Tuesday, January 31, 2012

மைசூர் போண்டா

Posted: 31 Jan 2012 By Muthukumar

தேவையானப்பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிது
பச்சை கொத்துமல்லி - சிறிது
தேங்காய் (சிறு துண்டுகள்) - 2 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரித்தெடுப்பதற்கு

செய்முறை:

உளுத்தம் பருப்பை சுமார் 2 முதல் 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதை நன்றாகக் கழுவி, நீரை ஒட்ட வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு, உப்பு சேர்த்து மைய அரைக்கவும். அவ்வப்பொழுது சிறிது நீரைத் தெளித்து அரைத்தால் உளுந்து நன்றாக அரைப்பட்டு மென்மையாக இருக்கும். சிறிது மாவை எடுத்து நீரில் போட்டால், அது மிதக்கும். அதுதான் சரியான பதம்.

இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி, அரைத்த மாவில் சேர்க்கவும். அத்துடன் மிளகு, சீரகம், தேங்காய் துண்டுகள் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையைக் காய வைத்துக் கொள்ளவும். அடுப்பை மிதமான் சூட்டில் வைத்து, மாவை எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக உருட்டி எண்ணையில் போட்டு சிவக்க சுட்டெடுக்கவும்.

தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

கொத்துமல்லி சாதம் - Coriander Rice

Posted On Jan 31,2012,By Muthukumar





சாப்பிட வாங்க கோவை2 தில்லியின் கொத்துமல்லி சாதம், ஒரு சின்ன மாறுதலுடன். சுவை அருமை.

தேவையான பொருட்கள்:-

அரிசி – 200 கிராம்
கொத்தமல்லி – 1 கட்டு
வரமிளகாய் – 4
சீரகம் – 1 டீஸ்பூன்
புளி – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
பச்சைப்பட்டாணி – 25 கிராம்

தாளிக்க:- கடுகு – சிறிதளவு
கடலைப்பருப்பு – அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - ஒரு சிட்டிக்கை
பூண்டு - 1 பல்
செய்முறை:-

கொத்துமல்லி தழையை ஆய்ந்து கழுவி அத்துடன் புளி , சீரகம், மிளகாய் சேர்த்து அரைக்கவும்.

அரிசியை களைந்து ஊறவைக்கவும்.

குக்கரில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து, அரைத்த விழுதையும் , பட்டாணியையும் போட்டு வதக்கி அரிசியை சேர்த்து 1 : 1/2 என்று தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு இரக்கவும், கம கமக்கும் கொத்துமல்லி சாதம் ரெடி.

தக்காளி சட்னி


Posted On Jan 31,2012,By Muthukumar

தே.பொருட்கள்
பழுத்த தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயத்தூள் - தலா1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை
*தக்காளியை பொடியாக நறுக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது+மிளகுத்தூள்+மிளகாய்த்தூள்+உப்பு+1/4 கப் நீர் சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

*எண்ணெய் பிரியும் வரை கெட்டியானதும் இறக்கவும்.

*இட்லி,தோசை,சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்.

மஷ்ரூம் குருமா/கிரேவி

Posted On Jan 31,2012,By Muthukumar

தேவையான பொருட்கள்;
 
பட்டன் காளான் - 200 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி -1
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால்டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மல்லி,புதினா - சிறிது
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி -4
மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மற்றொரு வெங்காயத்துடன்,தக்காளி,தேங்காய்,முந்திரி சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும்.காளானை கொதிக்கும் நீரில் போட்டு அலசி,நறுக்கி வைக்கவும்.


வாணலியில் எண்ணெய் விட்டு காயவும்,நறுக்கிய வெங்காயம் போட்டு சிவற வதக்கவும்.இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்க்கவும்,வதக்கவும்.

அத்துடன் மல்லி,புதினா,பச்சை மிளகாய் சேர்க்கவும்.சிறிது வதங்கட்டும்.

அத்துடன் நறுக்கிய காளான் சேர்க்கவும். வதக்கவும்.

காளானுடன் மல்லித்தூள்,சீரகத்தூள்,மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டவும்.

சிறிது உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதிவந்தவுடன் அரைத்த வெங்காயம்,தக்காளி,தேங்காய்,முந்திரி விழுதை சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.

கலந்து விட்டு கொதிக்க விடவும்.சிம்மில் வைத்து குருமா கொதிக்கட்டும்,நன்கு அரைத்து விட்ட தேங்காய் வாடை மடங்க வேண்டும். காளானில் ஒரு கடுப்பு இருக்கும்,அதனால் உப்பு பார்த்து சிறிது சேர்க்கவும்.காரமும் ஏற்றுக் கொள்ளாது, குறைவாக தேவைக்கு காரம் சேர்த்தால் சரியாக இருக்கும்.


சுவையான சத்தான காளான் குருமா ரெடி.

சப்பாத்தி,பரோட்டா,நாண்,ஆப்பம்,தோசை,இட்லி,சாதம் வகைகளுடனும் பரிமாறலாம். இந்த கிரேவி சிக்கன்,மட்டன் குருமா மணம் இருக்கும்.


பத்து நிமிடத்தில் சாஃப்ட் சப்பாத்தி செய்ய கால் கிலோ கோதுமை மாவோடு கைபொறுக்கும் சூட்டில் தண்ணீர், தேவைக்கு உப்பு, 2டீஸ்பூன் எண்ணெய் விட்டு பிசைந்து வைக்கவும்.பின்பு அதனை 6 உருண்டையாக உடனே உருட்டி, மாவு போட்டு சப்பாத்தியாக தேய்த்தால் சாஃப்ட் சூப்பர் சப்பாத்தி விரைவில் ரெடி.

Friday, January 27, 2012

பருப்பு உருண்டைக் குழம்பு

Posted On Jan 28,2012,By Muthukumar
செட்டிநாடு குழம்பு வகைகளிலேயே மிகவும் பிரசித்தியானது இந்தப் பருப்பு உருண்டைக் குழம்பு. கீழ்க்கண்ட அளவுப்படி தயாரித்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
தேவையானவை
கடலைப்பருப்பு - ஒரு கப்
துவரம்பருப்பு - ஒரு கப்
புளி - எலுமிச்சம்பழ அளவு
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் - 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப்பூ - ஒரு மூடி
பூண்டு - 6 பல்
பெரிய வெங்காயம் - 1
கொத்தமல்லி கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை
* கடலைப்பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் ஊற வைக்கவும். ஊறியதும் அத்துடன் தேங்காய்ப்பூ கைப்பிடி அளவு, மிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன், சோம்பு 1/2 டீஸ்பூன், பூண்டு 2 பல், வெங்காயம் சிறிது, மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன், உப்பு, வாசனைக்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை இவற்றை மிக்சியில் தண்ணீர்விடாமல் கெட்டியாக அரைத்து உருட்டி வைத்துக் கொள்ளவும்.
* புளியைக் கரைத்துக் கொண்டு அதில் 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள், 4 டீஸ்பூன் மல்லித்தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து அத்துடன் 2 பல் பூண்டு, சோம்பு மிக்சியில் அரைத்துக் கலக்கவும்.
* இப்போது குழம்பு தாளிக்க ரெடி, வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, சோம்பு, வெந்தயம், சிறிது பட்டைபோட்டு சிவந்ததும், வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி அது வதங்கியதும் தக்காளிப் பழம் சேர்த்து வதக்கி, கருவேப்பிலை தாளித்து, கூட்டி வைத்திருக்கும் குழம்பை அதில் ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாக இராமல் கொஞ்சம் தண்ணீராக இருக்க வேண்டும்.
* குழம்பு கொதிக்கும்போது உருட்டி வைத்துள்ள உருண்டைகளை பத்து எண்ணிக்கை முதலில் போட்டு மூடி வைக்கவும். அது வெந்ததும் மீதி உருண்டைகளை போடவும். உருண்டைகள் வெந்ததும் தேங்காய் அரைத்து ஊற்றி பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். சுவையான உருண்டைக் குழம்பு ரெடி.
* நிறைய மாவு இருந்தால் பாதி மாவை தனியாக வைத்து வடைகளாகத் தட்டி, சுட்டு எடுக்கலாம்.

Thursday, January 26, 2012

பப்பாளி ஆரஞ்சு அல்வா

Posted On Jan 26,2012,By Muthukumar

தேவையானப்பொருட்கள்:

பப்பாளி (நன்றாகப் பழுத்தது) - பாதி
ஆரஞ்சுப் பழம் - 2
சர்க்கரை - 2 கப் அல்லது தேவைக்கேற்றவாறு
நெய் - 2 முதல் 3 டீஸ்பூன் வரை
ஏலக்காய்த்தூள் - சிறிது
முந்திரிப்பருப்பு - 10

செய்முறை:

பப்பாளியின் தோல் மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஆரஞ்சுப்பழத்திலிருந்து சாற்றைப் பிழிந்தெடுத்துக் கொள்ளவும்.

பப்பாளிப் பழத்துண்டுகளை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு கப்பால் அளந்து, அடி கனமான ஒரு வாணலியில் போடவும். அத்துடன் அதற்கு சமமாக அல்லது முக்கால் பங்கு சர்க்கரையைச் சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து கெட்டியாகும் வரைக் கிளறவும். பின்னர் ஆரஞ்சுச் சாற்றைச் சிறிது சிறிதாக விட்டுக் கிளறவும். அல்வா கெட்டியாகி வரும் பொழுது நெய்யை விட்டுக் கிளறவும். கடைசியில் முந்திரிப்பருப்பு (சிறிது நெய்யில் வறுத்து சேர்க்கவும்) ஏலக்காய்த்தூளை ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

கவனிக்க: இதை மைக்ரோவேவ் அவனிலும் செய்யலாம். மைக்ரோவேவ் பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு அவனில் வைத்து, அவ்வப் பொழுது வெளியே எடுத்துக் கிளறி , கெட்டியாகும் வரை வேக விட்டு எடுத்து, கடைசியில் நெய் சேர்த்துக் கிளறவும்.

முள்ளங்கி இறால் குருமா

Posted On Jan 26,2012,By Muthukumar


சுவையான இறால் மீனை, சத்தான முள்ளங்கியுடன் சேர்த்து குருமா செய்து சாப்பிட்டால் சுவையும், சத்தும் நிரம்ப கிடைக்கும். செய்து பார்க்கலாமே, முள்ளங்கி இறால் குருமா...
தேவையானவை
இறால் - 1/2 கிலோ
முள்ளங்கி - 1/4 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
தேங்காய் துருவல் - 1/4 மூடி
பட்டை - 2
லவங்கம் - 2
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
செய்முறை
* இறாலைச் சுத்தம் செய்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். இஞ்சி பூண்டு விழுதாக்கி கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை நறுக்கவும், மிளகாயை கீறிக் கொள்ளவும். தேங்காயை அரைத்துக் கொள்ளவும். முள்ளங்கியை வட்டமாக நறுக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை லவங்கம் போட்டுத் தாளிக்கவும்.
* நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய மிளகாய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.
* பின் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்க்கவும். இப்போது இறாலைச் சேர்த்து வதக்கவும். முள்ளங்கியைச் சேர்த்து வதக்கி நன்கு வேக விடவும்.
* தேவையான உப்பு சேர்த்து, அரைத்த தேங்காய்ப் பாலையும் சேர்க்கவும்.
* முள்ளங்கியும், இறாலும் நன்கு வெந்ததும், நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.


Monday, January 23, 2012

பிரபலமான உணவுப்பொருட்கள்


Posted On Jan 23,2012,By Muthukumar


திருப்பதி - லட்டு
மதுரை - மல்லிகை,இட்லி,வெற்றிலை
நெல்லை - அல்வா
ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
கீழக்கரை - தொதல்,சீப்புபணியம்
இராஜபாளையம் - கொயயாப்பழம்
மணப்பாறை - முருக்கு
சாத்தூர் - சேவு
சங்கரநயினார் கோவில் - பிரியாணி
ப்ரானூர் பார்டர் - சிக்கன்
நாமக்கல் - முட்டை
பழனி - பஞ்சாமிர்தம்
கோயம்புத்தூர் - மைசூர்பாக்
திண்டுக்கல் - தலைப்பாகட்டு பிரியாணி
பொள்ளாச்சி - இளநீர்
கல்லிடைக்குறிச்சி -அப்பளம்
ராமேஸ்வரம் - கருவாடு
விருதுநகர் - புரோட்டா
மதுரை - அயிரை மீன்
திண்டுக்கல், ஆம்பூர் - பிரியாணி
காரைக்குடி - உப்புக்கண்டம்
சிதம்பரம் - இறால் வருவல்
சிதம்பரம் - சிறுமீன்
மாசிக்கருவாடு - இராமேஸ்வரம்
வேலூர் - வாத்துக்கறி
சேலம் - மாம்பழம்
ஊத்துகுளி - வெண்ணெய்
ராசிபுரம் - நெய்
பொள்ளாச்சி - இளநீர்.
முதலூர் - மஸ்கோத் அல்வா
ஊட்டி - டீ வர்க்கி
திருச்சி - பெரியபூந்தி
திருநெல்வேலி - அல்வா
காயல்பட்டிணம் - முக்கலர் அல்வா
ஸ்ரீவில்லிப்புத்தூர் - பால்கோவா
கன்னியாகுமரி - முந்திரிகொத்து
தூத்துக்குடி - மக்ரூன்
அருப்புக்கோட்டை - காராச்சேவு
பாலவாநத்தம் - சீரணி மிட்டாய்
மணப்பாறை - முறுக்கு
வெள்ளியணை - அதிரசம்
திருச்செந்தூர் - பனங்கல்கண்டு
கோயம்புத்தூர் - மைசூர்பா
கும்பகோணம் - டிகிரி காபி
வால்பாறை - டீ
மாயவரம் - அப்பளம்
காரைக்கால் - குலாப் ஜாமுன்
வர்க்கி - ஊட்டி
ஆம்பூர் - மக்கன் பேடா
சேலம் - தயிர்வடை
காரைக்குடிதேன்குழல்
ராம்நாட் - கோமுட்டி வற்றல்
காரைக்குடி - மண ஓலை
காரைக்குடி - அச்சுமுறுக்கு
சர்பத் - புதுக்கோட்டை
கொல்லிமலை - தேன்
குண்டூர் - மிளகாய்
தஞ்சை - நெல்
மல்லி - குண்டக்கல்
கொல்லிமலை - அன்னாசி
கோவில்பட்டி - கடலைமிட்டாய்
பழனி - பஞ்சாமிர்தம்
பண்ருட்டி - பலாப்பழம்
வெள்ளியணை - அதிரசம்
லாலாப்பேட்டை, சத்தியமங்கலம் - வாழைப்பழம்
சேலம் - மாம்பழம்
பொள்ளாச்சி - தேங்காய்
ஒட்டன் சத்திரம் - கத்தரிக்காய்
கொடைக்கானல் - பேரிக்காய்
நெய்வேலி - முந்திரி
மன்னார்குடி - பன்னீர்சீவல்
மேச்சேரி - ஆடு
ஊட்டி - உருளை
கொடைக்கானல் - ஹோம் மேட் சாக்லேட்
தூத்துக்குடி - உப்பு
அரவக்குறிச்சி - முருங்கை


இந்தியா - சமோசா
தமிழ்நாடு - இட்லி
இத்தாலி - பிஸ்ஸா பாஸ்தா
சைனா - பிரைட் ரைஸ் நூடுல்ஸ்
ஸ்வீடன் - ஸ்வீடன்ஸ் மீட்பால்
பங்களாதேஷ் - பிரியாணி
ஆப்கானிஸ்தான் - காபூலி புலாவ்
தைவான் - பீப் நூடுல்ஸ் சூப்
ஹாங்காங் - திம்சும்
மலேசியா - நாசிகொரைங்
பாகிஸ்தான் - பிரியாணி
சவுதி - கப்சா ரைஸ்
சிங்கப்பூர் - சிக்கன் ரைஸ்
யு ஏ இ - குப்பூஸ் ,ஹரீஸ்
கொழும்பு - கிதிள் கருப்பட்டி
குவைத் - மக்பூஸ்
இந்தோனிஷியா - சாத்தே
பேங்காக் - ஸ்ரிம்ப் சூப்
சவுத் அமெரிக்கா - தக்காளி
ஈரான் - ஸ்பினாச்
சவுத் அமெரிக்கா - அவகோடா
எழுமிச்சை - பர்மா
கிரீஸ் - ஆலிவ்
பிரிட்டன் - பேரிக்கா
மொஸாம்பிக் - முந்திரி
பிரேஸில் - அன்னாசி
கேரட் - ஹாலந்த்
சவுத் .நார்த் அமெரிக்கா - பீன்ஸ்
சவுத் அமெரிக்கா - உருளை
உடன்குடி - கருப்பட்டி
உசிலம்பட்டி - கேப்பை,சீரணி மிட்டாய
ஸ்காட்லாந்து - பிஷ்&சிப்ஸ்
மைசூர் - நிப்பட்டு
கிருஷ்ணகிரி - அல்போன்ஸா மாம்பழம்
ஜெர்மனி - சாசேஜ்



மஷ்ரூம் காப்சிகம் மசாலா

Posted On Jan 23,2012,By Muthukumar
தேவையான பொருட்கள்  :

- 250 ௦ கிராம்
– 3 எண்ணம்  ( பருத்தது )
பெரிய வெங்காயம் – 3 எண்ணம்
தக்காளி -2 எண்ணம்
– ஒரு பாக்கு அளவு
பூண்டு -2  பல்
பச்சை மிளகாய் - 3  எண்ணம்
ஏலக்காய் -2   எண்ணம்
லவங்கம் – 2  எண்ணம்
பட்டை – சிறிதளவு
முந்தரி பருப்பு- 3  எண்ணம்
தேங்காய் துருவல் – 3 எண்ணம்
மல்லி தழை : தேவையான அளவு
மஞ்சள் பொடி- மிக சிறிதளவு

செய்முறை :

1 .வெங்காய தக்காளி கலவை :

முதலில் பெரிய வெங்காயத்தையும், தக்காளியையும் நறுக்கி வைத்து கொள்ளவும் .
கடாயில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி வெங்காயம் பின்பு இஞ்சி ,பூண்டு அதன்பின்
தக்காளி போட்டு நன்கு வதக்கவும் .அடுப்பை அணைத்த பின் , மல்லி தழையையும் நறுக்கி
அதன் மேல் இட்டு கிளறி விட்டு ஆற வைக்கவும் .
ஆறிய பின் இக்கலவையை மிக்ஸ்யில் இட்டு நன்றாக அரைத்து தனியே எடுத்து வைத்து  கொள்ளவும் .

2 .தேங்காய் கலவை

முந்தரி பருப்பு , ஏலக்காய் , பட்டை, லவங்கம்  போட்டு பொடியாக்கி விட்டு , பின் அதனுடன் தேங்காய் துருவல், பச்சை மிளகாய் போட்டு விழுதாக அரைத்து  வைத்து கொள்ளவும் .

3 . தயாரிப்பு :

கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய மஷ்ரூம் போட்டு , சிறிதளவு உப்பும் , மஞ்சள் பொடியும் போட்டு கிளறவும் .
மஷ்ரூம் விரைவில் வெந்து விடும் . எனவே நிறைய நேரம் எடுத்து கொள்ள வேண்டாம் . அது வெந்தவுடன் , அரைத்து வைத்த தக்காளி வெங்காய கலவையை அதனோடு சேர்க்கவும். பின் அரைத்து  வைத்த தேங்காய்  கரம் மசாலா கலவையையும் அதனோடு சேர்க்கவும் .
இறுதியாக பொடியாக நறுக்கிய காப்சிகம் அதன் மேல் தூவி  விட்டு நன்றாக கிளறவும் . காப்சிகம் முழுவதுமாக வேக வேண்டாம் .
பின் அடுப்பை அணைத்து விட்டு , நறுக்கிய  மல்லிதழையை தூவி விடவும்.
மஷ்ரூம் காப்சிகம் மசாலா ரெடி .
இது அனைத்து  ரொட்டி வகையறாக்களுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்

காய்கறி சொதி

Posted On Jan 23,2012,By Muthukumar

"சொதி" அல்லது "சொதி குழம்பு" என்றழைக்கப்படும் இநத "தேங்காய்ப்பால் குழம்பு" திருநெல்வேலி சைவ வீடுகளில் பிரபலமானது. விருந்துகளில் இது நிச்சயமாக இடம் பெறும். குறிப்பாக, திருமணமாகி மாப்பிள்ளை மறு வீடு வரும் பொழுது, இந்தக் குழம்பு கண்டிப்பாக இருக்கும்.

இதில் முருங்கைக்காய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் போன்ற பலவிதமான காய்கறிகளைச் சேர்த்துச் செய்வார்கள். செய்யும் முறை வீட்டிற்கு வீடு சற்று மாறு படும். அடிப்படையில், காய்கறிகளை தேங்காய்ப்பாலில் வேக வைத்து, பருப்பு சேர்த்து செய்யும் குழம்பு இது.

 செய்முறை:

தேவையானப்பொருட்கள்:

தேங்காய் (பெரியது) - 1
உருளைக்கிழங்கு - 2
கேரட் - 1
பீன்ஸ் - 5 அல்லது 6
சாம்பார் வெங்காயம் - 10
பூண்டுப்பற்கள் - 10
எலுமிச்சம் பழச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு - 1/4 கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி - 2 அங்குல நீளத்துண்டு
பச்சை மிளகாய் (சிறியது) - 4 முதல் 5 வரை
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
பச்சை அல்லது கறுப்பு திராட்சை - ஒரு கைப்பிடி (விருப்பமானால்)

செய்முறை:

காய்கறிகளை நன்றாகக் கழுவிக் கொள்ளவும். உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டின் தோலை சீவி விட்டு நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பீன்ஸை 2 அங்குல துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

வெங்காயம் மற்றும் பூண்டின் தோலை உரித்து விட்டு, முழுதாகவே வைத்துக் கொள்ளவும். இஞ்சியின் தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்து, தேவையான தண்ணீரை விட்டு வேக வைத்தெடுக்கவும்.

தேங்காயைத்துருவி கெட்டியான பாலை எடுக்கவும். ஒரு கப் திக்கான பால் கிடைக்கும். அதைத் தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் சிறிது தண்ணீரை தேங்காயுடன் சேர்த்து அரைத்து, இரண்டாம் பாலையும் பிழிந்து எடுக்கவும். மேலும் சிறிது தண்ணீரைச் சேர்த்து மூன்றாம் பாலையும் பிழிந்தெடுக்கவும். இரண்டாவது, மூன்றாவதாக எடுத்தப்பாலை ஒன்றாகச் சேர்க்கவும். மூன்று கப் அளவிற்கு இந்தப் பால் இருக்கும். இல்லையென்றால் சிறிது நீரைச் சேர்த்து 3 கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு பச்சை மிளகாயையும், இஞ்சித்துண்டுகளையும் வதக்கி எடுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அடி கனமான வாணலி அல்லது பாத்திரத்தை அடுப்பிலேற்றி எண்ணை விடவும். எண்ணை சூடானதும் வெங்காயத்தைப் போட்டு சில வினாடிகள் வதக்கவும். பூண்டையும் சேர்த்து மேலும் சில வினாடிகள் வதக்கவும். பின்னர் காய்கறிகளைச் சேர்த்து சற்று வதக்கி, அத்துடன் இரண்டாம்/மூன்றாம் முறை எடுத்து வைத்துள்ள தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும். உப்பு, மஞ்சள் தூளைச் சேர்த்துக் கிளறி விட்டு, மிதமான தீயில் வேக விடவும்.

காய்கறிகள் வெந்ததும், அரைத்து வைத்துள்ள மிளகாய்/இஞ்சி விழுதைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் அத்துடன் வேக வைத்துள்ளப் பருப்பையும் சேர்த்துக் கிளறி கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, திக்கான தேங்காய்ப்பாலைச் சேர்த்துக் கிளறி, ஓரிரு நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து விட்டு இறக்கி வைக்கவும்.

5 அல்லது 10 நிமிடங்கள் கழித்து, எலுமிச்சம் பழச்சாற்றைச் சேர்த்துக் கலக்கி விடவும்.

பச்சை திராட்சைப் பழங்களையும் சேர்த்து கிளறி, இஞ்சி துவையல், உருளைக்கிழங்கு சிப்ஸ் அல்லது காரமான உருளைக் கிழங்கு கறியுடன் பரிமாறவும்.

சாதரணமாக இதை சூடான சாதத்துடன் பரிமாறுவார்கள். ஆனால் இடியாப்பம் மற்றும் ஆப்பத்துடன் சேர்த்து சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

கவனிக்க: ஒரு பெரிய தேங்காயில் ஒரு கப் திக்கான பால் கிடைக்கும். காய் சிறியதாக இருந்தால் மேலும் ஒரு மூடி தேங்காயைச் சேர்த்துக் கொள்ளவும். கடைகளில் கிடைக்கும் தேங்காய்ப்பாலையும் உபயோகிக்கலாம். அப்படி செய்யும் பொழுது, ஓரிரு டேபிள்ஸ்பூன் திக்கான பாலில் தேவையான நீரைச் சேர்த்து கலந்து, அதில் காய்களை வேக வைக்கவும்.

வெண்டைக்காய் மசாலா

Posted On Jan 23,2012,By Muthukumar


தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் -கால் கிலோ
வறுத்த கடலை பருப்பு -100 கிராம்
பச்சை மிளகாய் - 10 கிராம்
சென்னா மசாலா -ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 100 கிராம்
எண்ணெய், உப்பு -தேவையான அளவு
செய்முறை:
வெண்டைக்காயை கழுவி, நீள வாக்கில் நறுக்கவும். மற்ற பொருட்களை நறுக்கி வைக்கவும். வறுத்த கடலைப் பருப்பை பொடி செய்யவும். வாணலியை அடுப்பில் வைத்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும். பிறகு வெண்டைக்காய் சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும். அதோடு வறுத்த கடலைப் பருப்பையும், சென்னா மசாலாவையும் சேர்க்கவும். பின், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
குறிப்பு: வெண்டைக்காயை நறுக்குவதற்கு முன், ஈரத் துணியால் துடைத்து சுத்தம் செய்யவும்.

Sunday, January 22, 2012

ரவா பணியாரம்


தேவையான  பொருட்கள்

ரவா- 1கப்; மைதா- 1- கப்; சர்க்கரை -1.5 கப்; எண்ணெய்- பொறிக்கத் தேவையான அளவு:

செய்முறை

ரவாவை  தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதில் மைதாவையும், சர்க்கரையையும் கலந்து ஒரு திக்கான கலவையாக்கிக் கொள்ளவும். சர்க்கரை நன்கு கரையும்வரை கலக்க வேண்டும். கட்டி இல்லாமல் கலக்க வேண்டியது அவசியம்.
அடுப்பில் வாணலியை ஏற்றி, ரவா- மைதா கலவையை ஒரு ஸ்பூனால் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் ஊற்றி நன்கு சிவந்து ப்ரௌன் கலருக்கு வந்ததும்  எடுத்து தட்டில் வைத்து பறிமாறவும்.
குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்ததும்,  கொடுக்கக்கூடிய  ஒரு திடீர் பலகாரம்.  இதை அவர்கள் விரும்பியும்  உண்பார்கள்.

சென்னா மசாலா

Posted On Jan 22,2012,By Muthukumar

சுவையான சென்னா மசாலா செய்வதற்கான எளிய சமையல் குறிப்பு

தேவையான பொருட்கள்
  • சென்னா(வெள்ளைக் கொண்டைகடலை) – 50 கிராம்
  • வெங்காயம் – 75  கிராம்
  • தக்காளி – 75  கிராம்
  • இஞ்சி – ஒரு துண்டு
  • சீரகம் – 1  தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 2  தேக்கரண்டி
  • மல்லித்தூள் – 1  தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
  • சென்னா மசாலா தூள் – 3  தேக்கரண்டி
  • உப்பு – தேவைக்கேற்ப
  • எண்ணெய் – 100 மில்லி
  • மல்லித்தழை – ஒரு கொத்து
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • கரம் மசாலாத்தூள் – 1  தேக்கரண்டி
செய்முறை
  1. வெள்ளைக் கொண்டைக்கடலையை 8  மணி நேரம் ஊற வைத்து பின்னர் குக்கரில் ஒரு விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
  2. தக்காளி, வெங்காயம், இஞ்சி, சீரகம், மல்லித்தழை ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். சிறிதாக நறுக்கிய வெங்காயம் 1  கப், அரைத்த விழுது ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
  4. பின்னர் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு, வேக வைத்த கொண்டைக்கடலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. பின் கரம் மசாலா, சென்னா மசாலா சேர்த்து சிறிது மல்லித்தழை, கறிவேப்பிலை ,சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

Friday, January 20, 2012

KFC சிக்கன்

Posted On Jan 21,2012,By Muthukumar
எங்களுக்கு தெரிந்தவர் ஒருவர் KFC யில் வேலை பார்க்கிறார்கள்.. அவர்களிடன் KFC சிக்கன் எப்படி செய்யுனும் என்று கேட்டேன்... இந்த சிக்கன் அவங்க சொல்லி நான் செய்தேன் என்று யாரும் நினைக்கவேண்டாம்.. ஏன்னா அவங்க பதில் சீக்ரட் மசாலா யாருக்கும் தெரியாதுனு சொல்லிவிட்டாங்க.. இருந்தாலும் நான் விடுவதாக இல்லை.. KFC உருவத்தில் சுவையிலும் சிக்கன் கிட்டதட்ட வந்தாலும் அந்த ஓரிஜினல் ருசிக்கி ஈடாகவில்லை இந்த KFC.. இருந்தாலும் இந்த KayalFriedChicken ருசி தனிதானுங்க
தேவையான பொருட்கள்:
  • * கோழி - 1/2 கிலோ
  • * வெள்ளை மிளகுத்தூள் - 4 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
  • * பூண்டு விழுது - 3 ஸ்பூன்
  • * வினிகர் - 2 ஸ்பூன்
  • * முட்டை - 3
  • * மைதா - 200 கிராம்
  • * ப்ரட் க்ரம்ஸ் - தேவையானஅளவு
  • * எண்ணெய் - பொரிக்க
  • * உப்பு - 1/2 ஸ்பூன் செய்முறை:
  • * கோழித் துண்டினை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும்
  • * பின் கோழியில் மிளகுத்தூள், மஞ்சள்தூள்,பூண்டுவிழுது ,வினிகர்,உப்பு போட்டு பிரட்டி 3 மணி நேரம் ஊறவைக்கவும்
  • * முட்டைகளை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதில் சிறுது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கி வைக்கவும்.

  • * ப்ரட் க்ரம்ஸை, மைதாவை ஒரு தட்டில் கொட்டி அதில் தேவைக்கு உப்பு, வெள்ளை மிளகுத்தூள் கலந்து வைக்கவும்.
  • * ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைக்கவும்
  • * கோழிகளை ஒவ்வொன்றாக எடுத்து முட்டையில் நனைத்து பின் ப்ரட் க்ரம்ஸ், மைதாவில் பிரட்டி எண்ணெயில் மீதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.
  • சுவையான KFC சிக்கன் ரெடி

Wednesday, January 18, 2012

காய்கறி கடலைக் கறி

Posted On Jan 19,2012,By Muthukumar

தேவையானப்பொருட்கள்:

பீன்ஸ் - 8 முதல் 10 வரை
கேரட் - 1
காலிஃபிளவ்ர் - பாதி
கொண்டைக்கடலை - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணை - 3 முதல் 4 டீஸ்பூன் வரை
கடுகு - 1/2 டெஅச்போன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்த்துருவல் - 1 கப்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கொண்டைக்கடலையை 6 முதல் 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.

காய்கறிகளைக் கழுவி விட்டு, 1" அளவிற்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். காலிஃபிளவரையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஊறவைத்துள்ளக் கடலையை குக்கரில் போட்டு, தேவையான நீரை ஊற்றி 3 முதல் 4 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும்.

தேங்காய்த்துருவலை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, பாலை பிழிந்தெடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கறிவேப்பிலையைப் போட்டு வதக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், தக்காளியை சேர்க்கவும். அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும், காய்கறிகளைச் சேர்த்துக் கிளறி விடவும். அத்துடன் ஒரு கப் தண்ணீரைச் சேர்த்து, மூடி வைத்து, மிதமான தீயில் வேக விடவும். காய்கறிகள் வெந்ததும், வேக வைத்துள்ளக் கடலையைச் சேர்த்துக் கிளறி கொதிக்க விடவும். நன்றாகக் கொதி வந்ததும், தேங்காய்ப் பாலைச் சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து இறக்கி வைக்கவும்.

புலாவ் மற்றும் சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் பரிமாறலாம்.

Tuesday, January 17, 2012

பஞ்சம அல்வா

Posted On Jan 17,2012,By Muthukumar

தேவையானவை: ஜவ்வரிசி, அவல், சேமியா, மைதா மாவு, கோதுமை மாவு - தலா அரை கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒரு கிலோ, நெய் - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரி, வெள்ளரி விதை - தலா கால் கப், பச்சை (அ) ஆரஞ்சு கலர் - அரை டீஸ்பூன்.


செய்முறை: ஜவ்வரிசி, அவல், சேமியா மூன்றையும் பாலில் ஊற வைத்து அரைக்கவும். இதனுடன் கோதுமை மாவு, மைதா மாவு கலந்து கரைத்துக் கொள்ளவும்.
சர்க்கரையை கம்பிப்பாகு பதத்தில் காய்ச்சி, இதில் மாவுக் கரைசலைக் கலந்து கிளறிக் கொள்ளவும். மாவு வேகும் அளவுக்கு அதில் சிறிது சிறிதாக வெந்நீர் ஊற்றிக் கிளறவும்.
பின்னர் கலர், நெய் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஒட்டாமல் நெய் பிரிந்து வரும் வரை கிளறி இறக்கவும்.
வறுத்த முந்திரி, வெள்ளரி விதை சேர்க்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.
பஞ்சம அல்வா: கால் கப் சோள மாவை சேர்த்துச் செய்தால் அல்வாவில் மினுமினுப்பு கூடும்.
 

Monday, January 16, 2012

சவ்வரிசி பொங்கல் பாயாசம் செய்வது எப்படி

Posted On Jan 17,2012,By Muthukumar




தேவையான பொருட்கள்: 

சவ்வரிசி – 300 கிராம் ,  வெல்லம் – 200 கிராம்
பால் – 200 மி.லிநெய் – 50 கிராம்
முந்திரி பருப்பு – 10  ,  கசாகசா(உலர்ந்த திராட்சை) – 10
ஏலக்காய் – 5, 6 லேசா பொடிச்சுக்கோங்க
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சவ்வரிசியை போடவும்.
சவ்வ‌ரி‌சி நன்றாக வெந்ததும் ஏலக்காய் மற்றும் வெல்லத்தை உடைத்து போட்டு கிளறவும்.
சவ்வ‌ரி‌சி ந‌ன்கு கெ‌ட்டியாக ‌வ‌ந்‌ததும் பாலையும், நெய்யையும் சேர்க்கலாம்.
முந்திரி, திராட்சையை நெய்யில் பொ‌ன்‌னிறமாக வறுத்து சே‌ர்‌க்கவு‌ம்.
சவ்வரிசி பொங்கல் பாயாசம் தயா‌ர்.
அடி‌ பி‌டி‌க்காம‌ல் கிளறிக்கொண்டிருக்க வேண்டும்..

Saturday, January 14, 2012

ஹபாரா மட்டன்

Posted On Jan 15,2012,By Muthukumar
தேவையான பொருட்கள்
மட்டன் - 1/2 கிலோ
சாம்பார் வெங்காயம் - 200 கிராம் (நறுக்கியது)
தக்காளி - 200 கிராம் (நறுக்கியது)
பச்சைமிளகாய் - 6 (நறுக்கியது)
தயிர் - 1/2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை - 1/2 கட்டு
புதினா - 1/2 கட்டு
தேங்காய் - 1/2 மூடி
கசகசா - ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
தாளிக்க
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை, லவங்கம் - தலா 2
செய்முறை
* மட்டனை சுத்தம் செய்து நறுக்கி வேக வைக்கவும்.
* தேங்காய், கசகசாவை அரைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலை, புதினா இலையை விழுதாக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.
* பின் வெங்காயம், தக்காளி, மட்டன் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்க்கவும்.
* இப்போது அரைத்த தேங்காய் விழுது, கொத்தமல்லி இலை, புதினா விழுது இவற்றைச் சேர்த்து போதுமான உப்பு சேர்க்கவும்.
* மட்டன், இந்த கலவையுடன் சேர்ந்து நன்கு வெந்ததும், தயிரை ஊற்றி சிறிது நேரம் குறைந்த தீயில் வைத்திருந்து இறக்கவும்.
'

Friday, January 13, 2012

காய்கறி கூட்டு

Posted On Jan 13,2012,By Muthukumar

தேவையானப்பொருட்கள்:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1
பறங்கிக்காய் - ஒரு சிறு துண்டு
அவரைக்காய் - 5 அல்லது 6
உருளைக்கிழங்கு - 1
சேனைக்கிழங்கு - ஒரு சிறு துண்டு
வாழைக்காய் - பாதி
பச்சை மொச்சைக் கொட்டை - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
புளி - ஒரு நெல்லிக்காயளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வறுத்தரைக்க:

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5 வரை
தனியா - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

புளியை ஊற வைத்து, சாற்றைப் பிழிந்தெடுத்து கொள்ளவும்.

துவரம் பருப்பை குக்கரில் போட்டு வேக வைத்தெடுக்கவும்.

காய்கறிகளை நன்றாகக் கழுவி, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். காய்கறி துண்டுகள், பச்சை மொச்சைக் கொட்டை ஆகியவற்றை, ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து, காய்கறி மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி வேக விடவும்.

இதற்கிடையே, வறுக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு டீஸ்பூன் எண்ணையில் வறுத்தெடுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

காய்கறிகள் வெந்தவுடன் புளிச்சாற்றை ஊற்றி கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன், வேக வைத்துள்ளப் பருப்பைக் கடைந்து சேர்க்கவும். மீண்டும் ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும். மறுபடியும் ஒரு கொதி வந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

திருவாதிரை, பொங்கல் ஆகிய பண்டிகையின் பொழுது இந்தக் கூட்டை செய்வார்கள். இதை "தாளகம்" என்றும் "பொங்கல் கூட்டு" என்றும் அழைப்பார்கள்.


கிரீன் பீஸ் புலாவ்

Posted On Jan 13,2012,By Muthukumar
ச்சைப்பட்டாணியில் எந்த உணவு வகை தயாரித்தாலும் எல்லோருக்கும் பிடிக்கும் அல்லவா? இந்த கிரீன் பீஸ் புலாவ் உணவும் தயாரித்துப் பாருங்கள் ரொம்ப சுவையாக இருக்கும். காரட்டும் கலந்து தயாரிப்பதால் பார்ப்பதற்கு ரொம்பவும் கலர்புல்லாக சாப்பிடத் தூண்டும். செய்முறை இதோ!
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - ஒரு கப்
பச்சைப் பட்டாணி - 1/2 கப்
நறுக்கிய காரட் துண்டுகள் - 1/2 கப்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 6 பல்
பெரிய வெங்காயம் - 1
பட்டை கிராம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் + நெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
* இஞ்சி, பூண்டு இவைகளை அரைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் இவைகளை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.
* காரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அரிசியைக் கழுவி வைத்துக் கொள்ளவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்புத்தூள் போட்டு வெடிக்க விட்டு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிவக்க விடவும்.
* தொடர்ந்து வெங்காயம், பச்சை மிளகாய், காரட், பச்சைப்பட்டாணி சேர்த்து வதக்கவும்.
* இத்துடன் அரிசி சேர்த்துக் கிளறி, சற்று வறுபட்டதும் குக்கருக்கு மாற்றி 2 கப் தண்ணீர் (அரிசி ஒரு கப் எனில் தண்ணீர் 2 கப்) ஊற்றி மூடி இரண்டு விசில் வந்ததும் அடுப்பை நிறுத்திவிட வேண்டும்.
* அவ்வளவுதான் கிரீன் பீஸ் புலாவ் ரெடி. இதற்குத் தொட்டுக்கொள்ள தக்காளி குருமா வெங்காய தயிர் பச்சடி ஏற்றது.

Sunday, January 8, 2012

புதுவருட கரட், வெங்காய பிரியாணி

Posted On Jan,08,2012,By Muthukumar

ஆங்கிலப் புத்தாண்டும் தமிழ்ப் புத்தாண்டு போன்றே பலராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. காலையில் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள். சிலர் புத்தாடைகளும் அணிவார்கள்.

வருடம் பிறந்ததும் முதலில் இனிப்பான உணவை உண்பார்கள். வருடம் முழுவதும் அதிர்ஸ்டத்துடன் இனித்திடும் என்ற நம்பிக்கைதான்.

அன்று பெரும் பாலும் இந்துக்களின் வீடுகளில் சைவஉணவுகள்தான் சமைப்பார்கள். காலை உணவு, மதிய உணவு, மாலை உணவு, இரவு உணவு எல்லாம் தடபுடலாக நடக்கும்.


அதற்கு நாங்களும் விதிவிலக்கு அல்ல. புதுவருட பிரியாணி செய்துவிட்டோம்.

என்ன ஸ்பெசல் என்கிறீர்களா?
  • புது வருட பிரியாணி என்பதால்தான் ஸ்பெசல். 
  • அத்துடன் கடையில் வாங்கும் பிரியாணி மசாலாக்கள் ஒன்றும் சேர்க்கப்படவில்லை. 
  • எல்லாமே எங்கள் வீட்டுத் தயாரிப்பு. கலப்படம் அற்றது என்பதால் சிறந்ததுதானே!

பிரியாணி சாப்பிடும்போது வீட்டில் கேட்டார்கள் ......

"முதல் நாளே பிரியாணி என்றால் ஒவ்வொரு நாளும் பிரியாணிதானே?"

நாள்தோறும் சாப்பிட்டால் என்ன ஆகும்? என்று கேட்டு அவர்கள் வாயை மூடவைத்தேன்.... ஆகா தப்பித்தேன்.

சங்க காலத்திலும் பிரியாணி  

பிரியாணி பற்றிச் சற்றுப் பார்ப்போம். சங்க காலத்தில் பிரியாணி சோற்றின் ஆரம்பம் தொடங்கப்பட்டுவிட்டது எனலாம். சங்க இலக்கியத்தில்'ஊன் சோறு' பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. 'ஊன்றுவையடிசில்' என்கிறார்கள்.


படைவீரரும் அரிசியுடன் மாமிசத்தைக் கலந்து சமைத்து உண்டிருக்கிறார்கள்.

பெரும்தேவனார் பாடலில் 'மைஊன் புழுங்கலும் எலிவறுவலும் உனக்குத் தருவேன்' என தலைவி கூகையோடு பேசுவதாக நற்றிணை 83ல் வருகிறது.

அகநானூற்றில் இறைச்சியோடு சேர்ந்த நெய்ச் சோறு ஆக்கிப் படைத்தலும் மணவிழா நாளில் நிகழ்ந்திருக்கின்றன.

Briyani என்பது Persian மொழிவழிச் சொல்லாகும்.Persia என்பது இன்றைய ஈரான் ஆகும். சமைக்கு முன் அரிசி, மரக்கறிகள், மீன், இறைச்சி ஆகியவற்றை நெய்யில் வதக்கி வாசனைகள் சேர்த்து சமைப்பதாகும்.

இம் தயாரிக்கும் சமையல் முறை பல்வேறு நாடுகளிலும் அவர்களது பாரம்பரிய சமையல் முறைகளில் இருந்திருக்கின்றன.

பிரியாணி பல வழிகளில் தயாரிக்கப்படுகிறது.  'தம்' வைத்து சமைக்கும் பிரியாணிகள் சுவையில் கூடியவை.
  • ஒவ்வொரு ஊர்களின் பெயரைக் கொண்டும் வெவ்வேறு வகைப் பிரியாணிகள் இருக்கின்றன. 
  • இந்தியன் பிரியாணி, சிறிலங்கள் இடியப்பப் பிரியாணி, ஈரானியன், இந்தோனீசியன், மலேசியன், காஸ்மீர், ஹைதரபாத், தாய், பிலிப்பினொ என அடுக்கிக் கொண்டே போகலாம்.
  • இந்தியாவில் மட்டும் 26 வகைகளுக்கு மேற்பட்ட பிரியாணிகள் தயாரிக்கிறார்களாம்.

பிரியாணி பிரியர்களே ஓடத் தயாராகுங்கள் ஹோட்டல்களை நோக்கி......


எந்த அரிசி

எந்த வகையான அரிசியில் தயாரிக்கலாம். ஆரம்ப காலத்தில் நீண்ட ப்ரவுண் அரிசியில் தாயாரித்தார்கள். அதன் பின்னர் சிறிய வெள்ளை அரிசி வகைகளைப் பயன்படுத்தினார்கள். இப்பொழுது பெரும்பாலும் பசுமதி அரிசியைத்தான் பயன்படுத்துகிறோம்.

புதுவருட கரட் வெங்காய பிரியாணி


பசுமதி ரைஸ் - 1 கப்
பெரிய கரட் - 2
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 2
தண்ணீர் - 2 கப்
உப்பு - சுவைக்கு
நெய் - 2 ரீ ஸ்பூன்
ஓயில் - 2 ரீ ஸ்பூன்


வீட்டுத் தயாரிப்புத் தூள்கள்


மிளகாய்த் தூள் - ½ ரீ ஸ்பூன்
மல்லித் தூள் - 1 ரீ ஸ்பூன்
சீரகத் தூள் - ½ ரீ ஸ்பூன்
சோம்புத் தூள் - ¼ ரீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ ரீ ஸ்பூன்

வாசனைக்கு

பட்டை - 2
ஏலம் - 4
பிரிஞ்சி இலை - 1
ரம்பை இலை - 4 துண்டு
பூண்டு இஞ்சி பேஸ்ட் - 2 ரீ ஸ்பூன்


தயாரிப்பு

பசுமதி அரிசியை 15 நிமிடங்கள் தண்ணிரில் ஊற வையுங்கள்.

கரட்டை மெல்லிய சிறிய 1 ½ அங்குல நீள் துண்டுகளாக வெட்டி எடுங்கள்.

வெங்காயம் நீளப் பக்கமாக மெல்லியதாக நறுக்குங்கள்.

மிளகாய் 4 நீள் பகுதிகளாக வெட்டி விடுங்கள்.

ஒரு ரீ ஸ்பூன் நெய்;யை சோஸ்பானில் விட்டு மெல்லிய தீயில் வடித்து எடுத்த அரிசியை 2 நிமிடம் வறுத்து விடுங்கள்.

இரண்டு கப் தண்ணீரை ஊற்றி அவித்து சாதத்தை எடுத்து ஆறவிடுங்கள்.

ஒரு ரீ ஸ்பூன் நெய் ஒரு ரீ ஸ்பூன் ஓயில் தாச்சியில் விட்டு பட்டை, ஏலம், பிறிஞ்சி சேர்த்து பூண்டு இஞ்சி பேஸ்ட் கலந்து வதக்குங்கள்.

பச்சை மிளகாயைப் போட்டு பொரிய விடுங்கள்.

வெங்காயம் கலந்து உப்புப் போட்டு கிளறி, சற்று வதக்குங்கள் கரட் துண்டுகளைச் சேருங்கள்.

வதங்கிய பின் பொடி வகைகள் அனைத்தையும் சேர்த்து கிளறுங்கள். பின் ஆறிய சாதத்தைக் கலந்து நன்கு சேருங்கள்.

பரிமாறும் பாத்திரத்தில் போட்டு வறுத்த கஜீவைத் தூவி விடுங்கள்.
புதுவருடப் பிரியாணி மூக்கைத்துளைத்திடும் உண்பதற்கு தயாராக.


ஏற்கனவே சமைத்து வைத்த பருப்பு, பிரட்டல் கறிகள், சிப்ஸ், சலட், துணையிருக்க சுவைத்திடுங்கள்.


Wednesday, January 4, 2012

எள்ளு உருண்டை



 தமிழ் நாட்டு பாரம்பரிய சமையலில் எள்ளு உருண்டை மிகவும் பிரபலம்.
எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த எள்ளு உருண்டை இது . என் மாமியார் அடிக்கடி செய்து கொடுப்பாங்க..
அவங்க கை பக்குவமே தனி சுவை தான்.. நிறைய பழமையான உணவுகள் எல்லாம் அவங்க செய்வாங்க.. இன்னும் வரும் காலத்தில் நமது பாரம்பரிய சமையல் குறிப்புகளை அவங்க கிட்ட கேட்டு உங்களுக்கு சொல்லித்தருகிறேன்.
நான் முதல் முதலாக அவங்க சொல்லி இந்த உருண்டை செய்தேன்... மிகவும் சுவையாக வந்தது.. நீங்களும் இதன் முறையில் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக்கொள்ளுங்கள் தேவையான பொருட்கள்
ராகி - 100 கிராம்
கருப்பு எள்ளு (அ) வெள்ளை எள்ளு- 250 கிராம்
வேர்கடலை - 250 கிராம்
முந்திரி -  100 கிராம்
சர்க்கரை - 250 கிராம்

 செய்முறை
முதலில் ராகி மாவினை சிறிது தண்ணீர் தெளித்து மாவு பிசைந்து ரொட்டியாக சப்பாத்தி கல்லில் நன்றாக வேக வைத்து எடுக்கவும். இதனை ஆற விடவும்.
வேர்கடலை, எள்ளு, முந்திரியினை வெறும் சட்டியில் லைட்டாக வறுத்து எடுத்து வைக்கவும்,
வேர்கடலையின் தோல்லை நீக்கிவிடவும்.
அனைத்து பொருட்களையும் தனி தனியாக மிக்ஸூயில் அரைத்து வைக்கவும்.
 இவை அனைத்தனையும் வேறு ஒரு பாத்திரத்தில் போடவும். இதனுடம் இடித்த சர்க்கரையினையும் சேர்க்கவும்.. நன்றாக கிண்டவும்
 .
பிறகு இந்த கலவையினை மிக்ஸியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு அரைக்கவும்.
 கொஞ்சம் சிக்கும் கிண்டிவிட்டு அரைக்கவும். நன்றாக எண்ணெய் விடும் வரை அரைக்கவும்.
 (கைகளில் உருண்டை பிடிக்கும் பொழுது இப்படி எண்ணெய் விட்டால் தான் சரியான பக்குவம்)


 பிறகு இந்த கலவையினை சிரு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து சாப்பிடவும்..
சுவையான பழமையான சத்தாண எள்ளு உருண்டை தயார்...
(முன்பு உள்ள காலங்களில் மிக்ஸியில் அரைக்காமல் உரலில் வைத்து இடிப்பார்களாம். இப்ப யாருக்கு உரலில் இடிக்க டைமிருக்கு)