Sunday, August 12, 2012

பட்டர் முறுக்கு

Posted On Aug 12,2012,By Muthukumar
தேவையானப்பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்
கடலை மாவு - 1/2 கப்
பொட்டுகடலை மாவு - 1/4 கப்
வெண்ணை - 3 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

பொட்டுகடலை மாவிற்கு - 1/4 கப்பிற்கு சற்று கூடுதலாக பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து சலித்து தேவையான மாவை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அரிசி மாவு மற்றும் கடலை மாவையும் சலித்து எடுத்து, அத்துடன் பொட்டுக்கடலை மாவையும் சேர்த்து கலந்துக் கொள்ளவும். அத்துடன் வெண்ணை, பெருங்காயத்தூள், சீரகம், உப்பு சேர்த்து மீண்டும் நன்றாகக் கலந்து, தேவையான அளவு தண்ணீரை விட்டு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கவும்.  முறுக்கு அச்சில் ஒற்றை கண் நட்சத்திர வடிவிலான வில்லையைப் போட்டு, மாவை அதில் போட்டு எண்ணையில் சிறு சிறு வட்டங்களாக பிழிந்து விடவும்.  முறுக்கை திருப்பி விட்டு நன்றாக வெந்ததும் எடுத்து வைக்கவும்.

ப்ரான் கோல்டன் ப்ரை

Posted On Aug 12,2012,By Muthukumar

இறாலை எந்தவிதத்தில் சேர்த்தாலும் வாசனை தூக்கிக்கொண்டு போகும். சாதத்துடன் சேரும் இறால் குழம்பு அதன் தனிச்சுவையில் ஈர்க்கும். இறாலைக் கொண்டு செய்யும் பிரான் கோல்டன் ப்ரையும் மணக்கும். நாவில் ருசிக்கும்.

தேவையான பொருட்கள்:
இறால் - 1/2 கிலோ
எலுமிச்சம் பழம் -2 (பிழிந்து சாறெடுக்கவும்)
வெள்ளை மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
முட்டை - 1
பிரெட் தூள் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். எலுமிச்சம்பழச்சாறில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கி இறாலில் புரட்டி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
முட்டையை அடித்து வைத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இறாலை முட்டையில் முக்கி ரொட்டித்தூளில் புரட்டியெடுக்கவும். இதை உதிரி உதிரியாக எண்ணெயில் போடவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு இறால் பொன்னிறமாக ()வந்ததும் எடுத்து விடவும்.
இப்போது மணக்கும் `ப்ரான் கோல்டன் ப்ரை' ரெடி.

Saturday, August 11, 2012

பீட்ரூட் இனிப்பு பச்சடி

Posted On Aug 12,2012,By Muthukumar
திருமண விருந்துகளில் "இனிப்பு பச்சடி" கண்டிப்பாக இடம் பெறும்.  இது "தக்காளி", "பீட்ரூட்" அல்லது பழத்துண்டுகளை வைத்து செய்யப்படும்.  பீட்ரூட் இனிப்பு பச்சடிக்கான குறிப்பு:
தேவையானப்பொருட்கள்:

பீட்ரூட் - 1
சர்க்கரை - 4 அல்லது 5 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது
காய்ந்த திராட்சை - சிறிது
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
சோளமாவு - 1 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பீட்ரூட்டை கழுவி, தோலை சீவி விட்டு துருவிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் நெய்யை விட்டு அதில் முந்திரி பருப்பு, திராட்சை ஆகியவற்றை இலேசாக வறுத்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் பீட்ரூட் துருவலைப் போட்டு 5 முதல் 6 நிமிடங்கள் வரை வதக்கி எடுத்து ஆற விடவும்.  ஆறிய பின் விழுதாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை விட்டு அத்துடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை நீர் நன்றாகக் கொதிக்கும் பொழுது அதில் பீட்ரூட் விழுதைச் சேர்த்து கிளறி விடவும். மீண்டும் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது, அதில் சோளமாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.  ஒரு கொதி வர ஆரம்பித்ததும் அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை மற்றும் ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.