சி முரப்பா


தேவையானவை:
இஞ்சி – கால் கிலோ, 
வெல்லம் – கால் கிலோ.
செய்முறை:
இஞ்சியை நறுக்கி மிக்ஸியில் அரைத்து சாறெடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடி கட்டி, கொதிக்க விடவும். இதனுடன் தெளிந்த இஞ்சிச் சாற்றை சேர்த்து, தொடர்ந்து கிளறவும். ஒட்டாமல், அல்வா பதத்துக்கு வரும்போது இறக்கித் தட்டில் கொ ட்டி, ஆற விட்டு வில்லைகளாகப் போடவும். வெல் லத்துக்குப் பதில் சர்க்கரையிலும் செய்யலாம்.

24) பூண்டு-உளுந்து சாதம்


தேவையானவை:
புழுங்கல் அரிசி – ஒரு கப், 
கறுப்பு முழு உளுந்து – அரை கப், 
சீரகம் – ஒரு டீஸ்பூன், 
பூண்டுப் பல் – 10, 
தேங்காய் துருவல் – கால் கப், 
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெறும் கடாயில் கறுப்பு உளுந்தை வாசனை வரும் வரை வறுக்கவும். உளுந்தை தோல் நீங்கிக் கழுவி, அரிசியுடன் சேர்த்து குக்கரில் போட்டு, தேவையான தண்ணீர் ஊற்றவும். இதனுடன் உப்பு, சீரகம், பூண்டு, தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். முதல் விசில் வந்ததும், அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் வேக வைத்தால், உளுந்து சாதம் ரெடி! இதற்குத் தொட்டுக் கொள்ள எள்ளுத் துவையல் நல்ல காம்பினேஷன். இது இடுப்பு எலும்பை பலப்படுத்தும். வளரும் பெண் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

25) தேன் இஞ்சி

தேவையானவை:
இஞ்சித் துண்டுகள் – ஒரு கப், 
தேன் – கால் கப்.
செய்முறை:
இஞ்சியை சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக்கி ஆவியி ல் வேக வைக்கவும். பிறகு ஈரம் போகும் வரை இஞ்சி யை ஆற விட்டு, தேனில் போட்டு வைக்கவும். குழந் தைகளுக்கு இதனை தினமும் ஒரு துண்டு கொடுத்து வர… பசியின்மை, அஜீரணம் ஏற்படாது. ஈரத்துடன் இஞ்சி யை தேனில் போடக்கூடாது.

26) பூண்டு-மஷ்ரூம் கிரேவி

தேவையானவை:
பட்டன் காளான் – 100 கிராம், 
வெங்காயம், தக்காளி – தலா 1, 
பூண்டுப் பல் – 10, 
சோம்பு – கால் டீஸ்பூன், 
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், 
தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், 
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, 
கொத்தமல்லி – சிறிதளவு, 
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு தாளித்து, நறுக் கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். மஞ்ச ள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து மீண் டும் வதக்கவும். இதனுடன் சுத்தம் செய்த காளானை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். சிறிது வெந்தவுடன், நசுக்கிய பூண்டைச் சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்க்கவும். கிரேவி பதத்துக்கு வந்ததும், நறுக் கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். இது, சப்பாத்தி, பூரி, வெஜிடபிள் ரைஸுக்கு சிறந்த சைட் டிஷ்.

27) ஜிஞ்சர் ஃப்ரூட் பஞ்ச்


தேவையானவை:
இஞ்சி – 8 அங்குலத் துண்டு, 
சர்க்கரை, எலுமிச்சைச் சாறு – தலா ஒரு கப், 
ஆரஞ்சு சாறு – 2 கப், 
இஞ்சி துருவல் – சிறிதளவு, 
குளிர்ந்த நீர் – 3 கப்.
செய்முறை:
இஞ்சியைத் தட்டி, சர்க்கரை சேர்த்து ஒரு டம்ளர் தண் ணீரில்கொதிக்கவிடவும். கொதிவந்தவுடன், அடுப்பை ‘சிம்’மில் வைத்து, மூடாமல் மேலும் 15 நிமிடம் கொ திக்க விடவும். பிறகு இறக்கி வடிகட்டி, ஆறவிடவும். அதில் எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சு சாறு கலந்து குளிர் ந்த நீர் சேர்த்துக் கலக்கி டம்ளரில் ஊற்றி, மேலாக இஞ்சி துருவல் போட்டுக் கொடுக்கவும்.

28) பூண்டு-கடலைப்பருப்பு துவையல்


தேவையானவை:
கடலைப்பருப்பு – கால் கப், 
காய்ந்த மிளகாய் – 6, 
பூண்டுப் பல் – 5, 
புளி – ஒரு சிறு நெல்லிகாய் அளவு, 
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெறும் கடாயில் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை வறுக்கவும். இதனை ஆற வைத் து மிக்ஸியில் போட்டு புளி, உப்பு சேர்த்து அரைக்க வும். தயிர் சாதம், ரசம் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள ஏற்ற துவையல் இது.

29) ஜிஞ்சர் வெஜ் ஃப்ரை


தேவையானவை:
துருவிய இஞ்சி – 2 டேபிள்ஸ்பூன், 
பட்டாணி – கால் கப், 
கேரட் – 1 (பொடியாக நறுக்கவும்), 
வெங்காயம் – 1, 
புருக்கோலி பூ – 1, 
சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், 
எண்ணெய் – 2 டீஸ்பூன், 
உப்பு – தேவையான அளவு,
செய்முறை:
சோள மாவுடன் உப்பு, துருவிய இஞ்சி, ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையில் கேரட், பட்டாணி, உதிர்த்த புருக் கோலி பூ சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவு ம். இதனுடன் காய்கறிக் கலவையைச் சேர்த்துக் கிளற வும். மிதமான தீயில் மூடி வைத்து வேக விடவும். வாசனை வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

30) பூண்டு-காய்கறி சூப்


தேவையானவை:
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு (கலந்தது) – ஒரு கப், 
பூண்டுப் பல் – 6, 
மிளகு, சீரகத்தூள், வெண்ணெய் – தலா கால் டீஸ்பூன். 
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கை 2 கப் தண்ணீ ரில் வேக விடவும். வெந்தவுடன் நசுக்கிய பூண்டு, மிளகு, சீரகத்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். 3-4 நிமிட ங்கள் கழித்து, அடுப்பிலிருந்து இறக்கி வெண் ணெய் சேர்த்துப் பரிமாறவும்.

பட்டர் -பூண்டு ரொட்டி

Posted By Muthukumar On,May 01,2015
butter garlic roti
தேவை:
2 கப் மல்டி க்ரைன் பௌடர்; 10 பூண்டு பற்கள்; 1/2 ஸ்பூண் சிவப்பு மிளகாய்த் தூள்; 1/2 கப் மஞ்சள் தூள்; பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை-கைப்பிடியளவு; மாவு பிசைய 2 ஸ்பூன் எண்ணெய் மற்றும் தண்ணீர்; உப்பு தேவையான அளவு; வெண்ணெய்-தேவைக்கேறப.
செய்முறை:
பூண்டை விழுதாக்கிக்கொள்ளவும். மற்ற பொருள்கள் அனைத்தையும் சேர்த்துக் கலந்து ஒரு பாத்திரத்தில் போட்டு மிருதுவாகப் பிசைந்து வைத்துக்கொள்ளவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, உள்ள்ங்கையில் வைத்து ரோல் போல செய்து சப்பாத்தியாகத் தட்டவும். . ஒரு தோசைக் கல்லைக் காயவைத்து அதில் போட்டு சப்பாத்தியாக சுடவும். இருபுறமும் திருப்பிப் போட்டு, ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும். 3 நிமிடம் லேசான தீயில் வேக விட்டு எடுக்கவும். தயிர் மற்றும் ஊறுகாய் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

ரஜ்மா பகோடா


Posted By Muthukumar,On May 01,2015


தேவையானப்பொருட்கள்:

ரஜ்மா - 1 கப்
கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு பற்கள் - 5 முதல் 6 வரை
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

ரஜ்மாவை 8 மணி நேரம் அல்லது இரவு முழுதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.

ஊறிய ரஜ்மாவை நன்றாக கழுவி விட்டு, குக்கரில் போட்டு அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து 4 முதல் 5 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.  வெந்த ரஜ்மாவை நன்றாக வடித்தெடுத்து ஆற விடவும்.  பின்னர் மிக்ஸியில் போட்டு அத்துடன் காய்ந்த மிளகாய் மற்றும் சோம்பைச் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு (பூண்டை தோலுடன் போடலாம்), சீரகம் ஆகியவற்றை சிறு உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரைத்த ரஜ்மா விழுது, கடலை பாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலந்துக் கொள்ளவும். பின்னர் அத்துடன் இடித்து வைத்துள்ள இஞ்சி பூண்டு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு பிசைந்துக் கொள்ளவும்.  தேவைப்பட்டால்  ஓரிரு ஸ்பூன் தண்ணீரைச் சேர்த்து கெட்டியாகப் பிசைந்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும்.  எண்ணை நன்றாக காய்ந்த பின், மாவை சிறு விள்ளல்களாக கிள்ளிப் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.

இதை மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம்.  சாத வகைகளுடன் தொட்டுக் கொள்ளவும் நன்றாக இருக்கும்.