Sunday, July 29, 2012

மல்லி சிக்கன்


Posted On July 29,2012,By Muthukumar

சிக்கன் குழம்பு வகைகளில் தனியா சிக்கன் வகை கொஞ்சம் புதுமையானது. அதிக சுவையானது. செய்து பார்த்து சுவையை அனுபவியுங்களேன்.

தேவையான பொருட்கள்:
சிக்கன் துண்டுகள் -1 கிலோ
கொத்தமல்லி இலை -2கட்டு (சுத்தம் செய்து நறுக்கியது)
புதினா இலை -1 கட்டு (சுத்தம் செய்து நறுக்கியது)
வெங்காயம் -3 (நறுக்கியது)
இஞ்சி, பூண்டு விழுது- 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
தயிர் - 250 மில்லி லிட்டர்
தனியா தூள் - 3 டீஸ்பூன்
சீரகத்தூள் - 11/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப
செய்முறை:
தயிரில் பாதி அளவு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து சிக்கனை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, இஞ்சி விழுதை வதக்கவும். பச்சைமிளகாய், சீரகம், தனியா தூள் சேர்த்து கிளறவும்.
சிக்கன் துண்டுகளை வடித்து கடாயில் சேர்த்து அதிக பட்ச தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும். மீதமுள்ள தயிரை சேர்க்கவும். அதோடு கொத்தமல்லி இலை, புதினாவை சேர்த்து கிளறவும்.
மூடியை மூடி சிக்கன் வேகும்வரை குறைந்த தீயில் வைத்திருக்கவும். வெந்ததும் இறக்கி பரிமாறவும். இப்போது சூடான தனியா சிக்கன் ரெடி.

Saturday, July 28, 2012

கேழ்வரகு இட்லி/தோசை

Posted On July 29,2012,By Muthukumar

கேழ்வரகு இட்லியை வெவ்வேறு முறைகளில் தயாரிக்கலாம்.

1 கப் கேழ்வரகு, 1 கப் இட்லி அரிசி, 1/2 கப் உளுத்தம் பருப்பு, 2 டீஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றைத் தனித்தனியாக ஊற வைத்து அரைத்து, உப்பு போட்டு கரைத்து, புளிக்க வைத்து, மறுநாள் இட்லி அல்லது தோசை செய்யலாம்
 
கேழ்வரகிற்குப்பதில், கேழ்வரகு மாவை சேர்த்தும் செய்யலாம்.  மேற்கூறிய பொருட்களில், கேழ்வரகை தவிர்த்து விட்டு மற்ற அனைத்தையும் ஊற வைத்து அரைத்து, அத்துடன் 2 கப் கேழ்வரகு மாவையும் சேர்த்து,  உப்பு போட்டு கரைத்து, இரவு முழுவதும் புளிக்க விட்டு, மறுநாள் இட்லி/தோசை சுடலாம்.
 
அல்லது, வீட்டில் இருக்கும் புளித்த இட்லி மாவில் (2 கப் மாவிற்கு 1 கப் கேழ்வரகு மாவு) கேழ்வரகு மாவைச் சேர்த்து,  அத்துடன் சிறிது உப்பும்,  1/2 டீஸ்பூன் "ஃபுரூட் சால்ட்டும்"  சேர்த்துக் கலந்து, இட்லி/தோசை செய்யலாம்.
 
நான் இரண்டாவதாகக் கூறியுள்ள முறைப்படி, அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஊற வைத்து அரைத்து, அத்துடன், கேழ்வரகு மாவு, உப்பு சேர்த்துக் கரைத்து, புளிக்க வைத்து இட்லி/தோசை செய்தேன்.

மாவில் சுவைக்காக, கடுகு, சிறிது உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டி செய்தேன்.

தோசை சுட,. இட்லி மாவில் மேலும் சிறிது தண்ணீரைச் சேர்த்து, தோசையாக சுட்டெடுக்கவும்.

கொத்துமல்லி சட்னியுடன் பரிமாறலாம்.

வெண்டைக்காய் வதக்கல்

Posted On July28,2012,By Muithukumar

தேவையானப்பொருட்கள்:

வெண்டைக்காய் - 1/4 கிலோ
காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை:

வெண்டைக்காயைக் கழுவி, துடைத்து விட்டு 1 அங்குல நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் எண்ணை விடவும்.  எண்ணை காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் (கிள்ளி போடவும்) போட்டு ஒரு வினாடி வறுக்கவும்.  பின்னர் அதில் வெண்டைக்காயைப் போட்டு அத்துடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் சில நிமிடங்கள் வதக்கவும்.  பின்னர் அதில் எலுமிச்சம் சாற்றைச் சேர்த்து மீண்டும் சில நிமிடங்கள் வதக்கி இறக்கி வைக்கவும்.

Friday, July 27, 2012

கிரேக்க நாட்டு சூப்பர் உணவுகள் -முசாகா

Posted On July 27,2012,By Muthukumar
கிரேக்க நாட்டின் தேசிய உணவு, முசாகா. காய்கறி, ஆட்டிறைச்சியை அடுக்கடுக்காய் கொண்ட அற்புத சுவைகொண்ட உணவு இது. சுவையிலும், ஆரோக்கியத்திலும் இது பிரசித்திபெற்றது.
தேவையான பொருட்கள்:
பெரிய கத்தரிக்காய் - 1 கிலோ.
ஆட்டிறைச்சி - 1 கிலோ.
ஆலிவ் எண்ணெய் - 200 மி.லி.
பெ.வெங்காயம் - 150 கிராம்.
பூண்டு - 50 கிராம்.
சுக்கினி (இது ஒருவகை காய்கறி. வெள்ளரி போன்றிருக்கும்) - 600 கிராம்.
ரெட் ஒயின் - 200 மி.லி.
(விரும்பினால் மட்டும் சேர்த்துக்கொள்ளலாம்)
பார்மேசான் பாலாடைக்கட்டி- 50 கிராம்.
கருவா பட்டை தூள் - 20 கிராம்.
ஸ்டாரநைஸ் தூள் - 10 கிராம்.
தக்காளி பேஸ்ட் - 100 கிராம்.
உப்பு - 30 கிராம்.
கருப்பு மிளகு - 15 கிராம்.
உருளைக்கிழங்கு - 700 கிராம்.
ஒரகோனா - 40 கிராம்
பார்ஸ்லி - 40 கிராம்.
புதினா - 40 கிராம்.
மொசரல்லா பாலாடைக்கட்டி- 200 கிராம்.
தக்காளி கூழ் - 350 கிராம்.
ஒயிட் சாஸ்- தேவையான அளவு.
முக்கிய குறிப்பு:
- பெரிய கத்தரிக்காயை வாங்கி, வட்ட மாக நறுக்குங்கள்.
- ஆட்டிறைச்சியை பச்சையாகவே மின்ஸ் செய்து, பிசிறு போல் ஆக்கி விடுங்கள்.
- வெங்காயம், பூண்டுவை சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
- தக்காளியை லேசாக வேகவைத்து, தோலை உரித்து, விதையை நீக்கிவிட்டு கூழாக்கிக் கொள்ளவேண்டும்.
- 100 கிராம் வெண்ணையை உருக்கி, அதில் 100 கிராம் மைதாவை கலந்து, பால் விட்டு கிளறி கெட்டியாகும் வரை லேசாக கொதிக்கவிடவும். உப்பும், மிளகும் கலந்து கொள்ள வும். இதுதான் ஒயிட் சாஸ்.
- உருளைகிழங்கை வட்டமாக நறுக்கி, உப்பு தண்ணீரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். சுக்கினியை வட்டமாக நறுக்கி, எண்ணெயில் பாதி அளவில் வேக வையுங்கள்.
செய்முறை:
மின்ஸ் செய்துவைத்திருக்கும் இறைச்சியை எண்ணெயில் வறுக்கவும். வறுக்கும்போதே ரெட் ஒயின் ஊற்றவும். பிரவுன் கலரில் வெந்துவரும்.
நறுக்கிய வெங்காயம், பூண்டு போன் றவைகளை ஆலிவ் ஆயிலில் வதக்கிவிட்டு, அதில் இறைச்சியை சேர்த்து ஐந்து நிமிடம் கிளறவும். ஒரகோனா, பார்சிலி, ஸ்டாரநைஸ் தூள், தக்காளி பேஸ்ட் போன்றவைகளை சேர்க்கவும். உப்பு, கார சுவையை சரிபார்த்து, கெட்டி யாகும் வரை கிளறி இறக்கி ஆறவைக்கவும். அதற்கு மேல் பார்மேசான் பாலாடைக்கட்டி துருவலை தூவவும்.
நறுக்கிவைக்கப்பட்டிருக்கும் கத்தரிக்காய், சுக்கினியை தோசைக்கல்லில் மாற்றி மாற்றிப்போட்டு வறுத்து எடுக்கவும்.
வாணலியில் வெண்ணை பூசி, தக்காளி கூழை முதல் அடுக்காக ஊற்றவும். அதற்கு மேல் கத்தரிக்காயை அடுக்கவும். அதற்கு மேல் இறைச்சியையும், அடுத்த அடுக்காக பாலாடைக்கட்டி, அதற்கு மேல் சுக்கினி, உருளைக் கிழங்கை அடுக்கவும். மீண்டும் இறைச்சியை வைத்து அதற்கு மேல் மீதம் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் அடுக் கடுக்காய் வைக்கவும். மேல் பகுதியில் ஒயிட் சாஸ் விடுங்கள். பின்பு மொசரல்லா பாலாடைக்கட்டியை வைத்து ஓவனில் வைக்கவும். அப்போது எல்லாம் உருகி, முசாகா செட் ஆகிவிடும். பின்பு என்ன சூட்டோடு சுவைக்கவேண்டியதுதான்.
மேற்கண்ட அளவில் தயாரித்தால் மொத்தம் 6 கிலோ இருக்கும். இதனை 7 பேர் சாப்பிடலாம்.

Wednesday, July 25, 2012

மைசூர்பாகு

தேவையான பொருட்கள்:
டலை மாவு – 1 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 2 கப்
செய்முறை:
முதலில் கடலை மாவை கட்டி யில்லாமல் இருப்பதற்காக நன்கு சலித்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். வட்டமான அல்லது சதுரமான தட்டு, அல்லது ட்ரேயில் நெய் தடவி வைக்கவும்.
அடுப்பில் வாணலியில் சிறிதளவு தண்ணீர் விட்டு, சர்க்கரையை போட்டு கொதிக்க விடவும். ஒற்றை கம்பிப்பதம் வர ஆரம்பித்த உடனேயே, ஒரு கையால் கிளறிக் கொண்டே, மற்றொரு கையால் கடலைமாவை கொஞ்ச கொஞ்சமாகப் போடவும். இல்லையென் றால், கடலைமாவு கட்டி தட்டிவிடும்.
கடலை மாவு சர்க்கரைப்பாகில் நன்கு கரைந்து கொதிக்க ஆரம்பி த்த வுடன், நெய்யை சிறிது சிறிதா க விட்டு, ஒரு கையால் விடாமல் கிளறிக் கொண்டே வரவும்.
சிறிது நேரத்தில், பாகு அடியிலி ருந்து நுரைத்துக் கொண்டு வரும்.
(முதன் முறையாக செய்து பார்ப் பவர்களுக்கு: பிரெட்டில் இருப்பது போல் , பாது புள்ளி புள்ளியாக பூத்துக் கொண்டு வரும். அது தான் சரியான பதம்.) இப்போது, மேலும் ஒருமுறை கிளறி, ஏற்கனவே, நெய் தடவி வைத்த தட்டில் கொட்டவும்.
நன்கு ஆறியவுடன், நெய் தடவிய கத்தியால் சதுரமாகவோ, டைமண்ட் வடிவிலோ துண்டுகள் போடவும்.
இம்முறையில் செய்யப்படும் மைசூர்பாகு மிகவும் மென்மையான தாக இருக்கும்.
சில குறிப்புகள்:
கடலை மாவு புதியதாக இருக்க வேண் டும்.
உருகிய நெய் மட்டுமே விடவேண்டும். உறைந்து இருந்தால், நெய் பாட்டில் அல்லது நெய் டப்பாவை சிறிது நேரம் வெந்நீரில் வைத்தாலே உருகி விடும்.
கடலை மாவை சலிக்காமல் அப்படியே போட்டால் அதிலிருக்கும் கட்டிகள் கரையாது.
அதிக அளவு நெய் வேண்டாம் என்பவர்கள், மைசூர்பாகு சாப் பிடுவதற்கு சிறிது கடினமானதாக இருந்தால் பரவாயில்லை என்ப வர்கள், கடலை மாவு : சர்க்கரை : நெய் இவைகளை 1 : 1 : 1 என்ற விகிதத்தில் செய்யலாம்.
மைசூர்பாகை தட்டில் கொட்டிய பிறகு அழுத்தக்கூடாது. வேண்டு மானால் அடியில் நெய் தடவிய தட்டையான கரண்டி, அல்லது தட்டா ல் லேசாக சமப்படுத்தலாம்.

Sunday, July 22, 2012

சமையல் குறிப்புகளும் இனி சமூகமயம்.

Posted On July 23,2012,By Muthukumar
ஃபுட்லி அடிப்படையில் சமையல் குறிப்புகளுக்கான தேடியந்திரம் என்றாலும் எதிர்பார்க்கும் சமையல்குறிப்புகளை தேடித்தருவதோடு மேலும் சிலவற்றை அது சாத்தியமாக்குகிறது.அதாவது சமையல் குறிப்புகளை அது சமூக மயமாக்குகிறது.
சமூக மயம் என்றால் நண்பர்களின் வலைப்பின்னலுக்குள் பகிர்ந்து கொள்ளும் வசதி என்று புரிந்து கொள்ளலாம்.ஆம் ஃபுட்லி சமையல் குறிப்புகளை பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது.அப்படியே நண்பர்களின் விருப்பமான சமையல் குறிப்புகளையும் தெரிந்து கொள்ள உதவுகிறது.அந்த வகையில் சமியல் குறிப்பு தேடலை அலுப்புக்கு இடமில்லாத சுவாரஸ்யமான அனுபவமாக மாற்றித்தருகிறது.
ஃபுட்லியில் சமையல் குறிப்புகளை தேடுவதே கொஞ்சம் சுகமான அனுபவம் தான்.காரணம் சமையல் குறிப்புகளை விருப்பத்திற்கு ஏற்ப தேடிக்கொள்ளலாம்.என்ன வகையான உணவு தேவை என்று குறிப்பிட்டு தேடுவதோடு அந்த உணவு எந்த எந்த பொருட்களை கொண்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு தேடலை பட்டை தீட்டிக்கொள்ளலாம்.உதாரணத்திற்கு குறிப்பிட்ட காய்கறி அல்லது உணவு பொருளை தவிர்த்து விட்டு சமைக்க கூடிய உணவுக்கான சமையல் குறிப்புகளை தேடலாம்.
இதை தவிர கொழுப்பு இல்லாத உணவு வகைகளையும் தேடிக்கொள்ளலாம்.
விருப்பமாக சமையல் குறிப்பு கண்ணில் பட்டதும் அதனை பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.பேஸ்புக்கில் லைக் செய்வது போல இங்கேயும் சமையல் குறிப்பை பிடிச்சிருக்கு என்று உணர்த்துவதறகான வழி இருக்கிறது.அதற்கான ஐகானை அழுத்தியதும் அந்த சமையல் குறிப்பு நண்பர்களோடு தானாக பகிரப்பட்டு விடும்.சமையல் குறிப்புகளை சேமித்து வைப்பதன் மூலம் நம்மாக பட்டியலையும் தயார் செய்து கொள்ளலாம்.பின்னர் தேவைப்படும் போது தேடி எடுப்பதும் சுலமபாக இருக்கும்.
அதே போல அந்த உணவை சமைக்க விரும்புகிறேன் என்பதையும் ஏற்கனவே சமைத்திருந்தால் அந்த விவரத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.
ஆக சமையல் தொடர்பான தேடல்களை சுலபமாக நண்பரக்ளுடன் பகிர்ந்து கொள்ளலாம்.நண்பர்கள் பகிர்ந்து கொள்வதையும் பார்க்க முடியும் என்பதால் அவர்கள் மூலமாக புதிய உணவு வகைகளையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.அப்படியே உணவு மற்றும் சமையல் சார்ந்த உரையாடலிலும் ஈடுபடலாம்.
இந்த பகிர்வு விருந்து போன்ற நிகழ்ச்சிகளின் போது மிகவும் உதவிகரமாக இருக்கும்.விருந்துக்கான மெனுவை நண்பர்களோடு விவாதித்து சுப்பராக தயார் செய்யலாமே.
பேஸ்புக் போன்ற வலைப்பின்னல் சேவைகளில் புத்தகங்கள் பற்றியும் திரைப்படங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்ட விவாதிக்க வசதி இருக்கிறது.அதே போலவே பெண்கள் இந்த தளம் வழியே சமையல் குறிப்புகளை பகிர்ந்து கொண்டு சமையல் கலை பற்றியும் விவாதிக்கலாம்.சமையல் என்றால் பெணகள் மட்டும் தானா என்ன?சமையல் கலையில் ஆர்வம் உள்ள ஆண்களுக்கும் தான் இது பயன்படும்.
இந்த தளத்தில் உறுப்பினராகும் போதே பேஸ்புக் மூலமெ உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.இல்லை என்றால் இமெயிலை சமர்பித்தும் உறுப்பினராகலாம்.பேஸ்புக் மூலமாக சேர்ந்தால் நாம் கண்டுபிடிக்கும் சமியல் குறிப்புகள் தானாக பேஸ்புக்கில் வெளியாகி நண்பர்கள் பார்வைக்கு சென்றுவிடும்.
இமெயில் மூலம் உறுப்பினரானால் நாமே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.பேஸ்புக் மட்டும் அல்ல டிவிட்டர்,கூகுல் பிலஸ்,பின்ட்ரெஸ்ட் போன்றவை மூலமும் நண்பர்களோடு பகிரலாம்.
இந்த தளம் மூலமே சமியல் குறிப்புகளை வழங்கும் கலைஞர்களையும் பின்தொடரலாம்.புதிய சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இது சிறந்த வழி.
ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்பது போல சமையல் கலையையும் இந்த தளம் நட்போடு சேர்த்து சுவாரஸ்யமாக்குகிறது.என இதில் உள்ளது எல்லாமே மேற்கத்திய உணவு வகைகள் என்பது தான் ஒரே குறை.
இணையதள முகவரி;http://www.foodily.com/

ஈசியா பரோட்டா சுடலாம் வாங்க

Posted On July 23,2012,By Muthukumar

பேச்சிலர்ஸ்க்காகத்தான் இந்த ஈசி பதிவு.வீட்டில் பரோட்டா சுடனும் என்றால் ஒரு சிலர் அதனை பெரிய மலையாகக் கருதி செய்வதேயில்லை.பரோட்டா வெளியில் சாப்பிட்டால் உடல் நலனுக்கு கேடு.நிறைய எண்ணெய் மற்றும் மேற்சாமான் சேர்ப்பாங்கன்னு பயம்.அதனையே நாம் எப்பவாவது வீட்டில் ஆசைக்கு செய்து சாப்பிடலாம் .சிம்பிளாக அரை மணி நேரத்தில் எப்படி பரோட்டா சுடுவது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
தரமான மைதா மாவு - 300 கிராம்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
சீனி - 1 டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன் (அல்லது சுவைக்கு)
தண்ணீர் - முக்கால் கப்

ஒரு பவுலில் தண்ணீர்,உப்பு,சீனி போடவும்.பின் மைதா மாவு சேர்க்கவும்.நன்கு கலந்து பிசைந்து எடுக்கவும்.அத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து உருண்டையாக்கி மூடி அரை மணி நேரம் வைக்கவும்.
அரைமணி நேரம் கழித்து கையால் சிறிது நிமிண்டி ஆறு உருண்டைகளாக பிரிக்கவும்.

ஒரு உருண்டையை எடுத்து சிறிய வட்டமாக பரத்தி சிறிது எண்ணெய் தடவி நான்காக இப்படி மடித்து வைக்கவும்.ஆறு உருண்டைகளையும் இப்படி செய்து கொள்ளவும்.இரண்டாவது ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயை இப்படி மடிக்க தடவ பயன் படுத்த வேண்டும்.
பின்பு இப்படி சதுரமாக பரத்தி கொள்ளவும்.கையால் கூட பரத்தலாம்.கையால் பரத்தினால் நன்கு பொங்கி வரும்.
தவா சூடானவுடன் பரத்திய சதுர பரோட்டாவை போட்டு வேக விடவும்.இப்படி மேற்புறம் கலர் மாறி வரும்.

திருப்பி போடவும்.இப்படி திட்டு திட்டாக இளஞ்சிவப்பு புள்ளி வரும் பொழுது எண்ணெயை சிறிது சிறிதாக இருபக்கமும் தடவி சுட்டு எடுக்கவும்.அடுப்பை மீடியம் சிம்மில் வைத்து சுட வேண்டும்.மீதியுள்ள ஒர் டேபிள் ஸ்பூன் எண்ணெய் சுடும் பொழுது தடவ பயன்படுத்தலாம்.

ஆக ஆறு பரோட்டா செய்ய மொத்தம் மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய் தேவைப்படும் .

சுட்டு எடுத்த பரோட்டாவை இப்படி தட்டி எடுத்து பாரிமாறவும்.அடுக்காக சூப்பராக வரும்.வீச்சு பரோட்டா செய்ய தெரியாதவங்க இப்படி செய்து அசத்தலாம்.
சும்மாவே சீனி தொட்டு சாப்பிடலாம்.அல்லது தேங்காய் வெங்காய சட்னி கூட போதும்.அடுத்து சட்னி பதிவு .ஒ.கே வா?
அல்லது எனக்கு குருமா தான் பிடிக்கும் என்றால் சிக்கன் உருளைக்கிழங்கு குருமா சூப்பர் காம்பினேஷன்.


மாங்காய் சாதம்

Posted On July 23,2012,By Muthukumar
தேவையானப்பொருட்கள்:

சாதம் - 2 கப்
மாங்காய்த்துருவல் - 1 கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணை - 4 முதல் 5 டீஸ்பூன் வரை
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - சிறிது
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
 
செய்முறை:

ஒரு பச்சை மாங்காயை எடுத்து, தோல் சீவி துருவிக் கொள்ளவும். மாங்காய் துருவல் ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். (புளிப்புத்தன்மை மற்றும் அவரவர் ருசிக்கேற்ப மாங்காய்த்துருவலை சற்று கூட்டி அல்லது குறைத்துக் கொள்ளலாம்).
 
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் எண்ணை விடவும்.  எண்ணை காய்ந்ததும் அதில் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை மற்றும் முந்திரிப்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிப்போடவும்.  காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போடவும்.  கறிவேப்பிலையையும் போடவும்.  பின்னர் அத்துடன் மாங்காய்த்துருவல், மஞ்சள் தூள் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை, அடுப்பை  சிறு தீயில் வைத்து வதக்கவும்.  கடைசியில் உப்பு போட்டுக் கிளறி விட்டு, சாதத்தைச் சேர்த்து நன்றாகக் கிளறி எடுக்கவும்.
 
பின்குறிப்பு: மாங்காயை துருவி சேர்ப்பதற்குப் பதிலாக, அரைத்தும் சேர்க்கலாம்.

மிளகு காராசேவு

Posted On July 22,2012,By Muthukumar
தேவையானப்பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்
கடலை மாவு - 1 கப்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
 
செய்முறை:

அரிசி மாவு, கடலை மாவு இரண்டையும் நன்றாக சலித்துக் கொள்ளவும். மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
 
ஒரு அகலமான பாத்திரம் அல்லது தட்டில் நெய், சமையல் சோடா, உப்பு மூன்றையும் போட்டு, விரல்களால் நன்றாக தேய்க்கவும்.  2 அல்லது 3 நிமிடங்களில் மூன்றும் கலந்து நுரை போல் வரும்.  அப்பொழுது அதில் சலித்து வைத்துள்ள மாவு, பொடித்த மிளகு சேர்த்துக் கலந்து விடவும்.  பின்னர் அதில் சிறிது சிறிதாக தண்ணீரை விட்டு மிருதுவாக பிசையவும்.
 
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் எண்ணை விட்டு காய விடவும்.  எண்ணை காய்ந்ததும், "காராசேவு கட்டையை" எண்ணைக்கு மேலே ஒரு கையால் பிடித்துக் கொண்டு, மறு கையில்  எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து,  கட்டையின் மேல் வைத்து அழுத்தித் தேய்க்கவும்.  காராசேவு  நீள துண்டுகளாக எண்ணையில் விழும்.  காராசேவை சாரணியால் சற்று திருப்பி வேக விட்டு, சிவக்க வெந்ததும், எண்ணையில் இருந்து அரித்து எடுக்கவும்.
 
பின்குறிப்பு:  "காரா சேவு கட்டை" வெவ்வேறு துளைகளுடன் கடைகளில் கிடைக்கிறது.  மிளகு சேவு செய்வதற்கு சற்று பெரிய துளையுள்ளக் கட்டை தேவை.  "காரா சேவு கட்டை" இல்லையெனில், சாரணிக்கரண்டியை உபயோகித்தும் செய்யலாம்.  முறுக்கு அச்சில், பெரிய துளையுள்ள "நட்சத்திர" வில்லையைப் போட்டும், முறுக்கு பிழிவது போல் பிழிந்தும் செய்யலாம்.

வாழைப்பூ போண்டா


Posted On July 22,2012,By Muthukumar

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ 1,கடலை மாவு 1/4 கிலோ, உருளைக் கிழங்கு, வெங்காயம் 100 கிராம்,பச்சை மிளகாய் 6, மிளகாய் துள் 2 ஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு.

செய்முறை:

வாழைப்பூவை உரித்து, சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். பின் சுத்தம் செய்த வாழைப்பூ,உருளைக்கிழங்கையும் ஆவியில் வேகவைத்து எடுத்து கிழங்கை தோல் நீக்கி மசிக்கவும். வாணலியில் 3 ஸ்பூன் எண்ணெய் உற்றி சின்ன துண்டுகளாக நறுக்கியவெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, போட்டு வதக்கவும். வேக வத்த பூ கிழங்கு ஆகியவற்றில் உப்பு சேர்த்து பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும். கடலைமாவுடன், மிளகாய்துள், உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு எடுத்து கொள்ளவும். எண்ணெயை காய்ந்ததும் பிடித்து வைத்த சின்ன சின்னஉருண்டைகளை கரைத்து  வைத்த மாவில் தோய்த்து பொறித்து எடுக்கவும்.இதோ அருமையான  வாழைப்பூபோண்டா தயார்.

முருங்கைக்கீரை பொரிச்சகுழம்பு

Posted On July 22,2012,BY Muthukumar
தேவையானப்பொருட்கள்:

முருங்கைக்கீரை - ஒரு கட்டு
பயத்தம் பருப்பு - 1/2 கப்
சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வறுத்து அரைக்க:

காய்ந்த மிளகாய் - 2
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சாம்பார் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)

செய்முறை:

முருங்கைக்கீரையை உருவி, அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பயத்தம் பருப்பை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மலர வேக வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிவக்க வறுத்து, ஆறியவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.

முருங்கைக்கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது தண்ணீரைச் சேர்த்து, 3 அல்லது 4 நிமிடங்கள் வேக விடவும்.  பின்னர் அதில் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்து, ஒரு கொதி வரும் வரை வேக விடவும். ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும்.  தேவைப்பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கிளறி மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும். 

குழம்பு நன்றாகக் கொதித்ததும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துக் கொட்டி, இறக்கி வைக்கவும்.

சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

மட்டன் விண்டாலு

Posted On July 22,2012,By Muthukumar
ட்டன் வகைகளில் எத்தனை விதமான ரெசிபிகள் தயாரித்தாலும் அத்தனையும் மணக்க மணக்க அமைந்து நாக்கை அந்த சுவைக்கு அடிமையாக்கி விடும். இந்த மட்டன் விண்டாலு வகையும் அந்த ரகமே. செய்து பார்த்து சுவைப்போமா?
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
நெய் - 100 கிராம்
கொத்தமல்லி இலை - 1/2 கட்டு(நறுக்கியது)
வெங்காயம் - 100 கிராம்(நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 100 கிராம்
விண்டாலு மசாலாவிற்கு:
சீரகம் - 1 டீஸ்பூன்
காஷ்மீர் மிளகாய் - 12
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் - 3
பூண்டு - 15 கிராம்
வினிகர் - 30 மில்லிகிராம்
செய்முறை:
மட்டனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். வினிகர் சேர்த்த மசாலாக்களை அரைக்கவும். மெல்லிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். அதோடு கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறவும். அத்துடன் மசாலா, தேவையான உப்பு சேர்க்கவும்.
இப்போது மட்டனையும் அதில் சேர்த்து மூடி வைக்கவும். மட்டன் வேகும்வரை போதுமான தண்ணீர் ஊற்றி அடிக்கடி கிளறவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து நான்காக வெட்டி மட்டனுடன் சேர்த்து கிளறவும்.
குறைந்த தீயில் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
இப்போது மணக்கும் மட்டன் விண்டாலு ரெடி. வெள்ளை சாதத்துடன் தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

Friday, July 20, 2012

தவலை அடை

தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 1 கப்
கடலைப் பருப்பு – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 4
மிளகு – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – தேவையான அளவு
தாளிக்க
எண்ணை, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
  • அரிசியையும் பருப்புகளையும் மிள கு, மிளகாய் சேர்த்து மிஷினில் அல் லது மிக்ஸியில் தயாராக ரவைப் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொ ள்ளவும்.
  • வாணலியில் ஒரு டீஸ்பூன் எண் ணை வைத்து கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து 4 கப் தண் ணீர் சேர்க்கவும்
  • தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் தேங்காய்த் துருவல், அரை த்துவைத்திருக்கும் கலவையைக் கொட்டிக் கிளறவும்.
  • மேலே முதல் வகை அடைக்குச் சொன்ன முறையிலேயே உருளி அல்லது வாணலியில் அடைகளாகத் தட்டி மேலே மூடி வேக வைக்கவும்.
  • சுற்றிலும் எண்ணெய் விட்டு, நடுவிலும் துளையிட்டு எண்ணெய் விட்டு, சிவக்க வேகவைக்கவும்.
  • மறுபக்கமும் திருப்பிவிட்டு, எண்ணைவிட்டு மொறுமொறுப்பாக எடுத்து, சூடாகப் பரிமாறவும்.
என்னங்க சூடான சுவையான தவல அடை தயாராயிடுச்சு, அப்புறம் என்னங்க! நீங்களும் சாப்பிட்டுவிட்டு, எனக்கு இரண்டு தவல அடையை வையுங்க•  எனக்கு பசிக்குது சீக்கிரமா செய்யுங்கள்.

Sunday, July 15, 2012

நெத்திலி மீன் கூட்டு

Posted On July 150,2012,By Muthukumar
மீன்களில் நெத்திலி தனிச்சுவை. குழம்பு வைத்தாலும் பொரித்தாலும் அதன் அற்புதச்சுவை நாவிலேயே இருந்து கொண்டிருக்கும். சுவையான நெத்திலி மீன் கூட்டு வைப்பதை தெரிந்து கொண்டால் அடிக்கடி அதை வீட்டின் முக்கிய உணவுப்பட்டியலில் சேர்த்து விடுவீர்கள். அத்தனை அற்புதச்சுவை இதன் சிறப்பு. செய்து பார்த்து சுவைப்போமா..!

தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் -1/2 கிலோ
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
தக்காளி -100 கிராம்(நறுக்கியது)
பச்சை மிளகாய் -4 (கீறியது)
புளி - கோலியளவு
உப்பு, எண்ணைய் -தேவைக்கேற்ப

அரைக்க:

தேங்காய் -1/4 மூடி
இஞ்சி -சிறு துண்டு
பூண்டு -4 பல்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்

தாளிக்க:

சோம்பு -1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிதளவு

செய்முறை:

மீனை சுத்தம்செய்து கொள்ளவும். மசாலாவை அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
அரைத்த மிளகாய், புளிக்கரைசல், மற்றும் போதுமான உப்பு சேர்த்து கிளறவும்.
இந்த கலவை கொதித்ததும் நெத்திலி மீனை சேர்க்கவும். குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து நன்கு திக்காகி கூட்டு பதத்தில் வந்ததும் இறக்கி விடவும். சாதத்தில் ஊற்றி சாப்பிடும்போது சூப்பர் சுவையை உணர்வீர்கள்.

Tuesday, July 10, 2012

சிக்கன் தேங்காய்ப்பால் குருமா

Posted On July 10,2012,By Muthukumar
சூப்பர் சுவைப் பட்டியலில் இடம் பிடித்த உணவுப்பட்டியலில் இந்த தேங்காய்ப்பால் குருமாவுக்கும் இடம் உண்டு. இதை தயார் செய்து ருசிப்பவர்கள் அதன்பிறகு இந்த சுவைக்கு அடிமையாகவே ஆகி விடுவீர்கள். அத்தனை டேஸ்ட்டான இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாமா?

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 200 கிராம்(நறுக்கியது)
பச்சை மிளகாய் - கீறியது
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தனியா தூள் - 3 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தேங்காய் - ஒரு மூடி(திருவியது)
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். தேங்காயை அரைத்து திக்காக பால் எடுக்கவும். ஒரு அடி கனமான கடாயில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும். அதன் பிறகு மஞ்சள்தூள், தனியா தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
இப்போது சிக்கனை இதனுடன் சேர்த்து வேகுமளவு நீர் விடவும். சிக்கன் வெந்ததும், அரைத்த தேங்காய்ப்பாலை ஊற்றி குறைந்த தீயில் சிறிதுநேரம் வைத்திருந்து இறக்கவும். சூடான, சுவையான சிக்கன் தேங்காய்ப் பால் குருமா ரெடி.

சிக்கன் வறுவல்

தேவையானவை !ஊற வைக்க:
    சிக்கன் – அரை கிலோ
    வரமிளகாய் – 6 பொடியாய் கிள்ளியது
    கறிவேப்பிலை, மல்லி தழை – இரண்டும் சேர ஒரு கைப்பிடி
    மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி
    உப்பு – அரை தேக்கரண்டி
    நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
தாளிக்க:
    நல்லெண்ணெய் – 4 தேக்கரண்டி
    வரமிளகாய் – 4
 சீரகம், சோம்பு- தலா ஒரு தேகரண்டி
    பெரிய வெங்காயம் – ஒன்று
    தக்காளி – ஒன்று
    கறிவேப்பிலை, மல்லி தழை – தலா ஒரு கைப்பிடி
    இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
    மிளகாய், தனியா, கரம் பொடிகள் – தலா ஒரு தேக்கரண்டி
     உப்பு – தேவைக்கு
செய்முறை ! தக்காளி மற்றும் வெங்காயத்தை கொஞ்சம் பெரிய தாக நறுக்கி வைக்கவும். ஊற வைக்க கொடுக்கப்பட்ட பொருட்க ளை சிக்கனுடன் பிரட்டி கால் மணி நேரம் ஊற வைக்கவும்.
கடாயில் நல்லெண்ணய் ஊற்றி வரமிளகாய், சோம்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளி க்கவும்.
பின் சிறிது உப்புடன் வெங்கா யம், கறிவேப்பிலை மற்றும் மல்லித் தழை சேர்த்து பொன் னிறமாக வதக்கவும்.
நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கி மஞ்சள் பொடி சேர்த்து பின் ஊற வைத்த சிக்கனை போடவும்.
நன்கு 10 நிமிடம் கிளறி பொடி வகைகளை சேர்க்கவும். தேவையெ னில் சக்தி சிக்கன் மசாலா பொடியையும் சேர்க்கலாம்.
சிக்கன் வெந்ததும் தக்காளியை சேர்த்து பிரட்டவும். உப்பை சரி பார் க்கவும்.
தக்காளியை நன்கு குழையும்படி வதக்கவும். கடைசியாக ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அடுப்பை அணைக்கவும்.
சுவையான சிக்கன் வறுவல் ரெடி. பருப்புடன் சாப்பிட சுவையாக இரு க்கும். நல்லெண்ணெய் தான் இதன் ஸ்பெஷல்.

Friday, July 6, 2012

உருளைக்கிழங்கு பக்கோடா

Posted On July 6,2012,By Muthukumar
தேவையானப்பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்
உருளைக்கிழங்கு (நடுத்தர அளவு) - 1
வெங்காயம் (நடுத்தர அளவு) - 1
மாதுளை முத்துக்கள் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிது
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
 
செய்முறை:

உருளைக்கிழங்கை கழுவி விட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். (தோலை நீக்க தேவையில்லை). வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகை சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

வாயகன்ற ஒரு பாத்திரத்தில் கடலை மாவைப் போட்டு அத்துடன் நறுக்கி வைத்துள்ள அனைத்தையும் சேர்க்கவும். மாதுளம் முத்துக்கள், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் அதில் சிறிது சிறிதாக தண்ணீரைத் தெளித்து கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாகவும். எண்ணை காய்ந்ததும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, மாவை சிறிது சிறிதாகக் கிள்ளிப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
 
.தக்காளி சாஸ் அல்லது கெச்சப்புடன் பரிமாறவும்.
 
இதை "பக்கோடா குருமா", "மோர் குழம்பு" ஆகியவற்றில் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

கவனிக்க: இதை பொரிக்கும் பொழுது, அடுப்பிலிருந்து சற்று தள்ளி நிற்கவும். ஏனெனில், மாதுளம் முத்துக்கள் இலேசாக வெடிக்க வாய்ப்புள்ளது.  இது ஆறினால் சற்று நமத்துப் போகும். எனவே சூடாக பரிமாறவும்.

Thursday, July 5, 2012

பால் கோவா

தேவையான பொருட்கள்:
மில்க் மெய்டு – 500 கி
பால் – 150 மி.லி
தயிர் – 125 கி
நெய் – 100 கி
செய்முறை:
முதலில் மில்க் மெய்டையும், தயி ரையும் ஒரு நான்-ஸ்டிக் பாத்திரத் தில் போட்டு கட்டி கட்டியாக இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ள வும்.
பின் அதோடு பாலை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு அதனை ஒரு மரக்கரண்டியால் தொடர்ந்து கிண்டி க் கொண்டே இருக்க வேண்டும்.
அந்த கலவையானது முதலில் தண்ணீர் போன்று தான் இருக்கும். அதனைக் கிண்ட கிண்ட சிறிது நேரம் கழித்து கெட்டியாகி விடும்.
அப்போது நெய்யில் பாதியை அத் துடன் ஊற்றிகிளரவும். அதை கிளர கிளர சிறிது நேரம் கழித்து பால் கோவா பதத்திற்கு வரும் முன் மீத முள்ள நெய்யையும் கொஞ் சம் கொஞ்சமாக ஊற்றி கை விடாமல் கிண்டவும்.
இப்படி கிளரும் போது பால் கோவா ஆனது நெய்யிலிருந்து பிரியும் நிலைக்கு வந்ததும், அதனை இறக்கி விடவும்.

Sunday, July 1, 2012

ஸ்டட் கத்திரிக்காய்

Posted On July 01,2012,By Muthukumar
மசாலா நிரம்பிய கத்திரிக்காய் கூட்டு தயாரித்து சாப்பிட்டுப் பாருங்கள். பிஞ்சு கத்தரிக்காயை பார்த்தாலே இனிமேல் இந்த உணவுப் பதார்த்தம் தான் உங்கள் நினைவுக்கு வரும். இதோ செய்முறை:
தேவையானவை:
பிஞ்சு கத்திரிக்காய் -15 (சின்ன சைஸ்)
பெரிய வெங்காயம் -2
தக்காளி -2
வர மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
வர மல்லித்தூள் -3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
கடுகு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை -தாளிக்கத் தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
பிஞ்சு கத்திரிக்காய்களை காம்புடன் நான்காக வகிர்ந்து கொள்ளவும். முழுவதுமாக நறுக்கக்கூடாது. பெரிய வெங்காயத்தையும் தக்காளியையும் தனித்தனியே நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு தட்டில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், உப்பு, பெருங்காயத்தூள் ஒன்றாக கலந்து (தண்ணீர் சேர்க்காமல்) ஒவ்வொரு கத்திரிக்காய்க்குள்ளும் நிரப்பி, கால் மணி நேரம் நன்கு உப்பு, காரம் போகும்படி செய்யவும்.
வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலையை தாளித்து முதலில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி அத்துடன் தக்காளி சேர்த்து வதக்கி, அத்துடன் மசாலா நிரப்பிய கத்திரிக்காய்களைப் போட்டு ஒரு கையளவு தண்ணீர் தெளித்து அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும். வெந்ததும் சற்று முறுக விடவும். கிளறும்போது கத்தரிக்காய் சிதையாமல் அடியோடு கிளறி விடவும். சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு இந்த கத்திரிக்காய் கூட்டு தொட்டுக் கொள்ள ஏற்றது. கத்திரிக்காய் பிஞ்சாக இருந்தால் மட்டுமே இந்த உணவு வகை மிகவும் ருசியாக இருக்கும்.

பச்சை பயறு குழம்பு

Posted On July 01,2012,By Muthukumar
தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு - 1/2 கப்
புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு
சாம்பார் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1
சாம்பார் வெங்காயம் - 10 முதல் 15 வரை
பூண்டுப்பற்கள் - 2 அல்லது 3
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பச்சை பயறை 5 முதல் 6 மணி நேரம் (அல்லது இரவு முழுவதும்) தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறிய பயறை நன்றாக கழுவி விட்டு ஒரு குக்கரில் போட்டு அத்துடன் சிறிது உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும்.

புளியை ஊற வைத்து பிழிந்தெடுத்து, தேவையான தண்ணீரைச் சேர்த்து 2 கப் அளவிற்கு புளிச்சாற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெந்தயம், பெருங்காயம் சேர்த்து சிவக்க வறுக்கவும்.  பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளிச் சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும்.  புளித்தண்ணீரைச் சேர்த்து அத்துடன் சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டுக் கலந்து  கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், வேக வைத்துள்ள பயறை இலேசாக மசித்து சேர்த்துக் கிளறி விடவும். மீண்டும் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு, இறக்கி வைக்கவும்.

ரோல் சப்பாத்தி

தேவையானவை:
கோதுமை மாவு – கால் கிலோ
கேரட் ஒரு கப்
முள்ளங்கி ஒரு கப் 
முட்டைகோஸ் துருவல் ஒரு கப்
இஞ்சி பேஸ்ட்  அரை டீஸ்பூன்
புதினா – ஒரு கைப்பிடி
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
• கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய்விட்டு, அதில் துரு விய முள்ளங்கி, முட்டை கோஸ், கேரட், இஞ்சி பேஸ்ட், நறுக்கிய புதினாவைப் போ ட் டு, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
• கோதுமை மாவை சப்பாதிகளாக இட்டு தோசைக்கல்லில் போட்டு, இரு புறமும் வேக விட்டு, வதக்கிய காய்களை அதன் மீது பரவலாக வைத்து ரோல் செய்து கொடுக்கவும்.