Friday, November 14, 2014

ரவா இட்லி

Posted By Muthukumar,On November 14,2014
RAVA IDLI
தேவையான பொருட்கள்:
ரவா-1 கப்; கெட்டித் தயிர்- 1 கப்; கடலை பருப்பு- 2 டேபிள் ஸ்பூன்; உளுத்தம் பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்; முந்திரி பருப்பு- 10; ஜீரகம்- 2 டீ ஸ்பூன்; கடுகு-1 டீ ஸ்பூன் ; மிளகுத்தூள்- 2 டேபிள் ஸ்பூன்; பொடியாக நருக்கிய பச்சை மிளகாய்-2; கறிவேப்பிலை- சிறிதளவு; நெய்- 2 டேபிள் ஸ்பூன்; உப்பு -1 டீ ஸ்பூன்.
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பிலேற்றி, அதில் நெய்யை ஊற்றி சூடாக்கவும் . அதில் கடுகைப் போட்டு பொறிந்ததும், அதில் ஜீரகம், கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு, முந்திரி பருப்பு தாளிக்கவும். அதன் பின்னர், பச்சை மிளகாய், மிளகுத்தூள், கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இப்போது ரவையைப் போட்டு, வாசனை வரும்வரை வறுக்கவும். அடுப்பை அணைத்துவ்ட்டு, தயிரையும் உப்பையும் சேர்த்துக் கலக்கவும். இட்லி மாவு பதத்துக்கு வரும் வகையில் தண்ணீர் ஊற்றிக் கலக்கவும். இதை 3 நிமிடம் வைத்திருந்து, பிறகு அந்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி 10 நிமிடம் ஆவியில் வேக விடவும். விசில் வரட்டும் என்று காத்திருக்க வேண்டாம். இட்லிகளை எடுத்து சட்னியுடன் பறிமாறவும்.

Tuesday, November 11, 2014

பட்டாணி மசாலா

:
Posted By Muthukumar ,On November 11,2014
PEAS MASALA
தேவையான பொருட்கள்:
சின்ன உருளைக் கிழங்கு-15; பச்சை பட்டாணி-1 கப்; வெங்காயம்-2; வெண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்; இஞ்சிபூண்டு விழுது- 1 ஸ்பூன்; மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன்; தனியாத்தூள்-1 டீ ஸ்பூன்.
அரைக்க:
பாதாம் பருப்பு-5; முந்திரி பருப்பு-5; பொட்டுக்கடலை1 டேபிள் ஸ்பூன்; கசகசா-1 டீ ஸ்பூன்; பட்டை- 1 துண்டு.
எப்படி செய்வது?:
சின்ன உருளைக் கிழங்கை வேக வைத்து தோலுரித்துக்கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, கசகசா மூன்றையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். பட்டையையும், பொட்டுக்கடலையையும் வறுத்து ஊறவைத்த பருப்புகள் கசகசா எல்லாவற்றையும் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பிலேற்றி வெண்ணெய் சேர்த்து உருகியதும், வெங்காயத்தைப் பொந்நிறமாக வறுக்கவும். பின்னர் பட்டாணி உருளைக் கிழங்கை சேர்த்து வதக்கவும். அரைத்த விழுதை உப்புடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். பூண்டு விழுது, மிளகாய்த்தூள் தனியாத்தூள்சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.

ஓட்ஸ் வடை

ஓட்ஸ் வடை

Posted By Muthukumar,On November 11,2014

OATS VADA
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ்- 2 டம்ளர்; ரவை-1 டம்ளர்; தயிர்-100 மில்லி; பச்சை மிளகாய்-5; துருவிய தேங்காய்-4 தேக்கரண்டி; பெருங்காயத்தூள், கொத்தமல்லித்தழை, எண்ணெய், உப்பு.
செய்முறை:
ரவையைப் பக்குவமாக வறுத்துக்கொள்ளவும். தேங்காய்த்துருவலுடன் விதை நீக்கிய மிளகாயைச் சேர்த்து அரைத்து தயிரில் கொட்டவும். இத்துடன் ரவை, நறுக்கிய கொத்தமல்லித்தழை, ஓட்ஸ்சேர்த்து நன்கு கிளறவும். கலவை கெட்டியாக இல்லாவிட்டால், ஓட்ஸ் மற்றும் ரவை சேர்க்கலாம். இதை வடையாகத் தட்டி எண்ணெயில் பொந்நிறமாகப் பொறித்தெடுக்கவும். வித்தியாச சுவை கொண்ட ஓட்ஸ் வடை தயார்.